JoomlaLock.com All4Share.net

Background Video

அ..தி.மு.க., சட்ட விதிகளின்படி, கட்சியின் பொதுச்செயலரை, அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விதியை மாற்றவோ, திருத்தவோ முடியாது. இந்த விதி யின்படி பார்த்தால், இன்று நடக்கும் பொதுக் குழுவில், அ.தி.மு.க., பொதுச் செயல ராக, சசிகலாவை தேர்ந்தெடுக்க முடியுமா என்பது கேள்விக்குறி. அ.தி.மு.க., பொதுக்குழு, இன்று சென்னையில் கூடுகிறது.

இதில், கட்சியின் பொதுச்செயலராக, சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற, எதிர் பார்ப்பு எழுந்துள்ளது. பொதுச்செயலராக, சசிகலாவை தேர்ந்தெடுக்க, விதிகளில் திருத்தம் கொண்டு வர தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சசிகலா புஷ்பா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை நிராகரிக்க கோரி, கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தாக்கல் செய்த மனு மீது, தேதி குறிப்பிடாமல் உத்தரவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று பொதுக்குழு கூடுகிறது.

கட்சியின் பொதுச்செயலராகவும், முதல்வராக வும் இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், இந்த பொதுகுழு முதல் முறையாக கூடுகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கை யில் தேர்ந்தெடுக்கப்படுவர். அந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, அந்த மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கைக்கு இணையாக இருக்கும்.

கட்சியின் கொள்கைகள், திட்டங்களை வகுப்பதற் கான அதிகாரம் படைத்தது, பொதுக்குழு. இங்கு எடுக்கப்படும் முடிவு, இறுதியானது; கட்சி உறுப்பினர்களை கட்டுப்படுத்தும். பொதுச்செயலர் தேர்வு பற்றி, அக்கட்சி விதி, 20ல் கூறப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும், அந்தமானிலும் உள்ள, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால், பொதுச்செயலர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். துணைப் பொதுச்செயலர்கள், பொருளாளர், நிர்வாகி களை, பொதுச்செயலர் நியமித்து கொள்ளலாம். Image result for aiadmk images

பொதுச்செயலர் பதவி காலியாகும் பட்சத்தில், அவரால் நியமிக்கப்பட்ட மற்ற நிர்வாகிகள், புதிய பொதுச் செயலர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, பதவியில் நீடிக்கலாம். பொதுச்செயலர் இல்லாத பட்சத்தில், அவருக்குரிய அதிகாரங்களை, துணைப்பொதுச்செயலர் ஏற்று, பொதுச்செயலரின் பணிகளை ஆற்றலாம்.கட்சி அமைப்பு விதிகளில், திருத்தம் கொண்டு வரவோ, நீக்கவோ, பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது;

ஆனால், பொதுச்செயலர் தேர்வைப் பொறுத்தவரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து தான்தேர்ந்தெடுக்க வேண்டும்; அந்த விதியை மாற்ற முடியாது; திருத்தம் செய்யவும் முடியாது. விதி, 43 இதை தெளிவாக கூறுகிறது. எனவே, அ.தி.மு.க., அமைப்பு விதிகளின்படி பார்த் தால், இன்று நடக்க உள்ள பொதுக்குழுவில், கட்சி யின் பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான்.

 இதுகுறித்து, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.சக்திவேல் கூறியதாவது: அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, பொதுக்குழு உறுப்பினர்களால், கட்சியின் பொதுச்செயலரை தேர்ந் தெடுக்க முடியாது; சாதாரண அடிப்படை உறுப்பினர்களால் தான், பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க முடியும்.

பொதுச்செயலர் பதவி காலியாக உள்ளதால், தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில், அடிப்படை உறுப்பினர்கள் பங்கேற்று, தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுக்குழுவுக்கு உச்சகட்ட அதிகாரம் உள்ள தால், பொதுச்செயலருக்கு உள்ள அதிகாரங் களை, யாருக்கு வேண்டுமானாலும் அளிக்கலாம்.

அடுத்த பொதுச்செயலரை தேர்ந்தெடுக்கும் வரை, கட்சியை வழி நடத்தும் அதிகாரம் படைத்தவராக, அவர் செயல்படலாம். முறையாக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படும் வரை, அவரை பொதுச் செயலர் எனக் கூற முடியாது. துணைப் பொதுச்செயலர் பதவி யில் யாரும் இல்லாததால், வேறு நபருக்கு அதிகாரம் வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு, பொதுக்குழு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு சக்திவேல் கூறினார்.

Published in அரசியல்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…