JoomlaLock.com All4Share.net

Background Video

சென்னை, திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் ஜனவரி 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கருணாநிதி தலைமையில் தி.மு.க. பொதுக்குழு 20-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அறிவித்தார். கருணாநிதி பூரண குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இம்மாத இறுதிக்குள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஜனவரி மாதம் 4-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் கடந்த 20-ந்தேதி அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 4-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெறும்.

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட பொதுக்குழு கூட்ட அழைப்பிதழினை இக்கூட்டத்திற்கு வரும்போது தவறாமல் உடன் கொண்டு வரவேண்டும். பொதுக்குழுவில் தி.மு.க. ஆக்கப்பணிகள் மற்றும் தணிக்கைக் குழு அறிக்கை பற்றி விவாதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Published in அரசியல்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…