JoomlaLock.com All4Share.net

Background Video

வெள்ளிக்கிழமை, 09 மார்ச் 2018 00:00

’குக்கரை’ மீட்டார் டிடிவி. தினகரன்

தனது தரப்புக்கு குக்கர் சின்னம் மற்றும் கட்சி பெயர் ஒதுக்க வேண்டும் எனக்கேட்டு டில்லி ஐகோர்ட்டில் தினகரன் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட், உள்ளாட்சி தேர்தலில், தினகரன்தரப்புக்கு குக்கர் சின்னம் மற்றும் அவர் கேட்கும் கட்சி பெயரை ஒதுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தினகரன் நிருபர்களிடம் பேசுகையில்; இது எங்களுக்கு கிடைத்த வெற்றி, பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து இரட்டை இலையையும் மீட்போம் என்றார். அனைவரும் இந்த ஆட்சி வீட்டுக்கு போக வேண்டும் என நினைக்கின்றனர். மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம். தேர்தல் கமிஷன் அளித்தது படி இதனை புதிய கட்சியாக பார்ப்பது அவரவர் பார்வையில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

Published in அரசியல்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…