JoomlaLock.com All4Share.net

Background Video

டிடிவி தினகரன் - விவேக் ஜெயராமன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல நேரிட்ட போது ஆட்சி பொறுப்பை எடப்பாடி பழனிச்சாமியிடமும், கட்சி பொறுப்பை டிடிவி தினகரனிடமும், ஜெயா தொலைக்காட்சி, நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கை, ஜாஸ் சினிமாஸ், போயஸ் கார்டன், கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட அனைத்து வரசு செலவு கணக்குகளையும் இளவரசியின் மகன் விவேக்கிடம் ஒப்படைத்து விட்டு சென்றார் சசிகலா. Image result for dinakaran - sasikala - vivek photos images
 
இங்குதான் பிரச்சனை தொடங்கியது. எல்லாவற்றுக்கும் விவேக்கிடம் போய் நிற்க வேண்டிய சூழ்நிலை தினகரனுக்கு ஏற்பட்டது. 
 
மேலும், நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கை ஆசிரியர் மருது அழகுராஜ் விவகாரத்திலும் தினகரனுக்கும், விவேக்கிற்கும் பிரச்சனை ஏற்பட்டது. தற்போது மருது அழகுராஜ் நமது எம்.ஜி.ஆரிலிருந்து விலகி எடப்பாடி பக்கம் சென்றுவிட்டார். 
 
மேலும், ஜெ. சிகிச்சை வீடியோ வெளியான போது தினகரனுக்கு எதிராக கிருஷ்ணப்ரியா மீடியாவிற்கு பேட்டி கொடுத்த போது, விவேக் அவரை தடுக்கவில்லை என்பது தினகரனின் குற்றச்சாட்டு. மேலும், பெங்களூரை சேர்ந்த அம்ருதா தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, விவேக் ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டார். இதை தினகரன் ரசிக்கவில்லை எனத் தெரிகிறது.
 
நமக்கு துரோகம் செய்த எதிரிகளோடு கூட்டு வைத்துக் கொண்டு செயல்படுகிறார் விவேக். தேர்தல் செலவுக்காக ஒரு பைசாவும் கொடுக்கவில்லை. அதேவேளையில், துரோகம் செய்த அமைச்சர்களுக்கு வாரியிறைக்கிறார்' என சசிகலாவிடம் போட்டுக் கொடுத்திருக்கிறார் தினகரன்.
 
ஆர்.கே.நகர் தேர்தல் செலவுக்காக நண்பர்களிடம் பணம் வாங்கி செலவு செய்து வந்தார் தினகரன். ' பத்துப் பைசாவைக்கூட இவன் கண்ணில் காட்டவில்லை. எதற்கெடுத்தாலும் இந்த சின்னப் பையனிடம் கையேந்தி நிற்பது கஷ்டமாக இருக்கிறது' என சசிகலாவிடம் தெரிவித்தார் தினகரன். ஆனாலும், தேர்தல் செலவுக்கு கார்டன் கஜானா திறக்கப்படவில்லை. ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியான விவகாரத்திலும், தினகரனோடு மோதினார் கிருஷ்ணபிரியா.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு சசிகலாவை சந்திக்கச் சென்ற தினகரனுக்கும் சிறையில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. சிறைக்கு வெளியே பேட்டி அளிக்கும்போதும் சுரத்தில்லாமல்தான் பேசினார் தினகரன். இதையடுத்து, சசிகலாவின் கவனத்துக்கு நீண்ட புகார் கடிதம் ஒன்றை அனுப்பினார் தினகரன். Related image

ஜெயா டி.வி நிர்வாகத்தில் தன்னுடைய குடும்பம் கோலோச்ச வேண்டும் என்பதுதான் திவாகரனின் நோக்கம். தொடக்கத்தில், சசிகலாவிடம் இதுபற்றிப் பேசியபோது, ' அவன் கொஞ்சநாள் பார்க்கட்டும்' என ஒரே வரியில் முடித்துக் கொண்டார். 
 
இப்படி பல விவகாரங்களில் மோதல் ஏற்பட்டதால், சசிகலாவிற்கு விவேக் மீது புகார் தெரிவித்து கடிதம் எழுதினார் தினகரன். ஆனால், சசிகலா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்நிலையில்தான், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று தன்னுடையை இருப்பை நிரூபித்தார் தினகரன். தற்போது, விவேக்கிடமிருந்து அனைத்தையும் பறிக்க வேண்டும் என தினகரன் நினைக்கிறாராம். 
 
இந்நிலையில், சமீபத்தில் சசிகலாவை சந்திக்க விவேக் சென்ற போது, தினகரன் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவரின் கொஞ்சம் பொறுத்துப் போ என சசிகலா கூற கோபத்தின் எல்லைக்கே சென்ற விவேக், நான் என் வேலையை சரியாக செய்து வருகிறேன். இது தினகரனுக்கும் புரியவில்லை. உங்களுக்கும் புரியவில்லை. இனிமேல் நான் ஒதுங்கிக் கொள்கிறேன். எல்லாவற்றையும் தினகரனே பார்த்துக்கொள்ளட்டும் என கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து வந்து விட்டாராம்.
 
தினகரன் - விவேக் மோதல் உச்சத்திற்கு வந்துள்ள நிலையில், சசிகலா குடும்ப நிர்வாகங்களில் சில மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த நிதி போக்குவரத்துகளையும் தினகரன் கையாளப் போகிறார் என்பதுதான் ஹைலைட் ...




Published in அரசியல்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…