JoomlaLock.com All4Share.net

Background Video

2019ம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில் கூட்டாட்சி அணி பொதுக் கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்துகிறார். ஜனவரி 19-ம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் மம்தா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த வகையில் டில்லி வந்த மம்தா பானர்ஜி அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். அப்போது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் உடனிருந்தார்.இருவரையும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து சமாஜ்வாடி எம்.பி.யான ஜெயாபச்சன், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவேகவுடா ஆகியோரை சந்தித்து அழைப்பு விடுத்தார்.

Published in அரசியல்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…