JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகத்தில் ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டி.டி.வி. தினகரன்.  ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தினை முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு கடந்த நவம்பர் 23ந்தேதி தேர்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டது.  இதனால் தேர்தலில் போட்டியிடுவதற்கு தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது.
 
தொடர்ந்து, குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு இரட்டை இலை சின்னத்தினை கைப்பற்றுவோம் என்றும் தினகரன் கூறினார்.
 
இந்த நிலையில் இடைத்தேர்தல் வெற்றிக்கு பின், புதிய கட்சியை தொடங்க உள்ளேன் என்று கூறிய தினகரன், டெல்லி நீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளார்.  தனது கட்சிக்காக மூன்று பெயரை அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பரிந்துரை செய்துள்ளார்.  இதன் மீது நடந்த விசாரணையில், நீதிபதி ரேகா, குக்கர் சின்னமும், பெயரையும் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.
 
இதனை தொடர்ந்து, வருகிற மார்ச் 15ந்தேதி மதுரை மேலூரில் நடைபெற உள்ள விழாவில் தினகரன் தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்து, கட்சி கொடியையும் அறிமுகப்படுத்துகிறார்.
Published in அரசியல்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…