JoomlaLock.com All4Share.net

Background Video

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலோடு தினகரனின் அரசியல் முடிந்துவிடும் என்று நினைத்தார்கள். அங்கு வெற்றி பெற்றது மட்டுமல்ல, அபரிமிதமான வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெற்றுத் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

டி.டி.வி.தினகரனை டெல்லி க்ரைம் பிராஞ்ச் போலீஸார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. அது நடந்து 10 மாதங்கள் முடிந்துவிட்டன. ஆனாலும், அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. கைது செய்யப்பட்ட 10 பேரில் முதல் குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகரைத் தவிர, அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். Image result for dinakaran in prison photos

உச்ச நீதிமன்றம் வரை சென்ற பின்னரும் சுகேஷால் வெளியே வர முடியவில்லை. தன்மீது கோவையில் பல வழக்குகள் உள்ளதால், கோவை சிறைக்குத் தன்னை மாற்ற வேண்டும் என்று தற்போது கோரி வருகிறார். அதன்மீது இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. கால தாமதமாகத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தினகரன் பெயரும் சேர்க்கப்பட்டது. அதன் பின்னரும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இதை நீதிபதியே விசாரணையின்போது பல முறை சுட்டிக்காட்டி, டெல்லி போலீஸாரைக் கண்டித்துள்ளார். அவகாசம் கேட்டுக்கொண்டே இருக்கி றார்கள் டெல்லி போலீஸார். ஜனவரி 12-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், இதே நிலைமை தொடர்ந்தது. ‘வழக்கில் புதிதாக நரேந்திர ஜெயின் என்கிற ஹவாலா ஏஜென்ட்டைக் கைது செய்திருப்பதால் மேலும் அவகாசம் வேண்டும்’ என்று டெல்லி போலீஸார் கேட்டனர். தற்போது, மார்ச் 14-ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.’’

இத்தனை மாதங்களாகியும், தேர்தல் ஆணையத்தில் உள்ள எந்த அதிகாரிக்கு சுகேஷ் மூலமாக தினகரன் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தார் என்பதைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் சொல்ல டெல்லி போலீஸால் முடியவில்லை. இந்தக் குளறுபடிகளால் தினகரன், வழக்கிலிருந்து விடுவிக்கப்படக்கூடும் என்ற அச்சம் அவர்களுக்கு வந்துள்ளது. அதனால் அமலாக்கத் துறை, இப்போது இந்த வழக்கு விசாரணையில் களமிறங்கியுள்ளது.’’

‘‘தினகரனின் நண்பரான மல்லிகார்ஜுனாவை, ஜனவரி 30-ம் தேதி இரண்டாவது முறையாக அமலாக்கத் துறை விசாரித்துள்ளது. அதுமட்டுமல்ல... தினகரனுக்குச் சட்ட ஆலோசனை வழங்கி வந்த பி.குமார் என்ற மூத்த வழக்கறிஞரையும் ஆஜராக ச்சொல்லி அமலாக்கத் துறை அதிகாரிகள் தற்போது சம்மன் அனுப்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவர் ஜெயலலிதா, சசிகலாவுக்காக பல வழக்குகளில் ஆஜராகிவந்தவர்.’’

இரட்டை இலைச் சின்னத்தை மீண்டும் வாங்கு வதற்குப் பணம் கொடுத்த வழக்கின் விசாரணை யில் முன்னேற்றம் இல்லாததால், சென்னை - பெங்களூரு - கொச்சி ரூட்டில் இதற்காக டெல்லிக்கு வந்த இரண்டு கோடி ரூபாய் ஹவாலா பணம் தொடர்பான பணப்பரிமாற்ற விவகாரத்தைத் தீவிரமாக விசாரிக்கிறது அமலாக்கத் துறை.

இந்த முறைகேடான பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டால், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி. அதனால், தினகரன் தரப்பு ஆடிப்போயிருக்கிறது. தினகரனைக் கைது செய்து விசாரிப்பதற்கான திட்டமும் இருப்பதாகத் தகவல் கசிகிறது. அவரின் பயணத்தை முடக்கு வதற்கான முயற்சியாக இதைச் சொல்கிறார்கள்

 

Published in அரசியல்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…