JoomlaLock.com All4Share.net

Background Video

ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பின், கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கும் கட்சியின் நிர்வாகிகளை சமாதானப்படுத்துவதற்காக, மாவட்டம் தோறும் நிர்வாகிகளை சென்னைக்கு வரவழைத்து, கருத்துக் கேட்கிறார், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின். Image result for complaint box in dmk images photos

வெளிப்படையாக அனைவர் முன்னிலையிலும் சில கருத்துக்களைப் பேச முடியாது என்பதால், கருத்துக்களை எழுதி, அதற்கென்றே வைக்கப்பட்டிருக்கும் புகார் பெட்டியில் போடலாம்; அது கவனத்துக்கு வந்துவிடும்; என சொல்லி, புகார் பெட்டி  வைக்க உத்தரவிட்டார் ஸ்டாலின். 

மாவட்டச் செயலர்கள், நகரச் செயலர்கள், ஒன்றியச் செயலர்கள் குறித்துத்தான் மற்ற நிர்வாகிகள் புகார் பெட்டியில் எழுதி போடுகின்றனர். அதை படித்து, சம்பந்தப்பட்டவர்களை போனில் அழைத்து, பிரச்னைகளை தீர்க்க முயல்கிறார் ஸ்டாலின். புகார் பெட்டியில், கோஷ்டி வளர்க்கிறார் ஸ்டாலின் என்ற தலைப்பில், ஒரு கடிதம் இருந்துள்ளது.

அந்தக் கடிதத்தில் ஸ்டாலினை குறிப்பிட்டு எழுதியிருக்கும் நிர்வாகி - தளபதியே, நீங்கள் அப்பா பின்பற்றிய வழியை பின்பற்றுவதாக நினைத்துக் கொண்டு தவறான விஷயத்துக்கு வழி வகுக்கிறீர்கள். முன்பெல்லாம் ஒவ்வொரு மாட்ட தி.மு.க.,விலும் குறைந்தது இரு கோஷ்டிகள் இருக்கும். தஞ்சை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், கோ.சி.மணி, எல்.கணேசன் என இரு கோஷ்டிகள் இருக்கும். அப்போதுதான் கட்சி உயிரோட்டமாக இருக்கும் என தலைவர் சொல்வதை கேள்விபட்டிருக்கிறேன்.

அதே போல கட்சி இருக்க வேண்டும் என நீங்களும் நினைத்து விட்டீர்களோ என்னவோ, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இரு கோஷ்டிகள் கட்டாயம் இருக்கிறது. ஆனால், கட்சி உயிரோட்டமாக இல்லை. இந்த இடத்தில்தான் ஒரு நிதர்சனம் புரிகிறது. உங்கள் அப்பா காலத்தில் இருந்த இரு கோஷ்டிகளுக்குமே தலைவர் அவர்தான். என்னதான் லோக்கலில் பிரச்னை என்றாலும், அறிவாலயத்துக்கு பஞ்சாயத்து என வரும்போது, இரு தரப்பும் அப்பா சொல்வதை கேட்டு சென்று விடும். கோஷ்டிகளை கடந்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எல்லா கோஷ்டிகளும் உழைக்கும். Image result for karunanidhi - stalin black and white photos

தற்போதைய நிலை அப்படியில்லை; ஒவ்வொரு ஊரிலும் உங்களுக்கு ஆதரவு கோஷ்டி ஒன்றும், எதிர்ப்பு கோஷ்டி ஒன்றும் உருவாக்கப்பட்டு விட்டது. அதற்கு முழு காரணம் நீங்கள் தான். சேலத்தை எடுத்துக் கொண்டால், உங்கள் ஆதரவு கோஷ்டியாக பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனும், எதிர்ப்பு கோஷ்டியாக வீரபாண்டி ராஜாவும் செயல்படுகின்றனர்.

உங்கள் ஆதரவு கோஷ்டிக்கு மட்டுமே, நீங்கள் தி.மு.க.,வின் எல்லா நிலைகளிலும் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். அவர்கள் கட்சிக்குள் ஏற்றம் பெறுகிறார்கள். வாய்ப்பில்லாத எதிர் கோஷ்டி, உங்களை எதிர்ப்பது மட்டுமல்ல, கட்சியையே எதிர்த்து வேலை செய்கின்றனர். வீரபாண்டி ராஜா சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததற்கு காரணமே, இப்படிப்பட்ட கோஷ்டி பூசல்தான். அவர்கள், கட்சியைக் கடந்து சிலரை தோற்கடிக்க துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆக, கட்சி எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதை நீங்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். கட்சிக்குள் கோஷ்டி இருக்கலாம்; அது உங்கள் அப்பா ஸ்டைல் கோஷ்டிகளாக இருக்க வேண்டும். இதுதான், உங்களுக்கும் கட்சிக்கும் நல்லது. இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதம், கட்சியின் மேல்மட்டத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தாலும், அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள், ஆழ்ந்து நோக்கப்படுகிறது. இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் கூறின. 

Published in அரசியல்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…