JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகத்தில், ஆன்மிக அரசியலை உருவாக்குவேன் எனக்கூறிய ரஜினி, விரைவில் கட்சி பெயரை அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக, மாவட்ட வாரியாக, பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ள ரஜினி, 'எம்.ஜி.ஆர்., ஆட்சியை தருவேன்' என, அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சினிமா, அரசியல் என, பம்பரமாக சுழன்ற ரஜினி, இன்று இமயமலைக்கு புறப்படுகிறார். விமானம் வாயிலாக, சிம்லா செல்லும் ரஜினி, அங்கிருந்து தர்மசாலா, ரிஷிகேஷ் மற்றும் பாபா குகைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். குகையில், தன் குரு பாபா மற்றும் ஆன்மிக குருக்களிடம் ஆசி பெறுகிறார்.

சமீபத்தில், தன் நண்பர்களுடன் இணைந்து, இமயமலையில் கட்டிய, தியான மண்டபத்திற்கும் செல்லும் ரஜினி, இமயமலையில், ஐந்து நாட்கள் தங்கவும் முடிவு செய்துள்ளார்.

Published in அரசியல்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…