JoomlaLock.com All4Share.net

Background Video

வெள்ளிக்கிழமை, 09 பிப்ரவரி 2018 00:00

நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை

நடிகர் ரஜினிகாந்த் தனி கட்சி தொடங்கி விரைவில் அரசியலில் குதிக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. கட்சி பெயர், கொடி, சின்னம் போன்றவைகளும் தயாராகி வருகிறது. இன்னொரு புறம் ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கையும் நடந்து வருகிறது.
 
ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர்கள் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார்கள். இந்த கூட்டங்களில் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் வீடியோ உரை ஒளிபரப்பப்படுகிறது. வேலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்ட ரசிகர்களுடன் ஆலோசனை கூட்டம் முடிந்து நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
 
இளைஞர் அணி, மகளிர் அணி, வக்கீல் அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.
 
இந்த நிலையில் ரஜினிகாந்த்  சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
 
தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களை நடத்துவது குறித்தும், புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார்.
Published in அரசியல்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…