JoomlaLock.com All4Share.net

Background Video

'நடிகர் கமல் கட்சிக்கு, வெளிநாடுகளில் செயல்படும், கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள், சட்ட விரோதமாக நிதி அளிக்கிறதா' என, விசாரணை கோரி, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

மல்,கமல் கட்சி,வெளிநாட்டு நிதி,போலீஸ்,புகார் ஹிந்து மக்கள் கட்சி யின் மாநில அமைப்புச் செயலர் கணபதி ரவி, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்: நடிகர் கமல்ஹாசன், 'மக்கள் நீதி மய்யம்' என்ற, கட்சியை துவக்கினார். இவரது வீடு, தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ளது. அதை கட்சி அலுவலகமாக மாற்றியுள்ளார். அவரது வீட்டு முகவரியில், 'கிறிஸ்டியன் மீடியா சென்டர்' செயல்படுகிறது. Image result for kamalhasan   images photos stills

மேலும், அவரது, 'மையம்' என்ற இணையதளம், வெஸ்டன் கரிபியன் கடலில் உள்ள, கேமன் தீவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தீவில் தான், கறுப்பு பண முதலைகள் முதலீடு செய்வதாகவும், அங்கு, சர்வதேச அளவில் மோசடி நடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, வெளிநாடுகளில் செயல்படும், கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் வாயிலாக, சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடக்கலாம் என, சந்தேகம் எழுகிறது.

கமல் குடும்பத்தைச் சேர்ந்த, சுஹாசினி - மணிரத்னம் தம்பதியின் மகன் நந்தன், இத்தாலியில் உள்ள, கிறிஸ்தவ கல்லுாரியில், இறையியல் படித்து வருவதாக தகவல்கள் கிடைக்கின்றன. மேலும், அவரது அண்ணன், சந்திரஹாசன், கிறிஸ்தவ மத பிரசார படங்களில் நடித்துள்ளார். அவருக்கு, 'காமன்வெல்த்' நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.

காமன்வெல்த் நாடுகளின் மாநாடு, இங்கிலாந்து ராணியின் தலைமையில் நடக்கும். நடிகர் கமல், தன், 'மருதநாயகம்' பட துவக்க விழாவுக்கு, இங்கிலாந்து ராணியை அழைத்து வந்தார். எனவே, வெளிநாடுகளில் இருந்து செயல்படும், கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள், கமல் வாயிலாக, தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றன.

கமல் வீட்டு முகவரியில் செயல்படும், கிறிஸ்டியன் மீடியா சென்டருக்கும், அவருக்கும் உள்ள தொடர்பு, கேமன் தீவில், அவரது இணையதளம் பதிவு செய்யப்பட்டு இருப்பதன் பின்னணி, சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து விசாரித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளது

Published in அரசியல்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…