JoomlaLock.com All4Share.net

Background Video

கருணாநிதியின் பிறந்தநாள் அன்று அவரை தொண்டர்கள் நேரில் சந்திக்க வேண்டாம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருணாநிதிக்கு மேலும் ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் கண்டிப்பாக அறிவுறுத்தியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Published in அரசியல்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள பசுவதை தடுப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என தமிழக எதிர்கட்சி தலைவர்கள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஸ்டாலின், திருநாவுகரசர், முத்தரசன், ராமகிருஷ்ணன், திருமாவளவன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை,

பசுவதை தடுப்பு சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். உணவுக்கான உரிமையை மத்திய அரசின் முடிவு தகர்த்து எறிகிறது. எதை உண்ண வேண்டும் என சொல்ல அரசுக்கு என்ன அதிகாரம் உள்ளது. மத்திய அரசின் முடிவு ஒற்றை கலாசாரத்தை திணிக்கும் பண்பாட்டு சர்வாதிகாரம். கட்டுப்பாடுகளை ரத்து செய்யாவிட்டால், மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். மத்திய அரசின் முடிவால் ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம். தமிழக அரசு மவுனத்தை கலைத்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளார்.

Published in தமிழகம்

தமிழகத்தில் நீர்நிலைகள் வறண்டு கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. கடந்த 140 வருடங்களில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டமும் மிகவும் குறைந்து விட்டது. இதற்கு மழை பொய்த்தது ஒரு காணம் என்றாலும், நீர் நிலைகளை பேணி பாதுகாக்காததும் முக்கிய காரணம். எனவே தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி தூய்மைபடுத்தும் பணியை திமுக நிர்வாகிகள் செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சென்னையில் அவர் பல குளங்களை தூர்வாரினார்.

அடுத்தகட்டமாக இன்று திருச்சி தென்னூர் கேஎம்சி மருத்துவமனை அருகே உள்ள சிவ விநாயகர் கோயில் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தூர்ந்து கிடக்கும் குளத்தை தூர்வார திமுக முடிவு செய்தது. இந்த பணியை செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

இதற்காக இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவரை முன்னாள் அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான எம்எல்ஏ கே.என்.நேரு தலைமையில்,திமுகவினர் வரவேற்றனர் . இதில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மாநகர செயலாளர் அன்பழகன் எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன் ஸ்டாலின்குமார் முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி  கே.என்.சேகரன் மற்றும் நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் நேரடியாக கோயில் குளத்துக்கு சென்று தூர்வாரும் பணியை தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர் திருச்சியில் சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு மாலை 4 மணிக்கு கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள நாகனூர் செல்கிறார்...

அங்கு நாகனூர் குளம் மற்றும் நந்திப்பட்டி குளம் தூர்வாரும் பணியை பார்வையிடுகிறார்.

அதைத்தொடர்ந்து அவர் கரூர் பிரேம் மகாலில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். அதன்பிறகு அவர் இன்று இரவே சென்னை திரும்புகிறார்...

Published in அரசியல்

சட்டப்பேரவை கூட்டத்தை ஆளுநர் உடனே கூட்ட திமுக வலியுறுத்தி உள்ளது. கருணாநிதியின் சட்டமன்றப் பணி வைரவிழா குறித்து திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கருணாநிதியின் பணிகள் வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டவை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Published in அரசியல்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதும், வராததும் அவரது விருப்பம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் அரசியல் குறித்த சலசலப்பை கிளப்பி விட்டுள்ளார்.

அவர் நடித்துள்ள 2 ஓ படம் விரைவில் வெளியாகத் தயாராகி வரும் நிலையில் மீண்டும் சூட்டைக் கிளப்பியுள்ளார் ரஜினி.

அவரது பேச்சு குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் இன்று மாலை கொளத்தூரில் செய்தியாளர்கள் கேட்டனர். ஆனால் அரசியலுக்கு வருவதும், வராததும் அவரது விருப்பமாகும்.

 

ரஜினி பேச்சு குறித்து தனிப்பட்ட முறையில் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ரஜினி அரசியலுக்கு வந்தால் அதை நாங்கள் வரவேற்போம் என்று கூறினார் ஸ்டாலின்.

Published in தமிழகம்
பக்கம் 1 / 13
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…