JoomlaLock.com All4Share.net

Background Video

ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்'' என புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறினார்.இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இறைச்சிக்காக சந்தையில் மாடுகளை விற்கக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் 'நீட்' தேர்வு அவசியம் இல்லை.

அதை திரும்ப பெற வேண்டும். இதனால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவ படிப்பை தொடர முடியாது. ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அந்த கருத்தை நானும் வரவேற்றேன். குடும்ப நண்பர் என்ற முறையில் நான் ரஜினியை சந்தித்தேன்.

பா.ஜ. ஆட்சி பல மாநிலங்களில் நடக்கிறது. கர்நாடகா மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் சட்டசபை தேர்தல் நடக்கும். அப்போத தமிழகத்தில் பா.ஜ. ஆட்சி அமைக்கும்.

Published in அரசியல்

சொத்து குவிப்பு வழக்கில் தமக்கு 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை மறுசீராய்வு செய்யக் கோரி சசிகலா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பது குறித்து நாளை மறுநாள் தெரிந்துவிடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.

ஜெயலலிதா மறைந்த உடனேயே நிழலில் இருந்து நிஜத்துக்கு வந்தார் சசிகலா. அதிமுகவின் துணைப் பொதுச்செயலராகி டூப்ளிகேட் ஜெயலலிதாவாகவே தம்மை உருமாற்றிக் கொண்டார்.

அத்துடன் முதல்வர் நாற்காலியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்காக அதிமுக எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் கொண்டுபோய் அடைத்து வைத்தார்.

நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தன சசிகலாவின் நடவடிக்கைகள்.

இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா சசிகலா உள்ளிட்டோருக்கான சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் சசிகலாவின் அத்தனை கனவும் தகர்ந்து போய் சிறைக்கு போக நேரிட்டது.

3 மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா திடீரென தமக்கு தண்டனை விதிக்கப்பட்டதை மறுசீராய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டால் அரசியல் களத்தில் மீண்டும் ஒரு ஆட்டம் ஆடிவிடலாம் என கணக்குப் போட்டிருக்கிறார் சசிகலா

சசிகலாவின் மறுசீராய்வு மனு மீது நாளை மறுநாள் அதாவது ஜூன் 3-ந் தேதியன்று விசாரணை நடைபெறும்.

அன்றைய தினம் சசிகலாவின் சீராய்வு மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

அதிமுகவையும் ஆட்சியையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடலாம் என நினைக்கிறார் சசிகலா.

Published in அரசியல்

: போர் வரும் போது பார்த்து கொள்ளலாம் என்ற நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த கருத்தை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

கடந்த 21 ஆண்டுகளாக ரஜினியை அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

எனினும் அவர் ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் அவர் தற்போது கடந்த 5 நாள்களாக ரசிகர்களை சந்தித்து அரசியலுக்கு வருவது குறித்து மறைமுகமாக சில கருத்துகளை தெரிவித்தார்.

இதுகுறித்து அவரது ரசிகர்கள் தெரிவிக்கையில் ரஜினியை நீண்ட நாள்களுக்கு பிறகு சந்தித்ததில் மகிழ்ச்சியாக உள்ளோம். தமிழகத்தில் நடந்து வருவதை உன்னிப்பாக கவனித்து வந்தார்.

பொறுத்து பொறுத்து பார்த்தார். இன்று பொங்கி எழுந்துவிட்டார். முடிவு பண்ணிட்டார். இனி அவருதான் எல்லாமே. அரசியலுக்கு வந்தால் நிரந்தர முதல்வராக இருப்பார் என்றனர் ரசிகர்கள்.

கோடம்பாக்கம் திருமண மண்டபத்தில் கடைசி நாளான நேற்று ரஜினி பேசுகையில் முதல் நாள் நிகழ்ச்சியில் சிலவற்றை பேசினேன். அது இந்தளவுக்கு சர்ச்சையாகும் என்று நினைக்கவில்லை.

இன்னும் பேசிக் கொண்டிருந்தால் அது மேலும் சர்ச்சையாகிவிடும் என்பதால் ஊடக நண்பர்களையும் நான் சந்திக்க முடிவதில்லை என்று ரஜினிகாந்த் கூறினார்.

மேலும் ராஜாக்களிடம் படை பலம் இருக்கும் பெரிய அளவில் இருக்காது. ஆனால் போர் வரும் எல்லா ஆண்களும் சேர்ந்து போரிடுவர். அதுவரை அவரவருக்கான வேலைகளை கடமைகளை செய்து கொண்டிருப்பார்கள். எனக்கும் கடமை இருக்கிறது.

நீங்கள் ஊருக்கு புறப்படுங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள்.

 

Published in அரசியல்

ரஜினி தான் அரசியலுக்கு வருவது குறித்து நேற்று சூசகமான அறிவிப்பு ஒன்றை ரசிகர்கள் சந்திப்பில் போது தெரிவித்தார். 

அவர் அரசியலுக்கு வருவது குறித்து  பலரும் தங்களது  கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் வட்டாரத்தில் ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்துவரும் நிலையில்.

இயக்குனரும் நடிகருமான சேரன் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது... வணக்கம் சார். உங்களை எப்படியும் முதல்வர் ஆக்கியே தீருவார்கள் உங்கள் ரசிகர்கள். காரணம் இப்போதைய அரசியல் சூழல் அதை உருவாக்கும்.

மக்களிடமும் நேர்மை குறைந்துள்ளதால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். 

களவும் ஊழலும் லஞ்சமும் சுயநலமும் நேர்மையின்மையும் சூழ்ந்த இந்த அரசியல் உங்களுக்கு ஒத்துவருமா?

உங்களுக்கு பொய்யே பேசவராதே. கர்நாடகாவை எதிர்க்க வேண்டும் இந்தி திணிப்பை ஆதரிக்ககூடாது இலவசங்கள் கொடுத்தே ஆகவேண்டும் மதுக்கடைகள் மூடக்கூடாது என சவால்கள் நிறைய. நீங்கள் நினைப்பது நடக்கவேண்டுமெனில் மக்களோடு களமிறங்குங்கள் கலந்து பேசுங்கள்.

Published in அரசியல்
செவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00

கலைஞர் திருவாரூர் பயணம்

சென்னையில் இருந்து ரெயில் மூலம் நேற்று இரவு தி.மு.க. தலைவர் கலைஞர் திருவாரூர் புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெறும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அவர் பேசுகிறார்.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், திருவாரூர் தொகுதியில் 2-வது முறையாக தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.

இந்த நிலையில், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று (செவ்வாய்க்கிழமை) திருவாரூர் வருகிறார். இதற்காக, சென்னையில் இருந்து கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் நேற்று இரவு 11.15 மணிக்கு அவர் திருவாரூர் புறப்பட்டார்.

இன்று காலை திருவாரூர் வரும் தி.மு.க. தலைவர் கலைஞருக்கு ரெயில் நிலையத்தில் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு கொடுக்கின்றனர். பின்னர், அவர் சன்னதி தெருவில் உள்ள சகோதரியின் வீட்டில் சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

காலை 10 மணிக்கு திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அரங்கத்தில், தி.மு.க. மாநில இலக்கிய அணி அமைப்பாளர் கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது. இதில், தி.மு.க. தலைவர் கலைஞர் கலந்துகொள்கிறார். மாலை 4 மணிக்கு, தி.மு.க. மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத் தலைவர் 'திண்டுக்கல்' ஐ.லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.

மாலை 6 மணிக்கு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் கலந்துகொண்டு பேசுகிறார். அப்போது அவர், சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த திருவாரூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

Published in அரசியல்
பக்கம் 1 / 6
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…