JoomlaLock.com All4Share.net

Background Video

திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் மற்றும் சட்டசபை வைரவிழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அவர் வசிக்கும் கோபாலபுரம் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. மகள் செல்வி தனது கையால் ஊட்டி விட்ட கேக் சாப்பிட்டு உற்சாகத்துடன் பிறந்தநாளைக் கொண்டாடினார்.

காலை முதலே திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். மு.க.ஸ்டாலின் கனிமொழி தயாநிதிமாறன் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து கூறி ஆசி பெற்றனர். துரைமுருகன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர்.

அவரது மனைவி தயாளு அம்மாள் அமர்ந்திருக்க அவரது மகள் செல்வி கேக் வெட்டி கொண்டாடினார். சிறிதளவு கேக்கை கருணாநிதிக்கும், தயாளு அம்மாளிற்கும் கேக் ஊட்டி விட்டார் செல்வி. பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றனர். இன்னும் வேண்டுமா அப்பா என்று கேட்டு ஊட்டி விட்டார் செல்வி. அனைவரும் கரஒலி எழுப்பினர்.

இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். வைரவிழா நிகழ்ச்சி அழைப்பிதழையும் விழா மலரையும் கருணாநிதி பார்வையிட்டது, சோனியா காந்தியின் கடிதத்தை கேட்டு ரசித்தது வீடியோவாக வெளியான நிலையில் இப்போது பிறந்தநாள் கொண்டாட்டமும் வீடியோவாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

 

Published in அரசியல்

கருணாநிதியின் பிறந்தநாள் அன்று அவரை தொண்டர்கள் நேரில் சந்திக்க வேண்டாம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருணாநிதிக்கு மேலும் ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் கண்டிப்பாக அறிவுறுத்தியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Published in அரசியல்

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி  கடந்த ஆண்டு டிசம்பருக்கு பிறகு கட்சியினர் யாரையும் சந்திக்கவில்லை. இந்நிலையில் ஜூன் 3 ம் தேதி அவரது 94 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா சென்னை, ராயப்பேட்டை ஒய் எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இவ்விழாவில் திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளதாகவும்  இவ்விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும் கலந்த கொள்ள உள்ளதாகவும் திமுக அமைப்பு செயலாளரும் எம்.பி யுமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார பல மாதங்களுக்கு பிறகு தற்போது கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளார்

Published in அரசியல்

தி இந்து ஆங்கில நாளிதழ் தொழிற்சங்க தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கனிமொழி திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் க.அன்பழகன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் வாழ்த்துப் பெற்றார்.

தி.மு.க எம்.பி கனிமொழி தி இந்து ஆங்கில நாளிதழ் தொழிலாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டார். இத்தேர்தலில் 405 வாக்குகள் பெற்று கனிமொழி வெற்றி பெற்றார்.

இதன் மூலம் தி இந்து தொழிற்சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை கனிமொழி பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி கனிமொழி தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்ற புகைப்படம் வெளியாகி உள்ளது.

Published in தமிழகம்

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் 2ஆவது முறையாகப் போட்டியிட்டு 68,366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திமுக தலைவர் மு. கருணாநிதி.

இந்நிலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், தனது 93ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் திருவாரூர் சென்றார்.

அங்கு, மாலையில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருணாநிதி பேசியதாவது: திருவாரூரில் இன்று நடப்பது விழாவா அல்லது மாநாடா என்ற அளவுக்கு எனது மனதில் மகிழ்ச்சி ததும்புகிறது.

இங்கு பேசுவதற்கு உடல்நிலை காரணமாக தொண்டை பேச மறுக்கிறது. தொண்டை மறுத்தாலும் எனது தொண்டை தொடர்ந்து செய்வேன். இந்தத் தேர்தலில் நாம் பெற்றுள்ளது தோல்வி அல்ல. அடுத்த வெற்றிக்கான அஸ்திவாரம்.

1964-ஆம் ஆண்டு தொடங்கி திமுக தேர்தல்களில் நண்பர்களாக இருந்து வெளியேறியவர்களை, துரோகிகளாக சந்தித்து வருகிறது.

அதற்காக எந்த தொண்டரும், கட்சி நிர்வாகியும் சோர்வடையத் தேவையில்லை. தேர்தலுக்காக மட்டும் மக்களைச் சந்திக்கும் அரசியல் கட்சி திமுக அல்ல. அரசியல் மற்றும் தேர்தலை பயன்படுத்தி தமிழ்நாட்டுக்கு, தமிழர்களுக்கு முன்னேற்றத்தை பெற்றுத்தரும் விடுதலை இயக்கமாக திமுக இருந்து வருகிறது.

மத்திய அரசின் செல்வாக்கை பெற்று, பிரதமர் ஆதரவை பெற்று திமுகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அதிமுக எடுத்த முயற்சிக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படவில்லை. ஆளும் கட்சியான அதிமுகவுக்கு ஆதரவு அளித்தார்கள். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைத்து சக்திகளும் செயல்பட்டன.

திமுகவை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஒரு சதவீதம் தவறு இழைத்துவிட்டார்கள். எனினும் அடுத்து வரும் வெற்றிக்கு இந்த விழா அச்சாரமாக அமைந்துள்ளது.

தேர்தலில் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் நமக்கு கிடைத்தது தோல்வி அல்ல, வெற்றிதான்.

வெற்றிக்கான வாய்ப்பு நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. தோல்வி என்ற படிக்கட்டில் ஏறித்தான் வெற்றியை அடைய முடியும் என்று கூறியுள்ளார்.

Published in அரசியல்
பக்கம் 1 / 3
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…