JoomlaLock.com All4Share.net

Background Video

செவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00

கலைஞர் திருவாரூர் பயணம்

சென்னையில் இருந்து ரெயில் மூலம் நேற்று இரவு தி.மு.க. தலைவர் கலைஞர் திருவாரூர் புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெறும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அவர் பேசுகிறார்.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், திருவாரூர் தொகுதியில் 2-வது முறையாக தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.

இந்த நிலையில், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று (செவ்வாய்க்கிழமை) திருவாரூர் வருகிறார். இதற்காக, சென்னையில் இருந்து கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் நேற்று இரவு 11.15 மணிக்கு அவர் திருவாரூர் புறப்பட்டார்.

இன்று காலை திருவாரூர் வரும் தி.மு.க. தலைவர் கலைஞருக்கு ரெயில் நிலையத்தில் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு கொடுக்கின்றனர். பின்னர், அவர் சன்னதி தெருவில் உள்ள சகோதரியின் வீட்டில் சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

காலை 10 மணிக்கு திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அரங்கத்தில், தி.மு.க. மாநில இலக்கிய அணி அமைப்பாளர் கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது. இதில், தி.மு.க. தலைவர் கலைஞர் கலந்துகொள்கிறார். மாலை 4 மணிக்கு, தி.மு.க. மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத் தலைவர் 'திண்டுக்கல்' ஐ.லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.

மாலை 6 மணிக்கு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் கலந்துகொண்டு பேசுகிறார். அப்போது அவர், சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த திருவாரூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

Published in அரசியல்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கன மழையும் கொட்டி உள்ளது. இரவு முதல் விடிய விடிய இடைவிடாமல் பெய்து வரும் மழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது.விமான நிலைய ஓடுபாதையில் மழை நீர் தேங்கியது. இதனால் விமானங்களை குறித்த நேரத்தில் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதே போன்று சென்னைக்கு வரும் விமானங்களும் தரை இறங்க முடியவில்லை. இதனால் 30 விமானங்கள் புறப்படுவதிலும், வருவதிலும் தாமதம் ஏற்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்தி: வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி மற்றும் கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆந்திர கடல் பகுதியை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடலில், காற்று மேலடுக்கு சுழற்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.

Published in தமிழகம்

 பொதுவாக திரை நட்சத்திரங்கள் பலரும் தீவிர உணவுக் கட்டுப்பாட்டை கடை பிடித்து வருகின்றனர்.

அதிலும் பாலிவுட் நடிக, நடிகையர் இந்த விஷயத்தில் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். சிக்ஸ் பேக், ஜீரோ சைஸ் மோகம்தான் இதற்குக் காரணம்.

நடிக, நடிகையர் தீவிர டயட்டில் இருந்தாலும் தங்களுக்கு பிடித்த உணவு என்று வரும்போது சிலநேரம் கட்டுப்பாட்டை மீறி, ஒரு வெட்டு வெட்டி விடுகின்றனர்.

நடிக, நடிகையரின் மனக்கட்டுப்பாட்டை மீற வைக்கும் உணவுகள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

மும்பை: பொதுவாக திரை நட்சத்திரங்கள் பலரும் தீவிர உணவுக் கட்டுப்பாட்டை கடை பிடித்து வருகின்றனர்.

அதிலும் பாலிவுட் நடிக, நடிகையர் இந்த விஷயத்தில் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். சிக்ஸ் பேக், ஜீரோ சைஸ் மோகம்தான் இதற்குக் காரணம்.

நடிக, நடிகையர் தீவிர டயட்டில் இருந்தாலும் தங்களுக்கு பிடித்த உணவு என்று வரும்போது சிலநேரம் கட்டுப்பாட்டை மீறி, ஒரு வெட்டு வெட்டி விடுகின்றனர்.

நடிக, நடிகையரின் மனக்கட்டுப்பாட்டை மீற வைக்கும் உணவுகள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

Published in சினிமா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…