JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகத்தில் அரசு வேலைக்காக 83.33 லட்சம் பேர் வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்திருப்பதாக தமிழக அரசின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வேலைக்காக பதிவு செய்து விட்டு காத்திருக்கும் 83.33 லட்சம் பேரில் 42.72 லட்சம் பேர் பெண்கள், 4.71 லட்சம் பேர் பொறியியல் பட்டதாரிகள், 6.47 லட்சம் பேர் ஆசிரியர்கள், 4.49 லட்சம் பேர் கலை பிரிவினர், 6.07 லட்சம் பேர் அறிவியல் பட்டதாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்ட மேற்படிப்பு முடித்து விட்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் 2.66 லட்சம் பேர் எனவும், பட்ட மேற்படிப்பு முடித்த பெறியியலாளர் 2.31 லட்சம் பேர் என தமிழக அரசின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்போசிஸ் நிறுவன சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி கொலை வழக்கில், ராம்குமார்தான் குற்றவாளி என்பதை நிரூபிக்க வலுவான ஆதாரம் உள்ளது என்று காவல்துறை சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

கொலையாளி என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இவ்வாறு அரசு தரப்பு தெரிவித்தது.

மேலும், ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கால அவகாசம் உள்ளதாகவும், 4 நாள் போலீஸ் காவலில் எடுத்த விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ராம்குமார் கைது நடவடிக்கையில் மர்மம் இருப்பதாக ஊடகங்களில் சந்தேகம் வெளியிடும் நிலையில், காவல்துறை இவ்வாறு கூறியுள்ளது.

Published in தமிழகம்

ரம்ஜான் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி ஒரு மாதம் கடுமையாக நோன்பிருந்து பசித் துன்பத்தை உணர்ந்து, ஏழைகள் மீது இரக்கம் கொண்டு, ஈகைப் பண்பு சிறக்க இஸ்லாமியர்கள் ரம்ஜான் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். அன்பை, அடக்க உணர்வை எளிமையாக போதித்தவர் நபிகள் நாயகம். தொழிலாளியின் வியர்வை உலரும் முன்பு அவன் கூலியைக் கொடுத்து விடு, அநீதி செய்யும் மன்னனை எதிர்த்து போராடு, உணவு தானியங்களை பதுக்கி வைத்து செயற்கை பஞ்சங்களை ஏற்படுத்தாதே, அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்கும்போது நீ மட்டும் சாப்பிடாதே, உன் உழைப்பில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு கொடு என போதித்து மனிதநேயம் வளர்க்க வழிகாட்டியவர். அத்தகைய பெருமகனார் போதித்த நெறியில் வாழ்ந்து, நோன்புக் கடமையை நிறைவேற்றி முடித்து மன நிறைவோடு ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் ரம்ஜான் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாமக நிறுவனர் ராமதாஸ்ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகள். தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏழ்மை, பசிக் கொடுமையை அறிந்து கொள்வதும், உடல் நலத்தை பேணிக்காத்து மனிதர்களை மேம்படுத்துவதும்தான் ரம்ஜான் நோன்பின் சிறப்பாகும். இந்த இனிய நாளில் அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, சகோதரத்துவம் வளர்ந்திட உறுதியேற்போம். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் முக்கியமானது ரம்ஜான் நோன்பாகும். 30 நாட்கள் நோன்பிருந்து அதன் இறுதிநாளில் ரம்ஜான் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். சமூக நல்லிணக்கத்தை கட்டிக்காக்க இந்நாளில் உறுதியேற்போம்.தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் கொண்டாடும் இஸ்லாமியர்கள் வாழ்வில் அன்பும், அறமும் பெருக வேண்டும். அதற்கு அருள் புரிய வேண்டும் என இறையருளை வேண்டுகிறேன். இப்புனித நாளில் நோன்பிருந்து ரம்ஜான் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள். மமக தலைவர் ஜவாஹிருல்லா சமூக நல்லிணக்கம், சகிப்புத்தன்மை போன்ற வேற்றுமையில் ஒற்றுமை காணும் மக்களை பிளவுபடுத்தி சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் தீய சக்திகளிடம் இருந்து நாட்டையும், வீட்டையும் காக்க புனித ரம்ஜான் நாளில் உறுதியேற்போம். அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள். இ.யூ.முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் காதர் மொகிதீன்இஸ்லாமிய மார்க்கத்தில் தீவிரவாதம் என்ற புதியதோர் அம்சத்தை நுழைக்க முஸ்லிம் நாடுகளில் உள்ள தீவிரவாதிகள் முயற்சிக்கின்றனர். இஸ்லாம் மார்க்கம் தீவிரவாதத்துக்கு எதிரானது. உலக மக்கள் அனைவரையும் இறைவனின் நேசர்களாக மாற்ற வழிகாட்டுகிறது இஸ்லாம். இதை உணர்ந்து மார்க்க பரப்புரையை ஒவ்வொரு இஸ்லாமியரும் மேற்கொள்ள வேண்டும். உலகம் அமைதிப் பூங்காவாக திகழ இந்நாளில் உறுதியேற்போம். இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், இந்திய தேசிய லீக் தலைவர் ஜவஹர் அலி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் எஸ்.எம்.இதாயதுல்லா உள்ளிட்டோரும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Published in தமிழகம்

வி.ஏ.ஓ. ஆக ஆசைப்பட்ட என் அண்ணன் வாழ்க்கையை சீரழித்து விட்டனர் என்று ராம்குமார் தங்கை மதுபாலா தெரிவித்து உள்ளார்.சென்னை பொறியாளர் சுவாதி கடந்த மாதம் 24-ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் (22) என்பவரை போலீசார் கடந்த 1-ம் தேதி இரவு கைது செய்தனர்.போலீசார் கைது செய்ய முயன்றபோது ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகளையும் நெல்லைக்கு தனிப்படை போலீசார் அழைத்து வந்தனர். மேலும் ராம்குமாரின் பெற்றோரான பரமசிவன், புஷ்பம், தங்கை மதுபாலா ஆகியோரிடம் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராம்குமாரை கடந்த 3-ம் தேதி நீதிமன்ற அனுமதியுடன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் சென்னைக்கு அழைத்து வந்தனர். அப்போது அவரது பெற்றோர், சகோதரியையும் போலீசார் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனர்.ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட ராம்குமார் குணமடைந்து தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை ராம்குமாரின் தாயார் புஷ்பம், தங்கை மதுபாலா ஆகியோர் மீனாட்சிபுரத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு திரும்பி சென்றனர். ஆனால், ராம்குமாரின் தந்தை பரமசிவன், மற்றொரு தங்கை காளீஸ்வரி ஆகியோர் சென்னையில் தங்கியிருந்து ராம்குமாரை ஜாமீனில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில், இந்த படுகொலை சம்பவம் குறித்து ராம்குமார் சகோதரி மதுபாலா கூறும்போது, ''ராம்குமாருக்கும், சுவாதி கொலைக்கும் சம்பந்தமே இல்லை. போலீசார் எப்படியோ எனது அண்ணனை இதில் சிக்க வைத்துவிட்டனர். அவர் குற்றவாளி இல்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம். சந்தேகத்தின் பேரில் ராம்குமாரை பிடித்து விசாரித்தபோதே இவர்தான் உண்மை குற்றவாளி என்று போலீசார் புகைப்படத்தை வெளியிட்டு விட்டனர். பெண் என்றும் பாராமல், எங்கள் படத்தை வெளியிட்டு குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டனர்.எங்கள் அண்ணன் வி.ஏ.ஓ. தேர்வில் பாஸ் செய்வதற்காக எப்போதும் புத்தகம் படித்து கொண்டுதான் இருப்பார். இப்போது அவரது வாழ்க்கையை சீரழித்து விட்டனர். அவன் உண்மை குற்றவாளி இல்லை என்று விரைவில் தெரியவரும்" என்றார்.

 வி.ஏ.ஓ. ஆக ஆசைப்பட்ட என் அண்ணன் வாழ்க்கையை சீரழித்து விட்டனர் என்று ராம்குமார் தங்கை மதுபாலா தெரிவித்து உள்ளார்.சென்னை பொறியாளர் சுவாதி கடந்த மாதம் 24-ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் (22) என்பவரை போலீசார் கடந்த 1-ம் தேதி இரவு கைது செய்தனர்.போலீசார் கைது செய்ய முயன்றபோது ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகளையும் நெல்லைக்கு தனிப்படை போலீசார் அழைத்து வந்தனர். மேலும் ராம்குமாரின் பெற்றோரான பரமசிவன், புஷ்பம், தங்கை மதுபாலா ஆகியோரிடம் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராம்குமாரை கடந்த 3-ம் தேதி நீதிமன்ற அனுமதியுடன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் சென்னைக்கு அழைத்து வந்தனர். அப்போது அவரது பெற்றோர், சகோதரியையும் போலீசார் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனர்.ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட ராம்குமார் குணமடைந்து தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை ராம்குமாரின் தாயார் புஷ்பம், தங்கை மதுபாலா ஆகியோர் மீனாட்சிபுரத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு திரும்பி சென்றனர். ஆனால், ராம்குமாரின் தந்தை பரமசிவன், மற்றொரு தங்கை காளீஸ்வரி ஆகியோர் சென்னையில் தங்கியிருந்து ராம்குமாரை ஜாமீனில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில், இந்த படுகொலை சம்பவம் குறித்து ராம்குமார் சகோதரி மதுபாலா கூறும்போது, ''ராம்குமாருக்கும், சுவாதி கொலைக்கும் சம்பந்தமே இல்லை. போலீசார் எப்படியோ எனது அண்ணனை இதில் சிக்க வைத்துவிட்டனர். அவர் குற்றவாளி இல்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம். சந்தேகத்தின் பேரில் ராம்குமாரை பிடித்து விசாரித்தபோதே இவர்தான் உண்மை குற்றவாளி என்று போலீசார் புகைப்படத்தை வெளியிட்டு விட்டனர். பெண் என்றும் பாராமல், எங்கள் படத்தை வெளியிட்டு குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டனர்.எங்கள் அண்ணன் வி.ஏ.ஓ. தேர்வில் பாஸ் செய்வதற்காக எப்போதும் புத்தகம் படித்து கொண்டுதான் இருப்பார். இப்போது அவரது வாழ்க்கையை சீரழித்து விட்டனர். அவன் உண்மை குற்றவாளி இல்லை என்று விரைவில் தெரியவரும்" என்றார்.

Published in தமிழகம்

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் 2ஆவது முறையாகப் போட்டியிட்டு 68,366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திமுக தலைவர் மு. கருணாநிதி.

இந்நிலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், தனது 93ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் திருவாரூர் சென்றார்.

அங்கு, மாலையில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருணாநிதி பேசியதாவது: திருவாரூரில் இன்று நடப்பது விழாவா அல்லது மாநாடா என்ற அளவுக்கு எனது மனதில் மகிழ்ச்சி ததும்புகிறது.

இங்கு பேசுவதற்கு உடல்நிலை காரணமாக தொண்டை பேச மறுக்கிறது. தொண்டை மறுத்தாலும் எனது தொண்டை தொடர்ந்து செய்வேன். இந்தத் தேர்தலில் நாம் பெற்றுள்ளது தோல்வி அல்ல. அடுத்த வெற்றிக்கான அஸ்திவாரம்.

1964-ஆம் ஆண்டு தொடங்கி திமுக தேர்தல்களில் நண்பர்களாக இருந்து வெளியேறியவர்களை, துரோகிகளாக சந்தித்து வருகிறது.

அதற்காக எந்த தொண்டரும், கட்சி நிர்வாகியும் சோர்வடையத் தேவையில்லை. தேர்தலுக்காக மட்டும் மக்களைச் சந்திக்கும் அரசியல் கட்சி திமுக அல்ல. அரசியல் மற்றும் தேர்தலை பயன்படுத்தி தமிழ்நாட்டுக்கு, தமிழர்களுக்கு முன்னேற்றத்தை பெற்றுத்தரும் விடுதலை இயக்கமாக திமுக இருந்து வருகிறது.

மத்திய அரசின் செல்வாக்கை பெற்று, பிரதமர் ஆதரவை பெற்று திமுகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அதிமுக எடுத்த முயற்சிக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படவில்லை. ஆளும் கட்சியான அதிமுகவுக்கு ஆதரவு அளித்தார்கள். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைத்து சக்திகளும் செயல்பட்டன.

திமுகவை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஒரு சதவீதம் தவறு இழைத்துவிட்டார்கள். எனினும் அடுத்து வரும் வெற்றிக்கு இந்த விழா அச்சாரமாக அமைந்துள்ளது.

தேர்தலில் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் நமக்கு கிடைத்தது தோல்வி அல்ல, வெற்றிதான்.

வெற்றிக்கான வாய்ப்பு நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. தோல்வி என்ற படிக்கட்டில் ஏறித்தான் வெற்றியை அடைய முடியும் என்று கூறியுள்ளார்.

Published in அரசியல்
பக்கம் 1 / 7
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…