JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அதிமுகவிற்கு தற்போது எடப்பாடி-ஓபிஎஸ் தலைமைக்கு மாற்றாக அமைச்சர் செங்கோட்டையனை கொண்டுவர பாஜக மேலிடம் திட்டம் தீட்டி வருவதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது. Image result for eps- ops-sengottaiyan images photos
 
சசிகலாவின் தயவால் தமிழக முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசின் அறிவுரைப்படி சசிகலா-தினகரன் ஆகியோருக்கு எதிராக செயல்பட தொடங்கினார். ஓ.பி.எஸ்-ஐ தன்னுடன் இணைத்துக்கொண்டாலும் அவருக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. 
 
ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு அவர் கட்டுப்பட்டு நடப்பது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
அரசை பினாமி அரசு என்றும் முதுகெலும்பில்லாத அரசு என்றும் ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
 
இந்நிலையில், தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கும் பாஜகவோ, வரும் தேர்தல்களில் சூழ்நிலைக்கு ஏற்றபடி அதிமுக அல்லது திமுகவோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டிருந்தது. ஆனால், கூட்டணி கதவை ஸ்டாலின் மூடிவிட்டார். காவியை எதிர்ப்போம் என அவர் தொடர்ந்து பேசி வருகிறார். எனவே, ஆன்மீக அரசியலை முன்னெடுத்துள்ள ரஜினி மற்றும் அதிமுகவோடு கை கோர்க்க பாஜக திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. 
 
அதாவது வரும் தேர்தல்களில் அதிமுக-ரஜினி-பாஜக கூட்டணியை உருவாக்க பாஜக திட்டமிட்டிருக்கிறது. அதனால்தான், அதிமுகவின் தலைமை ரஜினி என சமீபத்தில் கூட செய்திகள் வெளியானது. ஆனால், எடப்பாடி-ஒபிஎஸ் இரட்டை தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் ரஜினி, அதிமுக தலைமையை மாற்றுங்கள். அப்போதுதான் தேர்தலில் எடுபடும். அதற்கான வேலையை செய்யுங்கள் என கூட்டணி டீல் பேசிய பாஜக மேலிடத்திற்கு தெரிவித்துள்ளாராம். Image result for eps- ops-sengottaiyan images photos
 
எனவே, ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி ஆகியோரை குறி வைத்து சிபிஐ மற்றும் வருமானவரித்துறை சோதனைகளை நடத்தி  அதிமுக கட்சி மற்றும் மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி, அதன் தொடர்ச்சியாக வேறு தலைமையை நியமித்து, ரஜினியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கலாம் என பாஜக திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
எடப்பாடி -ஓபிஎஸ் இரட்டை தலைமைக்கு மாற்றாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிகிறது. காரணம், அதிமுகவில் சீனியர், ஊழல் வழக்குகளில் சிக்காதவர், அதிமுக கட்சியினரிடையே அவருக்குள்ள மரியாதை என அனைத்தையும் கணக்கு போட்டு அவரை முன்னெடுப்பதற்கான முயற்சியை பாஜக மேலிடம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
கூவத்தூர் விடுதில் அடுத்த முதல்வர் என்ற ஆலோசனையில் சசிகலா இருந்த போது, அவரின் லிஸ்டில் செங்கோட்டையனும் இருந்தார். ஆனால், சிபிஐ சோதனையை சந்திக்கும் நெருக்கடியில் எடப்பாடி பழனிச்சாமி இருந்ததால், பரிதாபத்தின் பேரில் தன்னை போலவே சிக்கலில் இருக்கும் பழனிச்சாமியை சசிகலா தேர்ந்தெடுத்தார் என அப்போது செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது.

கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதற்காக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது.

ஆனாலும், கட்சிகளிடையே ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படாததால் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியபின் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததால், முத்தலாக் மசோதா மீண்டும் கிடப்பில் உள்ளது. எனவே, அவசர சட்டம் மூலம் முத்தலாக் நடைமுறைக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது.

இந்நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

முத்தலாக் வழக்கில் கைதானால் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறலாம், முத்தலாக்கில் கணவன், மனைவி குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க முடியும், முத்தலாக் வழங்கியபின் கணவன்-மனைவி இடையே சமரசம் ஏற்பட்டால் அபராதம் செலுத்தி மீண்டும் சேர்ந்து வாழலாம் ஆகிய மூன்று முக்கிய திருத்தங்களுடன் இந்த அவசர சட்டம் நடைமுறைக்கு வர உள்ளது

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி.டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்து விட்டதாக அப்பல்லோ மருத்துவமனை பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
 
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறப்பட்டது.
 
இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய விசாரணை கமி‌ஷனின் காலம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து மீண்டும் நீட்டிக்கப்பட்டது.
 
நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர், அப்பல்லோ ஆஸ்பத்திரி நர்சுகள், பிசியோதெரபிஸ்ட்கள், டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர், செயலாளர் என அனைத்து தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார். அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
 
விசாரணை கமி‌ஷனில் சசிகலா சார்பில் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் சாட்சியம் அளித்தும் குறுக்கு விசாரணை நடத்தியும் வருகிறார்.
 
அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் மருத்துவ ஆவணங்கள், சிகிச்சை விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
 
ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் உள்ள சி.சி.டி.வி. வீடியோ காட்சிகளை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் சி.சி.டி.வி. காட்சிகள் தங்களிடம் இல்லை என்றும், முக்கிய பிரமுகர்கள் சிகிச்சை பெறும் அறைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைப்பது இல்லை என்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அடிக்கடி கூறி வந்தது.
 
இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது திடீரென்று ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஜெயலலிதா ஜூஸ் குடித்துக் கொண்டே டி.வி. பார்ப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இந்த வீடியோவை தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல் வெளியிட்டார். இந்த வீடியோ கிராபிக்ஸ் செய்யப்பட்டது என்று சந்தேகம் கிளப்பப்பட்டது. ஆனால் சசிகலாவே எடுத்தார் என்று வெற்றிவேல் கூறியிருந்தார்.
 
இதையடுத்து ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்குமாறு நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டார். மேலும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கும் சி.சி.டி.வி. வீடியோ பதிவுகளை ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு கடிதம் அனுப்பினார்.
 
அதற்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் கடந்த 11-ந்தேதி சுருக்கமான பதில் அனுப்பப்பட்டது. அதில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி. டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:-
 
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் உள்ள சி.சி.டி.வி. சர்வர்களில் ஒரு மாத பதிவுகள் மட்டுமே சேமித்து வைக்க முடியும். அதற்கு மேல் சேமிக்க முடியாது. புதிதாக பதிவுகள் சேரும்போது பழைய பதிவுகள் தானாகவே அழிந்து விடும். எனவே வீடியோ பதிவுகளை தாக்கல் செய்யவில்லை.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
 
இதுபற்றி அப்பல்லோ ஆஸ்பத்திரி வக்கீல் மைமூனா பாஷா கூறுகையில், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட சி.சி. டி.வி. வீடியோ பதிவுகளை விசாரணை ஆணையம் கேட்டு இருந்தது. அதற்கு உரிய விளக்கம் அளித்து இருக்கிறோம். அதில் தங்களால் வீடியோ பதிவுகளை சமர்ப்பிக்க முடியவில்லை என்பதை தெரிவித்து இருக்கிறோம். முக்கியமான சில இடங்களில் உள்ள சி.சி. டி.வி. பதிவுகளை 30 நாட்களுக்கு மட்டுமே சர்வரில் சேமிக்க முடியும். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போதும் இந்த நிலைமைதான் இருந்தது என்றார்.
 
இதற்கிடையே அப்பல்லோ ஆஸ்பத்திரி சி.சி.டி.வி. பதிவு சர்வரை நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து அதில் பழைய பதிவுகள் இருக்கிறதா? என்று கண்டுபிடிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.
 
மேலும் முக்கிய பிரமுகர்கள் சிகிச்சை பெறும் பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைப்பதில்லை என்று அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியிருந்தது. இது தொடர்பாக மருத்துவ ஆய்வகங்களிடம் விளக்கம் கேட்டு இருப்பதாக ஆணைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
 
அப்பல்லோ ஆஸ்பத்திரியின் முதன்மை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் விசாரணை கமி‌ஷன் முன் ஆஜராகி ஏற்கனவே விளக்கம் அளித்துள்ள நிலையில் வருகிற 25-ந்தேதி அவர் மீண்டும் ஆஜராகிறார்.
 
அப்போது அவரிடம் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்கிறார்.
 
ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி கமி‌ஷனின் விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அடுத்த மாதம் (அக்டோபர்) அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.
தலைவர் கருணாநிதி கடந்த மாதம் காலமானதை அடுத்து மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பதவியேற்று அக்கட்சியை வழிநடத்தி வருகிறார்.

கருணாநிதி உயிருடன் இருந்தபோது எந்த விழாவானாலும் கருணாநிதியின் படத்தை முதலில் போட்டு போஸ்டர் அடிக்கும் திமுகவினர் தற்போது கருணாநிதியை மறந்து மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து போஸ்டர் அடித்து வருவதாக கூறப்படுகிறது.

உதாரணத்திற்கு சமீபத்தில் திமுகவின் முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம் செய்யப்பட்டார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்துள்ளனர். இந்த போஸ்டரில் மு.க.ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு படங்கள் மட்டுமே உள்ளது. கருணாநிதியின் பெயரோ, படமோ இல்லாதது உண்மையான திமுக தொண்டர்களை வருத்தமடைய செய்துள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
 
 

 
 
 
 
 
 
 

 

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018 00:00

ராகுலின் நெருங்கிய நிர்வாகி ராஜினாமா

 ராகுலின் நெருங்கிய நண்பரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஜய்மாக்கான் தனது கட்சி பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இது ராகுலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2 முறை பார்லி., உறுப்பினராகவும், கடந்த 2012ல் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் அஜய்மாக்கான். பின்னர் காங்கிரஸ் பொதுசெயலராகவும் இருந்தார். பின்னர் கடந்த 2015 ல் டில்லி காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். 
 
இவர் திடீரென டில்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தையும் அவர் ராகுலுக்கு அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில் தனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இருப்பினும் இவரது ராஜினாமாவை ராகுல் இதுவரை ஏற்கவில்லை.

 

 

பக்கம் 1 / 2177
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…