JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்று கூறி மத்திய பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியிலிருந்து சமீபத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் வெளியேறியது. இதனை தொடர்ந்து, கடந்த முறை லோக்சபாவில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் மற்றும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால், அமளி காரணமாக தீர்மானம் எடுத்து கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து, பார்லிமென்ட் மழைகால கூட்டத்தொடரில், பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் முடிவு செய்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

2019-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் அழைப்பை ஏற்று அதிபர் டிரம்ப் வந்தால், கடந்த சில வருடங்களுக்கு பிறகு இரு நாடுகளுக்கிடையே மிகப்பெரிய வெளியுறவு கொள்கை ஏற்படும் எனத் தெரிகிறது.
 
கடந்த ஏப்ரல் மாதமே அமெரிக்க அதிபருக்கு இந்தியா தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் பதிலை இந்தியா எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதனிடையே அதிபர் டிரம்ப் இந்திய அரசின் அழைப்பு குறித்து பரிசீலித்து வருவதாகவும், அவர் கலந்து கொள்வதற்காக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
கடந்த 2015ஆம் ஆண்டு மோடி தலைமையில் முதல் முறையாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமா பங்கேற்றது போல், தற்போது டிரம்ப்பும் பங்கேற்றால் இரு நாடுகளுக்கிடையே அதிகபடி ஒப்பந்தங்கள் உறுதியாகும் என நம்பப்படுகிறது.
 
மேலும் வர்த்தக ரீதியான உடன்பாடுகள், ஈரான் விவகாரம் போன்றவற்றால் இந்தியா, அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குடியரசு தின விழாவில் அதிபர் டிரம்ப்புக்கான அழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 
சிலை கடத்தலை தடுக்க கோரி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன்  என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் நீதிபதி  மீண்டும் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
 
2021-க்குள் 3000 கோவில்களில் பாதுகாப்பு அறைகள் கட்டப்படும் என ஐகோர்ட்டில் இன்று  அறநிலையத்துறை பதில் மனு தாக்கல்  செய்தது
 
இந்த வழக்கில் இன்று நீதிபதி மகாதேவன் கூறியதாவது:-
 
கோயில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் கட்ட 2021 வரை அவகாசம் அளிக்க முடியாது. 2021 ஆம் ஆண்டு வரை அவகாசம் தந்தால் எஞ்சியுள்ள சிலைகளும் திருடப்படும். காவல்துறையுடன் ஆலோசித்து பாதுகாப்பு அறைகளை விரைவாக கட்டி முடிப்பது பற்றி அறிக்கை வேண்டும். பாதுகாப்பு அறைகள் அமைப்பதற்கான காலக்கெடுவை மாற்றி அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
 
சிலைகளுக்கான பாதுகாப்பு அறை விவகாரத்தில் மெத்தனம் தொடர்ந்தால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என கூறி உள்ளார். 

பின்லாந்து நாட்டின் டம்பெரி நகரில் சர்வதேச தடகள கழகத்தின் (ஐஏஏஎப்) சார்பில், 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன்ஸ் போட்டி ஜூலை 10 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கம் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஐஏஏஎப் ஜூனியர் சாம்பியன்ஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை 18 வயதாகும் ஹிமா தாஸ் பெற்றுள்ளார். இதற்கு முன் 2002 ல் சீமா புனியாவும், 2014 ல் நவஜீத் கவுர் தில்லானும் மட்டுமே இந்தியா சார்பில் வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளனர்.

ஹிமா தாஸ் பந்தய இலக்கை 51.46 விநாடிகளில் அடைந்துள்ளார். இந்த போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் ஹிமா புதிய வரலாறு படைத்துள்ளார். இவருக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை, 12 ஜூலை 2018 00:00

பட்டாசு மத்தாப்பு விலை உயர்கிறது

மூலப்பொருட்களின் விலை உயர்வால், மத்தாப்பு விலை, 35 சதவீதம் வரை உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், 30க்கும் மேற்பட்ட கம்பி மத்தாப்பு தயாரிப்பு (ஸ்பார்க்லர்ஸ்) ஆலைகள் உள்ளன. மத்தாப்பு தயாரிக்க, அலுமினியம் பவுடர், பேரியம் நைட்ரேட் (பச்சை உப்பு), ஈயம் பூசப்பட்ட கம்பிகள் தேவை. இப்பொருட்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

இதனால், மத்தாப்புகள் விலை, 35 சதவீதம் வரை உயரும் வாய்ப்பு உள்ளது.'பட்டாசு தடை கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், வட மாநில வியாபாரிகள் கொள்முதல் செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.'இதனால், மற்ற வியாபாரிகள் அடக்க விலையை விட குறைத்து கேட்கின்றனர். அதிகமாக இருப்பு வைக்க முடியாததால், நஷ்டத்திற்கு விற்கிறோம்' என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.

'ரூபி ஸ்பார்க்லர்' ஆலை உரிமையாளர், ராஜப்பன் கூறியதாவது:சென்ற ஆண்டு கம்பிகள் விலை, 1 டன், 55 ஆயிரம் ரூபாய்; தற்போது, 85 ஆயிரம் ரூபாய். அலுமினிய பவுடர் விலை, 1 கிலோ, 200ல் இருந்து, 275; பேரியம் நைட்ரேட், 55ல் இருந்து, 67 ஆக உயர்ந்துள்ளதால், மத்தாப்புகள் விலை உயரும். குழந்தைகள் விரும்பும்மத்தாப்புகள் முன்னர் குறைந்த விலையில் கிடைத்தன.

மூலப்பொருட்களின் விலை உயர்விற்கான காரணத்தை கண்டறிந்து, பட்டாசு பாதுகாப்பு தொழிற்சங்கங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பக்கம் 3 / 2091
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…