JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தனது 17 வயது முதல் ஐந்து முறை முயற்சித்தும் ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்து தற்கொலை செய்து கொண்டார்.  இதனை 2,750 பேர் பார்த்த போதும், போலீசுக்கு தகவல் அளிக்கவில்லை.
 
உத்தரபிரதேச  மாநிலம், நியூ ஆக்ரா பகுதி சாந்தி நகரை சேர்ந்தவர் முன்னா குமார் (24). பி.எஸ்.சி., பட்டதாரியான இவர் ராணுவத்தில் சேர ஐந்து முறை முயற்சி செய்தார். அனைத்தும் தோல்வியில் முடிந்தது. 
 
இதனால், விரகதியடைந்த அவர், பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 1:09 நிமிடங்கள் ஒளிபரப்பான அந்த வீடியோவை 2,750 பேர் பார்த்த போதும், இது குறித்து போலீசையோ முன்னா குமாரின் குடும்பத்தினரையோ உஷார்படுத்தவில்லை. தனது தற்கொலை குறித்து வாலிபர், 6 பக்க கடிதம் எழுதிவைத்துள்ளார்.அதில் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு உள்ளார்.

ரஷியாவில் நடந்து வரும் 21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் இன்று நடந்த 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, குரோஷியாவை எதிர்கொண்டது.

ஆக்ரோஷமாக விளையாடக்கூடிய அணிகளில் ஒன்றான குரோஷியா லீக் சுற்றில் நைஜீரியா, அர்ஜென்டினா, ஐஸ்லாந்து ஆகிய அணிகளை வென்றது. 2-வது சுற்றில் டென்மார்க்கையும், கால்இறுதியில் ரஷியாவையும் வெற்றிகொண்டது.

அதேபோல், 28 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதிக்கு தகுதி பெற்றிருக்கும் இங்கிலாந்து அணி லீக் சுற்றில் துனிசியா, பனாமா அணிகளை தோற்கடித்து பெல்ஜியத்திடம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு 2-வது சுற்றில் கொலம்பியாவையும், கால்இறுதியில் சுவீடனையும் வென்றது.Croatia’s Mario Mandzukic celebrates scoring their second goal with team-mates.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரைஇறுதிப்போட்டியில் இரு அணிகளும் பரபரப்பாக மோதிக் கொண்டன. இதில் ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்திலே இங்கிலாந்து வீரர் கிரெய்ன் டிரிப்யேர் முதல் கோல் அடித்து அசத்தினார். இதனை சமன் செய்ய குரோஷியா அணியினர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியின் 68-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமன் ஆனது. அதைத்தொடர்ந்து நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இரு அணியினராலும் கோல் போட முடியவில்லை.

இதனால் இரண்டாவது பாதி ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன் மூலம் மேலும் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் குரேஷியா வீரர் மாரியோ 1 கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். இதனால் குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வெற்றிபெற்று இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது. 

2-வது முறையாக அரைஇறுதிக்குள் (இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு) நுழைந்த குரோஷிய அணி முதல்முறையாக இறுதிசுற்றை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை, 11 ஜூலை 2018 00:00

ஈஷாவின் வனக்கொள்ளை அம்பலம்

சத்குரு ஜக்கி வாசுதேவ் ஈஷா யோகா மையத்திற்கான கட்டடங்கள் கட்டுவதற்காக கோவை வனப்பகுதியில் அரசு அனுமதியின்றி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரித்துள்ளது அம்பலமாகியுள்ளது.  
 
கோவை மாவட்ட எல்லையில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சத்குரு ஜக்கி வாசுதேவால் ஈஷா யோகா மையம் அமைக்கப்பட்டது. 
 
இந்த யோகா மையம் அரசின் அனுமதி பெறாமல் வனத்தை ஆக்கிரமித்து கட்டியிருப்பதாக சிஏஜி குற்றம்சாட்டியுள்ளது. அந்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஷா அறக்கட்டளை பூலுவாப்பட்டி கிராமத்தில் 32,856 சதுர அடி பரப்பளவில் பல கட்டடங்களை கட்ட கிராமப்புற பஞ்சாயத்து அனுமதி பெற்றுள்ளது. 
 
இது 1994 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மலை பாதுகாப்பு குழுவிடமிருந்து இதுதொர்பாக தடையில்லா சான்றிதழ் பெறாமலேயே இந்த கட்டடங்களை கட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

 கர்நாடக மநிலம் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 45,000 கனஅடியில் இருந்து 50,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கபினியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு இன்று ஒரே நாளில் 3வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காலையில் 38,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் பிற்பகலில் 45,000 கனஅடியாகவும், மாலையில் 50,000 கனஅடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனால் விரைவில் மேட்டூர் அணை திறக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணை 70 அடியை எட்டியது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டியது. இன்று காலை 68.12 அடியாக இருந்த அணைக்கு, நீர்வரத்து, 32,884 கன அடியாக அதிகரித்ததால், நீர்மட்டம் உயர்ந்தது. கபினி அணையிலிருந்து 50 ஆயிரம் கன அடி திறக்கப்படுவதால், நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இலங்கையில் நடந்த இறுதி போரில் விடுதலைப்புலிகளின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டார். இதை மையமாக வைத்து சாட்சிகள் சொர்க்கத்தில் என்ற படம் தயாராகி உள்ளது. இந்தப் படத்தை இலங்கையில் திரையிட அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. அதோடு தணிக்கை சான்றிதழும் மறுத்துள்ளது. Image result for sri lankan tamil film saatsikal sorgathil banned photos images

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஈழன் இளங்கோ கூறியதாவது:விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட முழுநீள திரைப்படம் சாட்சிகள் சொர்க்கத்தில்.

இப்படத்தில் ஈழத்தில் நடந்த கொலை சம்பவங்களோ, சித்திரவதை காட்சிகளோ, இறுதிப்போரில் நடந்த சம்பவங்களோ சித்தரிக்கப்படவில்லை. இறுதிப்போரில் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் முகாம்களில் மற்றும் சமுதாயத்தில் வாழும் மக்களின் சோகக்கதைகள் மற்றும் சம்பவங்கள் இப்படத்தில் காட்சியாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இப்படத்தை திரையிடும் முயற்சியில் தணிக்கை பெறுவதற்காக இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருக்கும் தணிக்கை குழுவிடம் விண்ணப்பிக்கப்பட்டது, இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்தை இலங்கையில் திரையிட தடை விதித்துவிட்டனர்."படத்தில் வரும் செய்திகளும், துணைக்கதைகளும், பல இடங்களில் வரும் வசனங்களும், ஒரு பாடலும், மிகவும் உணர்ச்சிகரமாகவும் இலங்கை அரசாங்கத்திற்கும் அரச படையினருக்கும் எதிராகவும் உள்ளது.

இத்திரைப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதித்தால் பல சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன" என்று கூறிவிட்டனர். இது எனக்கும், சக கலைஞர்களுக்கும், காத்திருந்த ரசிகர்களுக்கும், உணர்வாளர்களுக்கும் ஏமாற்றத்தையும் மன உளைச்சலையும் தந்திருக்கிறது.

பக்கம் 5 / 2091
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…