JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அதிக நுகர்வு காரணமாக, ஒன்பது மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.பொதுப்பணி துறையின் கீழ், மாநில, நில மற்றும் மேற்பரப்பு நீர்வள விபரக் குறிப்பு மையம் இயங்குகிறது. இப்பிரிவு வாயிலாக, சென்னையை தவிர்த்து, பல மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டத்தை கண்காணிப்பதற்காக, ஆய்வு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாதந்தோறும் நிலத்தடி நீர்மட்டம் குறித்து, இங்கு ஆய்வு செய்யப்படுகிறது. சமீபத்தில் நடத்திய ஆய்வில், செப்டம்பர் மாதம், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கடலுார், விழுப்புரம், தஞ்சாவூர், பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. 

தென் மேற்கு பருவமழை, இம்மாவட்டங்களுக்கு கைகொடுக்கவில்லை. பாசனம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு, அதிக நுகர்வு காரணமாகவே, இந்த மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. 

அதிகபட்சமாக, திருவண்ணாமலையில், 2.77 மீட்டர்; விழுப்புரத்தில், 1.44 மீட்டர் வரை, நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. அதேநேரத்தில், கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. தென் மேற்கு பருவமழை, இம்மாவட்டங்களில் அதிகளவில் பெய்ததே, இதற்கு காரணம்.

இந்தியாவில் எந்த இணையதள முடக்கமும் ஏற்படாது என அரசு உயர்மட்ட சைபர் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். 
'அடுத்த, 48 மணி நேரத்துக்கு, இணையதளம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும், 'சர்வர்'களில், பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், சர்வதேச அளவில், 'இன்டர்நெட்' பயன்படுத்துவது, சிக்கலானதாக இருக்கும்' என கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இது தொடர்பாக தனியார் ஆங்கில டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் குல்ஷன் ராய், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் மீடியாக்களில் கூறப்பட்டது போல் இந்தியாவில் எந்த இணையதள முடக்கமும் ஏற்படாது என்றார்.

இணையதளத்தை நிர்வகிக்கும் ஐ.சி.ஏ.என்.என்., எனப்படும், 'தி இன்டர்நெட் கார்ப்பரேஷன் ஆப் சைன்டு நேம்ஸ் அண்டு நம்பர்ஸ்' அமைப்பு கூறுகையில், துரதிஷ்டவசமாக இந்த தகவல் தலைப்பு செய்தி அளவிற்கு பெரிதாக்கப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு பணி காரணம் மிகக் குறைந்த அளவிலான இணையதள பயன்பாட்டாளர்களுக்கே பாதிப்பு ஏற்படும். 99 சதவீதத்திற்கு அதிகமான பயன்பாட்டாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. பாதிப்பு என்பது சிறிய அளவிலேயே இருக்கும். அதுவும் விரைவாக சரிசெய்யப்பட்டு விடும் என தெரிவித்துள்ளது.

 

 

சனிக்கிழமை, 13 அக்டோபர் 2018 00:00

உருவாகிறது தேவர் மகன்- 2

தமிழில் இப்போது 2 - ம் பாகம் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சூர்யாவின் சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் வெளிவந்துள்ளன. விக்ரமின் சாமி படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் திரைக்கு வந்தது. கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகமும் வந்தது. ரஜினிகாந்த் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் நடித்துள்ளார். இது நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது. 
 
விஷால் சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். சதுரங்க வேட்டை இரண்டாம் பாகமும் தயாராகி உள்ளது. நடிகர் கமல்ஹாசனும் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து இயக்குவது பற்றி ஆலோசிப்பதாக தகவல் கசிந்தது. தற்போது அதை கமல்ஹாசன் உறுதி படுத்தியுள்ளார். இன்று ஒரு விழாவில் கலந்துக் கொண்ட கமல்ஹாசன், ரசிகர்கள் முன்னிலையில், தேவர் மகன் 2ம் பாகம் உருவாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
 
தேவர்மகன் முதல் பாகம் 1992–ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இதில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி நடித்து இருந்தனர். இந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன. 
 
சங்கர் இயக்கத்தில் இந்தியன் - 2 படத்தில் நடிக்கிறார் கமல். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்க உள்ளது. இந்த படத்தோடு தேவர் மகன் - 2 படப்பிடிப்பையும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 
தி.மு.க.வில் செல்வாக்குமிக்கவராக இருந்தவர் பரிதி இளம் வழுதி, 58 கடந்த,1996-2001-ம் ஆண்டுகளில் தமிழக சட்டசபை துணை சபாநாயகராகவும், 2006-11-ம் ஆண்டுகளில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும் இருந்தார். பின்னர் அக்கட்சியில்இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். 6 முறை தமிழக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார். நேற்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து இன்று சென்னையில் காலமானார்.

 

பா.ஜ., அதிருப்தி தலைவர், சத்ருகன் சின்ஹா, அடுத்த லோக்சபா தேர்தலில், வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ.,வை சேர்ந்த மூத்த தலைவரும், நடிகருமான, சத்ருகன் சின்ஹா, கட்சியில் தனக்கு முக்கியத்துவம் கிடைக்காததால், பா.ஜ.,வையும், பிரதமர் நரேந்திர மோடியையும், விமர்சித்து வருகிறார்.

சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: பா.ஜ., அதிருப்தி தலைவர் சத்ருகன் சின்ஹா, அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், உ.பி., மாநிலம், வாரணாசி தொகுதியில், சமாஜ்வாதி கட்சி சார்பாக போட்டியிடும் வாய்ப்புஉள்ளது. வாரணாசியில், சத்ருகன் சின்ஹா சார்ந்த, காயஸ்தா சமூகத்தினரின் ஆதரவு, அவருக்கு கிடைக்கும். எனவே அவரை, சமாஜ்வாதி சார்பில் போட்டியிட வைக்க, பேச்சு நடக்கிறது. விரைவில் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

கடந்த, 2014ல், வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இரண்டாம் இடம் பிடித்தார். வரும் லோக்சபா தேர்தலில், கெஜ்ரிவால் ஆதரவை பெறுவதற்கான பேச்சிலும், சமாஜ்வாதி தலைவர்கள் ஈடுபட்டு உள்ளனர். இவ்வாறு, சமாஜ்வாதி வட்டாரங்கள் கூறின.

பக்கம் 6 / 2215
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…