JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான நேற்று, புதுக்கட்சி அறிவிப்பை வெளியிட திட்டமிட்டிருந்த, தினகரனுக்கு, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முடிவை, அவர் கைவிட்டார். 

ஆர்.கே. நகரில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன், வெற்றி பெற்றதும், அவரது தலைமையை ஏற்று, அ.தி.மு.க.,வினர் அணிவகுப்பர் என, எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் செல்லவில்லை.உள்ளாட்சித் தேர்தலை, ஏப்., மாதத்திற்குள் நடத்தி முடித்து, கட்சியினரை பதவிகளில் அமர்த்த, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளனர்.

அதனால், அவர்களில் யாரும், தினகரன் பக்கம் சாய்வதாக தெரியவில்லை. இந்நிலையில், தினகரன், 'உள்ளாட்சித் தேர்தலில், நாங்கள் தான் வெற்றி பெறுவோம்; புதுக்கட்சி அறிவிப்பை, எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் வெளியிடுவோம்' என, நேற்று முன்தினம் அறிவித்தார்.அவரது தன்னிச்சையான அறிவிப்பு, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தினகரனை ஆதரித்ததால், எம்.எல்.ஏ., பதவியை இழந்துள்ள, அந்த, 18 பேரும், உயர் நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், இன்னும் முடிவு வரவில்லை; சாதகமாக தீர்ப்பு வந்து விட்டால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக, நீடிக்க முடியும் என்பதால், அவர்கள், புதுக்கட்சி முடிவை விரும்பவில்லை.

இந்நிலையில், தினகரன் ஆதரவாளர், தங்கதமிழ்ச்செலவன் கூறுகையில், ''தினகரனின் புதுக்கட்சி அறிவிப்பு பற்றி, எந்த தகவலும் எங்களுக்கு தெரியாது. நாங்கள் வெளி யிலிருந்து ஆதரிப்போம்,'' என்றார்.அவரின் கருத்துக்கு, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க் களில், ஐந்து பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், தினகரன், மாநில மகளிர் அணி பதவிக்கு, ராஜ்யசபா, எம்.பி., ஒருவரையும், மாநில வழக்கறிஞர் அணி பதவிக்கு,முன்னாள், எம்.எல்.ஏ., ஒருவரையும் நியமிக்க, தினகரன் முன்வந்துள்ளார். ஆனால், அப்பதவிகளை ஏற்க, அவர்கள் மறுத்துள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த தினகரன், தற்போது, புதுக்கட்சி துவக்கும் முடிவையே கைவிட்டு விட்டார்.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில், மகர சங்கராந்தி பண்டிகையின் போது, சேவல் சண்டை நடப்பது வழக்கம். கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட மாவட்டங்களில், சேவல் சண்டை மிகவும் பிரபலம். உச்ச நீதிமன்றம் சேவல் சண்டை நடத்த தடை விதித்தாலும், தடையை மீறி, இங்குள்ளவர்கள் இதை நடத்தி வருகின்றனர். 

அதன்படி, நேற்று முன்தினம், ஆந்திராவின் பல பகுதிகளில் சேவல் சண்டை நடந்தது. சேவல்களின் கால்களில் கத்தியை கட்டி, பந்தயம் நடத்தினர். இதில், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், தொழிலதிபர்கள், நடிகை, நடிகர்கள் என, பலர் பங்கேற்றனர். 500 ரூபாயில் துவங்கிய பந்தயம், 50 லட்சம் ரூபாய் வரை நீண்டது. நேற்று முன்தினம் மட்டும் நடந்த சேவல் சண்டையில், 400 கோடி ரூபாய் பந்தயமாக கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருச்சி கம்பரசம்பேட்டையை அடுத்த பழுர் பகுதி காவிரி ஆற்றில், இன்று மாலை 6 மணிக்கு பொது மக்கள் குளிக்கும் போது, 2 அடி உயரமுள்ள உலோகத்தாலான சரஸ்வதி சிலை கண்டெடுத்தனர்.

ஸ்ரீரங்கம் தாசில்தார் சண்முகம் மற்றும் ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் சிலையை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்ஆப்பிரிக்கா-இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில் தென் ஆப்பிரிக்க அணியின் 2-வது இன்னிங்சில் 25-வது ஓவரில் நடுவர் மிச்செல் கோக்கிடம், இந்திய அணி கேப்டன் விராட்கோலி வாக்குவாதம் செய்தார்.

அவுட் பீல்டு ஈரப்பதமாக இருப்பதால் பந்து சேதம் அடைந்து இருக்கிறது. எனவே பந்தை மாற்ற வேண்டும் என்று விராட்கோலி நடுவரிடம் முறையிட்டார். ஆனால் பந்தை மாற்ற நடுவர் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த விராட்கோலி பந்தை மைதானத்தில் தூக்கி எறிந்தார்.

இந்த சம்பவம் குறித்து நடுவர்கள் அளித்த புகாரை விசாரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விராட்கோலி நடுவரை அவமரியாதை செய்ததை உறுதி செய்தது. இதனை அடுத்து விராட்கோலிக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதத்தை அபராதமாக விதித்தது. அத்துடன் அவருக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டது. 

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் உ.பி. மாநில போலீஸ் திடீர் சோதனையில் ஈடுபட்டது. கான்பூர் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில் ரூ. 100 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக சிலரை பிடித்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
   
அரசு அதிகாரி பேசுகையில், “கான்பூரில் குடியிருப்பு பகுதியில் பழைய ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆர்பிஐ மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் சோதனை நடத்தப்பட்டது,” என்று கூறினார். 
 
இதில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து வருகிறோம் என போலீஸ் கண்காணிப்பாளர் ஏகே மீனா பேசிஉள்ளார். 
 
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக நாட்டில் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. 1,716.5 கோடி 500 ரூபாய் நோட்டுக்கள், 685.8 கோடி 1000 நோட்டுக்கள் என ரூ. 15.44 லட்சம் கோடி மதிப்பிலான பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்டது. மத்திய ரிசர்வ் வங்கி 2016-17-ம் ஆண்டுக்கான ஆண்டறிகையை வெளியிட்ட போது மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99 சதவிதம் அதாவது ரூ. 15.28 லட்சம் கோடி வங்கிக்கு வந்துவிட்டது என தெரிவித்தது.
பக்கம் 7 / 1832
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…