JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சாரதா சிட்பண்டு மோசடி வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி, மீது கோல்கட்டா கோர்ட்டில் சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், கிரிமினல் சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்ய சிபிஐக்கு சிறப்பு கோர்ட் தடை விதித்துள்ளது. இந்நிலையில், இந்த தடையை பிப்.,1 வரை நீட்டித்து பாட்டியாலா சிறப்பு கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள், 2018, நவம்பரில், இந்திய வங்கிகளில் செய்த டெபாசிட், 415 கோடி டாலர் அதிகரித்து, 12 ஆயிரத்து, 568 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, அக்டோபரில், 12 ஆயிரத்து, 153 கோடி டாலராக இருந்தது. 

பெரும்பான்மையான டெபாசிட், என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாடுகளில் வாழ்வோருக்கான சேமிப்பு கணக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கணக்கில், வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் டாலர், இந்திய ரூபாயாக மாற்றப்பட்டு, வரவு வைக்கப்படும். இந்த டெபாசிட்டுக்கு, உள்நாட்டு வட்டி விகிதம் பொருந்தும். எனினும், அன்னியச் செலாவணியில் ஏற்படும் மாற்றங்கள் தான், முதலீட்டின் மீதான வருவாய் உயரவும், குறையவும் காரணமாக இருக்கும்.

கடந்த ஆண்டு, செப்., 10ல், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத வகையில், 74.39 ஆக சரிவடைந்தது. இது, நவம்பரில், 69.58 ஆக உயர்ந்தது. ஆக, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பில், நவம்பரில் வெளிநாடு வாழ் இந்தியரின் டெபாசிட் உயர்ந்து உள்ளதாக தெரிகிறது.

ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் முதல் நாள் வசூல் நிலவரங்கள் என்னவென்று வெளியாகியுள்ளது.

உலகமெங்கும் நேற்று (ஜனவரி 10) 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் வெளியாகின. ரஜினி, அஜித் ரசிகர்கள் இதனை திருவிழா போல கொண்டாடி மகிழ்ந்தார்கள். சில இடங்களில் மோதலும் நடைபெற்றது.

இரண்டில் யார் வெற்றி, எது வசூலில் அதிகம் என்று ரஜினி - அஜித் ரசிகர்கள் கடும் போட்டியிட்டு வருகிறார்கள். இதே கேள்வியை இப்படங்களை வாங்கி வெளியிட்டுள்ள சில முன்னணி விநியோகஸ்தர்களிடம் முன்வைத்தோம். அவர்கள் கூறிய பதில்களின் தொகுப்பு:

இரண்டு படமுமே நல்ல விதமாக போய் கொண்டிருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை 'பேட்ட' படத்தின் வசூல் 1 கோடியைத் தாண்டியுள்ளது. 'விஸ்வாசம்' வசூல் 1 கோடிக்குள் தான் வந்துள்ளது. ஆனால், பி மற்றும் சி சென்டர்கள் என கூறப்படும் இதர பகுதிகள் வசூலைப் பார்த்தால் தமிழகத்தில் 'விஸ்வாசம்' தான்  அதிகம். இந்த வசூலை விட சுமார் 4 கோடி குறைவாகவே ’பேட்ட’ வசூல்  இருக்கும்.

'பேட்ட' படத்தின் ஓடும் நேரம் 2 மணி நேரம் 51 விநாடிகள். இது கொஞ்சம் மைனஸ் தான். ஏனென்றால், அதிக காட்சிகள் திரையிட முடியாது. இடைவேளை எல்லாம் விட்டு, ஒரு காட்சி முடியவே குறைந்தது மூன்றரை மணி நேரமாகும். இதனால், குறைவாக காட்சிகளே திரையிட இயலும்.

மேலும், தமிழகத்தின் மொத்த வசூலில் 'பேட்ட' இரண்டாவது இடத்திலிருந்தாலும் உலகளவில் அது தான் நம்பர் ஒன்னில் இருக்கிறது. அமெரிக்காவில் 750K டாலர்கள் வசூல் செய்து, விரைவில் 1 மில்லியன் டாலர்கள் வசூல் செய்யவுள்ளது 'பேட்ட'. ஆனால் 'விஸ்வாசம்' படமோ இதுவரை 83K டாலர்கள் தான் வசூல் செய்துள்ளது.

தற்போதுள்ள சூழலில் எது அனைத்து தரப்புக்கும் லாபகரமான படமாக இருக்கும் என்பதை கணிக்க முடியாது. ஏனென்றால், இப்போது வரை 2 படங்களுக்குமே டிக்கெட் ப்ரஷர் இருக்கிறது. பல திரையரங்குகளில் சீட்கள் போக சேர்கள் போட்டு எல்லாம் கொடுத்துள்ளார்கள். அந்தளவுக்கு கூட்டம் உள்ளது. ஜனவரி 16-ம் தேதிக்கு பிறகு எந்த படம் லாபகரமாக இருக்கும் என்பதை சரியாக கூறிவிடலாம்

இப்போதுள்ள வசூலை வைத்து சொல்ல வேண்டுமானால், இரண்டுமே சரி சமமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். அதிகபட்சம் தமிழகத்தின் இறுதி வசூலில் ஒரு படம் 20% குறைவாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

இந்தி சினிமா பட டைரக்டர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ டெலிவி‌ஷன் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்தனர். பாலியல் தொடர்பாகவும் வெளிப்படையாக பேசினர். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. கருத்துக்கு சமூக வலைத்தளங்களிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக இருவரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் நோட்டீஸ் அனுப்பினார். ஹர்திக் பாண்டியா உடனடியாக மன்னிப்பு கேட்டு மெயில் அனுப்பினார். லோகேஷ் ராகுல் கடிதம் அனுப்பினார்.

ஆனால் அவர்கள் விளக்கம் வினோத் ராய்-ஐ திருப்திப் படுத்தவில்லை. இதனால் இரண்டு போட்டிகளில் விளையாட தடைவிதிக்க பரிந்துரை செய்தார். அதேவேளையில் மற்றொரு நிர்வாகக்குழு உறுப்பினரான டயானா எடுல்ஜி, ‘‘சிஇஓ விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டதோ, அதே முடிவை எடுக்க வேண்டும். விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்வதே சிறந்ததாக இருக்கும்’’ என்று கூறினார்.

இந்நிலையில் ‘‘இருவர் மீதான விசாரணை முடிவடையாததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்’’  என்று வினோத் ராய் தெரிவித்துள்ளார். இதனால் நாளை சிட்னியில் தொடங்கும் முதல் ஒருநாள் போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். விசாரணை முடிவடையாததால் இருவரும் உடனடியாக இந்தியா திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்காக வருகிற 23–ந் தேதி ஆஜராக ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. அதேபோன்று, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 21–ந் தேதியும், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை 22–ந் தேதியும் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பக்கம் 8 / 2332
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…