JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சூர்யாவின் படங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே சூப்பர் ஹிட் ஆகாத நிலையில் அவர் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளிவந்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் விமர்சகர்கள், நெட்டிசன்கள் ஆகியோர் பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்ததால் வசூலிலும் சாதனை புரிந்துள்ளது

இந்த படம் மூன்றே நாட்களில் சுமார் ரூ.45 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னையில் மட்டும் ரூ.2.28 கோடி வசூலான இந்த படத்தின் தமிழக மொத்த வசூல் ரூ.19.10 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் தெலுங்கு மாநிலங்களில் ரூ.5.3 கோடியும், கர்நாடகாவில் ரூ.2.9 கோடியும், கேரளாவில் ரூ.4.1 கோடியும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ரூ.1.5 கோடியும், வெளிநாடுகளில் சுமார் ரூ.10 கோடியும் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது

பிப்.,21ம் தேதி கட்சியின் பெயரை அறிவிக்கும் கமல், ராமநாதபுரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை துவங்குகிறார்.

இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனநயகத்தின் நாயகர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். உங்கள் ஆதரவோடு இந்த பயணத்தை துவக்குகிறேன். தலைவன் வழிநடத்தவே இருக்க வேண்டும். என்னை வளர்த்தெடுத்த சமூகத்திற்கு நன்றி தாண்டி ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இந்த சந்திப்பு புரட்சிக்காகவோ, கவர்ந்திழுக்கவோ அல்ல; எனது புரிதல் மற்றும் எனது கல்விக்காக மட்டுமே.

குடியரசில் குடிமக்களை உயர்த்த வேண்டும். அதை நோக்கி என் பயணம் இருக்கும். நாம் சேர்ந்து தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம். கரம் கோரத்திடுங்கள்; களத்தில் சந்திப்போம். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிப்.,21ல் தனது கட்சி பெயரை அறிவிக்கும் கமல், அன்றே ராமநாதபுரத்தில் சுற்றுப்பயணத்தை துவங்குகிறார். முதற்கட்டமாக மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளார்.

ஏற்கனவே ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து வெளியிட்டுள்ள நிலையில், தற்போது கமலும் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக மணவாள மாமுனிகள் சன்னதி ஜீயர் மதுரையில் தெரிவித்தார்.

சமீபத்தில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வைரமுத்து தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர் ஸ்ரீவி., ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

மதுரை பழங்காநத்தத்தில் இன்று அனைத்து இந்து அமைப்புக்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவி., ஜீயர் பேசியதாவது: 
இறைவன் அனைவரையும் ஒன்றாக தான் பார்க்கிறான். நமக்குள் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று தான் ஜாதி, மதங்களை நம் முன்னோர்கள் தோற்றுவித்தனர்.

ஆண்டாளை இழிவாக பேசிய வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சன்னதியில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். நாளை காலை 9:00 மணி முதல் ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் சன்னதியில் உண்ணாவிரதத்தை துவங்குகிறேன். இனி யாரும் எந்த கடவுளை பற்றியும் அவதுாறாக பேசக்கூடாது, என்றார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ படுகொலைக்கு தாலிபன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தகவலை தாலிபன் அமைப்பின் மூத்தத் தலைவர் அபு மன்சூர் அசிம் முஃப்தி நூர் வாலி எழுதியுள்ள புத்தகத்தில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் பெனாசீர் பூட்டோவுடன் 20 பேர் பலியாகினர்.

பெனாசீர் பூட்டோ படுகொலைக்கும் அப்போதைய ஜனாதிபதி பர்வேஷ் முஷரபிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணை முடிவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 தலிபான் பயங்கரவாதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.

போலீஸ் அதிகாரிகளுக்கு மட்டும் பணியில் அலட்சியமாக இருந்ததாக இரு அதிகாரிகளுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப் இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இப்போது பெனசீர் பூட்டோ கொலை செய்யப்பட்டதற்கு தலிபான் பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது.

"இன்குலாப் மெஹ்சூத் சௌத் வஜிரிஸ்தான் - பிரிட்டிஷ் ராஜ் முதல் அமெரிக்க ஏகாதிபத்தியம் வரை" என்ற தலைப்பில் தலிபான் தலைவன் அபு மன்சூர் அசிம் முப்தி எழுதிய புத்தகத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக டெய்லி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


திமுகவின் நாத்திக பேச்சால் தான் அக்கட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து கொண்டே போகிறது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. தமிழகத்தில் 95% ஆத்திகவாதிகள் இருக்கும் நிலையில் வெறும் 5% நாத்திகவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதால் தான் அக்கட்சி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை எம்பியுமான கனிமொழி, 'கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்றும் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார். இந்த பேச்சால் திமுகவுக்கு மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கடவுள் மறுப்பு கொள்கையை கைப்பிடிக்கும் திமுக உள்பட அனைத்து கட்சிகளும், இந்து கடவுள்களை மட்டுமே தாக்கி பேசுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. திமுக தனது கடவுள் மறுப்பு கொள்கையை மனதளவில் வைத்து கொண்டு வெளியில் பேசாமல் இருப்பதே அக்கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

பக்கம் 9 / 1832
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…