JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சி செயற்பாட்டாளர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக இன்று உரையாற்றினார் நரேந்திர மோடி. இதில் அரக்கோணம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பாஜக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதில் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் கேட்ட கூட்டணி குறித்த கேள்விக்கு கூட்டணிக்கான நமது கதவுகள் திறந்தே உள்ளன என பதில் அளித்து உள்ளார்.

அடுத்து, ரஜினி, அதிமுக ஏன் திமுகவுடன் கூட பாஜக கூட்டணி வைக்க உள்ளது என்பது போன்ற செய்திகள் உலவுகின்றவே என்ற கேள்விக்கு மோடி சிரித்தப்படி பதில் அளிக்க தொடங்கினார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வாஜ்பேயி வெற்றிகரமான கூட்டணி அரசியலை முன்னெடுத்தார். அதுவரை காங்கிரஸ், மாநில கட்சிகளின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்காமல் இருந்தது. அவர்களை மிக மோசமாக கூட நடத்தியது. திமிர்தனத்துடன் நடந்து கொண்டது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி மாநில கட்சிகளை மதித்தது.

நாம் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பின்னரும் கூட, கூட்டணி கட்சிகளை சேர்த்து கொண்டுதான் ஆட்சி அமைத்தோம்.

எப்போதும் நம் கதவுகள் கூட்டணி கட்சிகளுக்காக திறந்தே உள்ளன. இதையெல்லாம் கடந்து மக்களுடனான கூட்டணிதான் நம்பிக்கையான கூட்டணி என்று பதில் அளித்துள்ளார். ஆனால், கடைசி வரை கேட்கப்பட்ட கேள்விக்கு நேரடியான பதிலை அளிக்கவில்லை.

சென்னையில் உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று அதிரடியாக மாற்றப்பட்டனர்.
 
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-
 
 
* சென்னை கிழக்கு இணை கமிஷனர் அன்பு, மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனராக மாற்றப்பட்டார்.
 
* மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், சென்னை கிழக்கு இணை கமிஷனராக பதவி ஏற்பார்.
 
துணை கமிஷனர்கள்
 
* தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாந்தி கங்காதர், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
* கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், தர்மபுரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.
 
* சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜார்ஜீ ஜார்ஜ் சென்னை மேற்கு போக்கு வரத்து போலீஸ் துணை கமிஷனராக பதவி ஏற்பார்.
 
* சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனர் தீபா கனிக்கர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
* சென்னை பூக்கடை துணை கமிஷனர் சாம்சன், ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.
 
* ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும சூப்பிரண்டு அசோக்குமார், சென்னை தியாகராயநகர் துணை கமிஷனராக பதவி ஏற்பார்.
 
அரவிந்தன்
 
* சென்னை தியாகராயநகர் துணை கமிஷனர் அரவிந்தன் பூக்கடை துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.
 
* வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ரவலி பிரியா காந்தபுனேரி மாதவரம் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
 
* மாதவரம் துணை கமிஷனர் கலைச்செல்வன் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
 
* தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை (11-வது பட்டாலியன்) கமாண்டராக பொறுப்பு ஏற்பார்.
 
* ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை (11-வது பட்டாலியன்) கமாண்டர் எஸ்.எஸ்.மகேஷ்வரன் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.
 
இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை, 10 ஜனவரி 2019 00:00

மெரீனாவிலிருந்து 2000 கடைகள் அகற்றம்

மெரினாவில் உரிமம் இல்லாமல் செயல்படும், 2000 கடைகளை அகற்ற வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆழ்கடலில் மீன் பிடிக்க அனுமதி பெற மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளை தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வருகிறது சென்னை, உயர் நீதிமன்றம்.

இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகியிருந்தார். மெரினா கடற்கரையில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.

மெரினாவில், உரிமம் பெறாமல் 2000 கடைகள் இருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அவற்றை, அகற்ற நடவவடிக்கை எடுக்கிறோம், ரூ.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, கடலோர விதிமுறைகளை மீறாமல் உணவகங்கள், மிதி வண்டி நிறுத்தும் இடம் அமைக்கிறோம் என்றார். அப்போது

நீதிபதிகள் குறுக்கிட்டு, உரிமம் இல்லாமல் உள்ள 2000 கடைகளை உடனே அகற்றுங்கள். இனிமேல், குறைவான எண்ணிக்கையில் மட்டும் லைசென்ஸ் கொடுங்கள்.

நீங்கள் அமைக்க கூடிய உணவகங்கள், மிதி வண்டி நிறுத்துமிடங்களால், கடல் பாதுகாப்பு மண்டலத்திற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று நீதிபதிகள் வலியுறுத்தினர். மேலும், கலங்கரை விளக்கத்திலுள்ள, மீன் சந்தை ஏன் அகற்றப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அனைத்து விவரமும் அடங்கிய விரிவான அறிக்கையை பிப். 1 ல் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி, வழக்கை, பிப்ரவரி 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ரபேல் விவகாரத்தில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பின்னணியில் மறைந்து கொள்வதாக கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு, தேசிய மகளிர் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளது.

அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது: ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி ஓடி மறைந்து கொள்கிறார். பெண் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தன்னை பாதுகாக்கும்படி கூறுகிறார். மோடி, ஒரு ஆணாக தனது கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என மீடியாக்களில் செய்த வெளியானது.இதனை தேசிய மகளிர் கமிஷன் தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளது.

ராகுலின் இந்த கருத்துகள் முற்றிலும் பெண்களுக்கு எதிரானது. பெண்களின் பெருமை, மரியாதை ஆகியவற்றை அவமதிக்கும் வகையில் உள்ளது. பொறுப்பான பதவிகளில் இருக்கும் நபர் ஒருவரின் பொறுப்பற்ற கருத்துக்கு கமிஷன் கண்டனம் தெரிவித்து கொள்கிறது. இந்த நோட்டீசை பெற்றவுடன், இந்த விவகாரத்தில் நீங்கள் பொருத்தமான விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் ரேகா சர்மா கூறியதாவது: நேற்று இரண்டு டுவிட்களில் ராகுல் சொன்னது குறித்து விளக்கம் கேட்டுள்ளோம். அவரது கருத்து, பெண்களுக்கு எதிரானது. பாலியல் ரீதியிலானது. இதனால், தான் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். பெண்களை தரக்குறைவாக பேசுவது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

இந்தியாவில் தனிநபர் சராசரி வருமானம், 7 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும், மத்திய பா.ஜ., ஆட்சியின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 45 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளதாவது: தனிநபர் சராசரி வருமானம், கடந்த 2011 - 12ம் நிதியாண்டில் ரூ.63,462 ஆகவும், 2012 - 13ம் நிதியாண்டில் ரூ.70,083 ஆகவும், 2013 - 14ம் நிதியாண்டில் ரூ.79,118ஆகவும் இருந்தது. தொடர்ந்து 2014 - 15(ரூ.86,647), 2015 - 16(ரூ.94,731) மற்றும் 2016-17(ரூ.1,03,870) என அடுத்தடுத்த நிதியாண்டுகளில் அதிகரித்து வந்துள்ளது.

இந்நிலையில் 2017 - 18ம் நிதியாண்டில், தனிநபர் சராசரி வருமானம் ரூ.1,12,835 ஆகவும், 2018 - 19ம் நிதியாண்டில் ரூ.1,25,397 ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் தனிநபர் சராசரி வருமானம் இருமடங்காகியுள்ளது. குறிப்பாக மத்தியில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி பதவியேற்ற பின், கடந்த 4 ஆண்டுகளில் தனிநபர் சராசரி வருமானம் 45 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்கம் 10 / 2332
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…