JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அ.தி.மு.க., அதிகாரபூர்வ நாளிதழாக இருந்த, 'நமது எம்.ஜி.ஆர்.,' மற்றும் ஜெயா, 'டிவி' ஆகியவை, தற்போது சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்களை, அ.தி.மு.க.,விலிருந்து ஓரங்கட்டி விட்டதால், அ.தி.மு.க.,விற்கென புதிய நாளிதழ் மற்றும், 'டிவி' துவக்க, ஒருங்கிணைப்பாளர், பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், பழனிசாமி ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

அ.தி.மு.க., தலைமை பேச்சாளரான, நடிகர் ஜெயகோவிந்தன், 'நமது அம்மா' என்ற பெயரில், நாளிதழ் ஒன்றை நடத்தி வருகிறார். அதை வாங்கி, கட்சி பத்திரிகையாக நடத்த முடிவு செய்துள்ளனர்.

அதே போல், முன்னாள், எம்.பி., ஒருவர் பெற்றுள்ள, 'டிவி' உரிமத்தை வாங்கி, 'அம்மா டிவி' என்ற பெயரில், புதிய, 'டிவி' ஒன்றை துவக்கவும் முடிவு செய்துள்ளனர். இரண்டையும், ஜெ., பிறந்த நாளான, பிப்., 24ல் துவக்க திட்டமிட்டு உள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் அதிகம் விளையும் மால்டா ஆரஞ்சுப் பழங்கள் அறுவடைக் காலம் என்பதால் ராணிப்பேட்டைக்கு அப்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது.

ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் மகாராஷ்டிரம் மாநிலம், நாக்பூர் பகுதியில் விளையும் கமலா ஆரஞ்சுப் பழங்கள் தமிழகத்துக்கு அதிகளவில் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப் மாநிலத்தில் மால்டா ஆரஞ்சுப் பழங்களின் விளைச்சல் அதிகரித்துள்ளதால், தமிழகத்துக்கு அதிகளவில் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளது.

இந்த ஆரஞ்சுப் பழங்களின் தோல் சற்று தடிமனாகவும், தட்டையாகவும் இருக்கும். அதிக புளிப்பு மற்றும் இனிப்பு தன்மை கொண்டவையாக உள்ள இந்த மால்டா ஆரஞ்சுப் பழத்தை, கின்னு ஆரஞ்சு என்று வியாபாரிகள் அழைக்கின்றனர். 

தற்போது, பஞ்சாப் மாநிலத்தில் மால்டா ஆரஞ்சுப் பழங்களின் அறுவடைப் பருவம் தொடங்கியுள்ளதால் ஆரஞ்சுப் பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட நகரங்களின் மொத்த விற்பனைக் கடைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டுவரப்படுகின்றன.

அதிக வரத்து காரணமாக சில்லறை விலையில் கிலோ ஒன்றுக்கு ரூ. 80 வரை விற்பனை செய்யப்படுகிறது. இனி வரும் நாள்களில் இப்பழங்களின் வரத்து மேலும் அதிகரிக்கும் நிலையில் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிதான முழு சந்திர கிரகணம் இம்மாதம் 31ஆம் தேதி நிகழ உள்ளது. இது நீல நிலா என்று அழைக்கப்படுகிறது. வானத்தில் பால் போல வட்ட நிலவை பார்த்திருப்போம். சில நேரங்களில் சிவப்பாகவும், ஏன் லேசான மஞ்சள் நிறத்தில் கூட தென்பட்டிருக்கும்.

ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் தோன்றும் போது நிலவின் வடிவத்தில் நிறத்தில் மாற்றங்கள் ஏற்படுகிறது. வானில் படிந்துள்ளது எரிமலையின் சாம்பல் துகள்கள், புகை காரணமாக நிலவில் மாறுபாடுகள் ஏற்படுகிறது. 2018ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஒன்றிற்கு மேற்பட்ட முறைகள் Super Blue Blood நிலவு வானில் தோன்றவிருப்பதாக நாசா தெரிவித்திருந்தது.

இதனடிப்படையில் புத்தாண்டில் ஜனவரி ஒன்று மற்றும் ஜனவரி 31 ஆகிய தேதிகளில் சூப்பர் ப்ளூ ப்ளடு நிலவு தோன்றும் என நாசா ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஜனவரி 1ஆம் தேதி பவுர்ணமி என்பதால் வழக்கமான நிலாவை விட பெரிய அளவிலான சூப்பர் நிலா தெரிந்தது. ஜனவரி 31ஆம் தேதியன்று பவுர்ணமி நாளில் சந்திர கிரகணம் என்பதால் நீல நிலா தோன்ற உள்ளது

Image result for super blue blood lunar eclipse images photos

2018ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் இது. இந்தியத் துணைக்கண்டம், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா ஆகியவை இந்த கிரகணம் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளது. ஜனவரி 31ஆம் தேதி நள்ளிரவில் இந்த முழு சந்திரகிரகணம் ஏற்படுவதால் பசிபிக் பெருங்கடல் அப்பகுதியில் கொந்தளிப்புடன் காணப்படும் என்று கூறப்படுகிறது.

ஜனவரி 31 ஆம் தேதியன்று மாலை 4 மணி 21 நிமிடத்தில் லேசாக பிடிக்கத் தொடங்கும் சந்திரகிரகணம் 6 மணி 21 நிமிடத்தில் முழுமையான கிரகணமாக உச்சமடைகிறது. இது 7 மணி 37 நிமிடம் வரை முழுமையாக நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில் கண்களால் கிரகணத்தை காண முடியும். மெல்ல மெல்ல விடுபட்டு இரவு 9.38 மணிக்கு சந்திர கிரகணம் நிறைவடைகிறது. இந்த ஆண்டின் அரிய நிகழ்வாகும். 

முழுமையாக தெரியும் நாடுகள் மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணம் மாலை வேளையில் முழுமையாக தெரியும். அலாஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா, ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை தெரியும். மற்ற வட மற்றும் மத்திய அமெரிக்காவில் சந்திரன் மறையும் நேரம் குறுக்கிடும்.

 சந்திரன் முழு கிரகணம் பிடிக்கும் நேரத்தில் சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகத் தெரியும். மேல் விளிம்பு இருளாக இருக்கும். மொத்தமாக இந்த முழு சந்திர கிரகணம் 77 நிமிடங்கள் நிகழும் என ஸ்பேஸ் டாட்.காம் இணையதளம் தெரிவித்துள்ளனது.

 வரும் 31ஆம் தேதியன்று நிகழ உள்ளது நீல நிலா முழு சந்திர கிரகணமாகும். இந்த ஆண்டின் முழு சந்திர கிரகணம் இதுவாகும். அடுத்த முழு சந்திரகிரகணம் டிசம்பர் 31, 2028ல் நிகழும். பிறகு ஜனவரி 31, 2037ல் நிகழும். அன்றைய தினத்தில், நிலா பூமியின் மிக அருகில் இருக்கும்.

எப்போதும் காணப்படுவதை விட 30 சதவிகிதம் பெரிதாகவும், பிரகாசமாகவும் வானில் தென்படும். இதை சூப்பர் நிலா என்றும் இராட்சத நிலா என்றும் பலர் வர்ணிக்கிறார்கள். இது போல ஒரு நீலநிற சந்திரகிரகணம் கடைசியாக நிகழ்ந்தது மார்ச் 31, 1866ஆம் ஆண்டாகும். என்பது குறிப்பிடத்தக்கது.


 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் திமுக எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து, டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட் டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க சிபிஐ அதிகாரிகள் தவறி விட்டதாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஓ.பி.ஷைனி கூறி இருந்தார்.

2ஜி முறைகேடு வழக்கில் சிறப்பு கோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சிபிஐ முடிவு செய்தது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, மத்திய சட்ட அமைச்சகத்திடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிறப்பு கோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மத்திய சட்ட அமைச்சகம் எழுத்துப் பூர்வமாக அனுமதி வழங்கி உள்ளது. இதனால் 2ஜி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் சிபிஐ விரைவில் மேல்முறையீடு செய்ய உள்ளது.

சசிகலா குடும்பத்தில் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. விவேக்குக்கு எதிராக தினகரன் வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சசிகலா குடும்பத்தில் நடக்கும் மோதல்களால் உற்சாகத்தில் திளைக்கின்றனர் அ.தி.மு.க அமைச்சர்கள். அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு வீழ்வார்கள்' என முதல்வர் தரப்பு உறுதியாக நம்புகிறது.

விவேக்கை வழிநடத்தும் சிலர் மீது தினகரன் தரப்பு கடும் கோபத்தில் இருக்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்களோடு கைகோர்த்துக் கொண்டு குடும்பத்துக்கு எதிராக விவேக் செயல்படுகிறார் என சீறிக் கொண்டிருக்கிறார் தினகரன் என்கின்றனர் குடும்பத்தினர்.Image result for sasikala with vivek photos

கன்னத்தில் அறைவேன்' என நடராஜன் கூறிய வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள முடியாமல், தினம் ஒரு ஃபேஸ்புக் பதிவைப் போட்டுக் கொண்டிருக்கிறார் கிருஷ்ணபிரியா. இளவரசி குடும்பத்துக்கு எதிராக நேரடியான மோதலில் இறங்கிவிட்டது தினகரன் தரப்பு.

ஜெயா டி.வி. நிர்வாகத்தை அந்தப் பையனால் திறம்பட நடத்த முடியவில்லை. எனக்கு ஒரு அவசரத் தேவையென்று பணம் கேட்டாலும், 'சின்னம்மா சொல்லட்டும்' எனக் கூறுகிறார். ஆட்சிக்கு எதிராக நான் செய்கின்ற அரசியலுக்கு அந்தக் குடும்பம் இடையூறு செய்கிறது' என சசிகலாவை நேரில் சந்தித்துப் புலம்பினார் தினகரன்.

இதையடுத்து, விவேக்கை நேரடியாக வரவழைத்து சத்தம் போட்டார் சசிகலா. விவேக் லிங்க் பட்டியல் இந்த விவகாரம்தான் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் ஒருவர், விவேக்கின் செயல்பாடுகளை குடும்பத்தினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அதிகாரத்தில் உள்ளவர்களுடன் அவருக்கு இருக்கும் தொடர்புகளை விரிவாக ஆராய்ந்துள்ளனர்.

கடந்த பத்து மாதங்களாக அவர் யாருடன் எல்லாம் பேசினார்? சந்திக்க வந்த நபர்கள் யார்? என்பதையெல்லாம் அலசி எடுத்துள்ளனர். நமது எம்ஜிஆர் ஊழியர் தமிழக அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்கள், நேரடியாகவே விவேக்குடன் தொடர்பில் இருந்துள்ளனர். இதற்குப் பாலமாக தற்போது அ.தி.மு.கவில் இருக்கும் ஒரு பிரமுகரைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் வேலை பார்த்த அந்த நபர்தான், தினகரனுக்கு எதிராக கொம்பு சீவிக் கொண்டிருக்கிறார். 'அந்த நபரை வேலையை விட்டுத் தூக்குங்கள்' என தினகரன் பகிரங்கமாகக் கூறியபோது, ' அப்படியெல்லாம் நீக்க முடியாது' எனக் கூறிவிட்டார் விவேக்.

விவேக் பேட்டிக்கு எதிர்ப்பு இப்படியொரு பதில் வரும் என்று தினகரனும் எதிர்பார்க்கவில்லை. இதைப் பற்றி சசிகலாவிடம் பேசும்போது, ' தினமும் ஏராளமான பிரச்னைகளைச் சந்தித்து வருகிறோம். இதை உணராமல் அந்த நபர் செயல்படுகிறார். அவருக்கு விவேக் ஆதரவாக இருக்கிறார்' எனக் கூறியிருக்கிறார். இதன்பிறகு, போயஸ் கார்டனில் நடந்த ரெய்டின்போது மீடியாக்களை சந்தித்துப் பேசினார் விவேக். இந்த பத்திரிகையாளர் சந்திப்பை தினகரன் விரும்பவில்லை. Image result for sasikala with vivek photos

' என்னை ஓரம்கட்டி அரசியல்வாதியாகும் ஆசை அந்தப் பையனுக்கு வந்துவிட்டது. ஆளாளுக்கு பேட்டி கொடுத்தால், தேவையற்ற விளைவுகள் ஏற்படும்' என குடும்பத்துப் பெரியவர்களிடம் பேசினார் தினகரன். இதையும் விவேக் கண்டுகொள்ளவில்லை. '

தினகரனை அனுசரித்து நடந்து கொள்' என சசிகலா அறிவுறுத்தியதையும் அவர் விரும்பவில்லை. இதற்கு ஒரே காரணம், ஆட்சியில் உள்ளவர்கள் கொடுக்கும் தைரியம்தான். அரசுடன் இணக்கம் விவேக்கை வைத்தே தினகரனுக்கு செக் வைக்க வேண்டும்' எனக் கணக்கு போடுகின்றனர். எனவேதான், குடும்பத்திற்குள் களையெடுப்பை நடத்த வேண்டும் என சசிகலாவிடம் உறுதியாகக் கூறிவிட்டார். வரும் நாட்களில் கார்டன் சொத்துக்களைப் பராமரிப்பதில் நிறைய மாற்றங்கள் வரலாம்" என்கிறார்.

இதைப் பற்றிப் பேசும் விவேக் தரப்பினர்,  குடும்பத்துக்கு எதிராக சதிவேலைதான் செய்யக் கூடாது. ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்தது முதல் தினகரனின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மக்களுக்குக் கொண்டு சென்றது ஜெயா டி.வி.

எந்நேரமும் ஆர்.கே.நகரிலேயே தொலைக்காட்சி ஊழியர்கள் தவம் கிடந்தனர். அவருக்கு எதிராக சதிவேலை செய்தார்கள் என்றால், அவருடைய வெற்றிக்காக விவேக் ஏன் இரவு பகலாக உழைக்க வேண்டும்? தினகரனுக்குத் தேவை, சசிகலா விட்டுவைத்துள்ள கஜானா சாவி. இந்த சாவி வந்துவிட்டால், ஆட்சி அதிகாரத்தையே வளைத்துவிடலாம் என நினைக்கிறார். அதற்காகத்தான், ஒரே மாதத்தில் இரண்டு முறை சசிகலாவை சந்தித்தார். என்ன நடந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியம் விவேக்குக்கு உண்டு என்கின்றனர்.


பக்கம் 2 / 1832
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…