JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

திருப்பூர் : திருப்பூரில், கடந்த 14ம் தேதி மூன்று, 'கன்டெய்னர்' லாரிகளில் தேர்தல் கமிஷனால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி பணம், விசாரணைக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இன்று(மே 17) கோவை கொண்டு செல்லப்பட்டது.

 

திருப்பூர் வடக்கு தொகுதி, கலால் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தேர்தல் கண்காணிப்பு குழுவினர் கடந்த 14ம் தேதி(மே 14) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த இரண்டு, 'இன்னோவா' கார்களையும், அவற்றைத் தொடர்ந்து வந்த மூன்று, கன்டெய்னர் லாரிகளையும் நிறுத்தும்படி சைகை செய்தனர். அந்த வாகனங்கள் நிற்காமல் சென்றதையடுத்து, சுமார் 7 கி.மீ., வரை துரத்திச் சென்று, செங்கப்பள்ளி அருகே கன்டெய்னர் லாரிகளை மடக்கிப் பிடித்தனர்.

கார்களில் இருந்து இறங்கியவர்களில் சிலர், போலீஸ் சீருடையிலும், சிலர் சாதாரண உடையிலும் இருந்தனர். தாங்கள் ஆந்திர போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் எனக் கூறி, அடையாள அட்டைகளை காண்பித்தனர். கோவை, பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து, விசாகப்பட்டினம், பாலாஜி நகர், ஸ்ரீபுரம் சந்திப்பில் உள்ள வங்கிக்கு, சட்டப்படி, 570 கோடி ரூபாயை கொண்டு செல்வதாகக் கூறி, ஆவணங்களை காண்பித்தனர்.

 

ஆவணங்களை வாங்கி சரிபார்த்தபோது, முரண்பாடு இருந்ததால், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அன்று அதிகாலை, 2:45 மணியளவில், பணத்துடன் கன்டெய்னர் லாரிகள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு, போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. 'பிடிபட்டது, 570 கோடி' என, தகவல் பரவியதால், பணத்தை பார்க்க, ஏராளமான பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். போலீஸ் துணை கமிஷனர் தங்கவேல் தலைமையிலான போலீசாரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்; ஒவ்வொரு நடவடிக்கையும், 'வீடியோ'வில் பதிவு செய்யப்பட்டது.

 

கண்டெய்னர் லாரிகளில் பணம் படிபட்டது தொடர்பாக தேர்தல் செலவின பார்வையாளர் எஸ்பால் சாவ்லா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டடது. இந்தக் குழு விசாரித்து அளித்த அறிக்கையின் படி, கண்டெய்னர் லாரிகள் பணத்துடன் கோவை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று(மே 17) காலை 5.30 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரூ.570 கோடியுடன் 3 கண்டெய்னர் லாரிகளும் கோவை எஸ்.பி.ஐ., வங்கிக்கு புறப்பட்டு சென்றன. காலை 7 மணி அளவில் அவை கோவை சென்றடைந்தன.

செவ்வாய்க்கிழமை, 17 மே 2016 00:00

வெளியானது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்...

சென்னை: பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகளை அரசுத் தேர்வுத்துறை இன்று வெளியிட்டது. இதில் மாநில அளவில் 1200 மதிப்பெண்களுக்கு 1195 மதிப்பெண்கள் பெற்று ஆர்த்தி என்ற மாணவியும், யஷ்வந்த் என்ற மாணவரும் முதலிடம் பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளி மாணவி ஆர்த்தியும், ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவன் யஷ்வந்த்தும் 1195 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். மாணவி ஆர்த்தி பெற்ற மதிப்பெண்கள் விவரம் ; தமிழ் - 199, ஆங்கிலம் - 197, கணிதம் , உயிரியல், வேதியல் - 200, இயற்பியல் - 199.

இரண்டாம் இடம்:

1,194 மதிப்பெண்கள் பெற்று திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவி பவித்ரா இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

மூன்றாம் இடம்;

1,193 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 4 பேர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

தேர்ச்சி விகிதம்:

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 91.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 87.9 சதவீதம் பேரும், மாணவிகள் 94.4 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சியமைக்கும் புதிய கட்சி உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என நடிகர் சிவகுமார் கூறியிருக்கிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மழை பெய்தாலும் மக்கள் குடைகளுடன் வந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி 19.3% வாக்குகள் தமிழகம் முழுவதும் பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபலங்களுக்கு தனி வரிசை கிடையாது என்று சொன்னாலும் வரிசையில் நின்று வாக்களிக்க திரை நட்சத்திரங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நடிகர் சிவகுமார் தனது குடும்பத்தினருடன் தி.நகர் இந்தி பிரச்சார சபாவில் நீண்ட வரிசையில் வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார் ''மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்துங்கள்.

இல்லையெனில் படிப்படியாவது மதுவிலக்கை அமல்படுத்துங்கள். ஆறு, ஏரிகளை தூர் வாரி மரம் நடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்'' என ஆட்சியமைக்கும் புதிய கட்சியை அவர் கேட்டுக் கொண்டார்.

சிவகுமாரின் மகனும், நடிகருமான கார்த்தி ''மழை பெய்கிறது என்று வீட்டில் இருக்காமல் தயவுசெய்து வந்து ஓட்டுப் போடுங்கள். விவசாயம் தமிழகத்தில் மிகவும் மோசமாக இருக்கிறது.

வருகின்ற ஆட்சி விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். அமேரிக்காவில் இருப்பதால் கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யா அவரின் மனைவி ஜோதிகா ஆகியோர் இந்தத் தேர்தலில் ஓட்டுப் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

சூர்யாவின் 24 படம் இதுவரை சூர்யா நடித்த படங்களிலே அதிக பேரும் புகழழும் சம்பாதித்துக்கொண்டு இருக்கும் படமும் என்று சொல்லலாம் அது மட்டும் இல்லாமல் நூறு கோடி நடிகர் அந்தஸ்தை பெட்டுரும் உள்ளார்.

சூர்யாவின் 24 படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூலை குவித்து வருகிறது. அதோடு முன்னணி நடிகர்களின் வசூலையும் முறியடித்த வருகிறது.

வெளிநாடுகளில் பிரம்மாண்ட வசூல் செய்த விக்ரமின் ஐ பட சாதனையை முறியடித்துள்ளது சூர்யாவின் 24. தமிழ், தெலுங்கு இரண்டையும் சேர்த்து மே 14 வரை சூர்யாவின் 24 $1.32 மில்லியன் வசூலித்துள்ளது. விக்ரமின் ஐ வெளிநாடுகளில் $1.24 மில்லியன் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது படம் இப்போதும் அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை: மனைவியுடன் வரிசையில் வந்து இன்று வாக்களித்தார் தமாகா தலைவர் ஜிகே வாசன்.

சட்டப்பேரவைத் தேர்தலில் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்களோடு நின்று வாக்களித்து வருகிறார்கள்.

திமுக பொருளாளர் முக ஸ்டாலின் தன் மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகாவுன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். அவருக்கு வாக்களிக்க முன்னுரிமை தந்து அழைத்தும், அவர் வெயிலில் காத்திருந்து வாக்களித்தார்.

அதேபோல தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மேல்நிலையில் பள்ளியில் தன்னுடைய மனைவி சுனிதா வாசனுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

இந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி பெரிய வெற்றியைப் பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…