JoomlaLock.com All4Share.net

Background Video

உலகம்

சீனாவின் நிரந்தர அதிபராகிறார் ஜின்பிங்

சீனாவின் நிரந்தர அதிபராக, ஜி ஜின்பிங் நீடிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்தத்துக்கு, அந்த நாட்டு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.

அண்டை நாடான சீனாவின் அதிபராக, ஜி ஜின்பிங், 64, இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். சீன அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி, ஒருவர், இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது. சீனாவில் ஆட்சி புரியும் ஒரே அரசியல் கட்சியான, சி.பி.சி., எனப்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், ராணுவத்தின் தலைவர், அதிபர் என, ஒரே நேரத்தில் மூன்று பதவிகளையும், தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்,

ஜின்பிங். சீனா கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனர், மாவோ ஜெடாங்குக்குப் பின், சீனாவின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக, ஜின்பிங் உள்ளார். கட்சி மற்றும் ராணுவத்தை முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ள, ஜின்பிங், அதிபர் பதவியில் நிரந்தரமாக தொடர விரும்பினார்.அதற்காக, அதிபர் பதவிக்கு உள்ள கால நிர்ணயத்தை நீக்கும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

கடந்த, 1954ல், நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டம், 1982ல் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்பின், 1988, 1993, 1999 மற்றும், 2004ல் அதில் திருத்தம் செய்யப்பட்டது. கடந்த, 1949 முதல், ஒரு கட்சி ஆட்சி உள்ள சீனாவில், மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய அரசியல் மாற்றம் இது.

அதிபர் பதவிக்கான கால நிர்ணயத்தை நீக்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா, சீன பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது; இதற்கு, 2,958 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இரண்டு பேர், எதிர்த்து ஓட்டளித்தனர், மூன்று பேர் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. வழக்கமான குரல் ஓட்டெடுப்பு, மின்னணு ஓட்டெடுப்பு நடத்தப்படாமல், ஓட்டுச் சீட்டு மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Read 137 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…