JoomlaLock.com All4Share.net

Background Video

உலகம்

ரஷ்ய தேர்தல் : மீண்டும் அதிபராகிறார் புடின்

ரஷ்ய அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர், விளாடிமிர் புடினுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யா அதிபர், பின் பிரதமர், பின் மீண்டும் அதிபர் என, 2000ம் ஆண்டு முதல், 18 ஆண்டுகளாக ரஷ்யாவின் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர், புடின். உலகத் தலைவர்களில், பலமானவராக கருதப்படுபவர். பல்வேறு வகையிலும் அமெரிக்காவுக்கு போட்டி கொடுத்து வருகிறார்.

கடந்த, 1952 அக்., 7ல் அப்போதைய சோவியத் யூனியனில் லெனின்கிராட் பகுதியில் புடின் பிறந்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில கல்லுாரியில் பட்டப்படிப்பு முடித்தார். பின், 16 ஆண்டுகள், வெளிநாட்டு உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றினார். கடந்த, 1991ல் அரசியலில் நுழைந்தார். 1996ல் அதிபராக இருந்த போரிஸ் யெல்ட்சின் நிர்வாகத்தில் புடின் சேர்ந்தார். திறம்பட பணியாற்றிய புடின், யெல்ட்சின் ராஜினாமாவுக்குப்பின், 1999ல் பொறுப்பு அதிபராக வரும் அளவுக்கு உயர்ந்தார்.

2000ம் ஆண்டு அதிபர் தேர்தலில், 53 சதவீத ஓட்டுகள் பெற்று, முதன்முறையாக அதிபரானார். இவரது ஆட்சியில் ரஷ்யாவின் பொருளாதாரம் மற்றும், ஜி.டி.பி., வளர்ச்சி அடைந்தது. 2004ல், 72 சதவீத ஓட்டுகள் பெற்று, இரண்டாவது முறை அதிபரானார்.

ரஷ்யாவில் தொடர்ந்து இரண்டு முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்கமுடியும். இதனால் புடின், 2008ல், மூன்றாவது முறை அதிபராக முடியவில்லை. அதிபராக பதவியேற்ற டிமிட்ரி மெத்ததேவ், புடினை பிரதமராக நியமித்தார்.கடந்த, 2011ல் அதிபரின் பதவிக்காலம், நான்கில் இருந்து ஆறு ஆண்டாக உயர்த்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 2012 அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற புடின், மூன்றாவது முறை அதிபரானார். நேற்று நடந்த அதிபர் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்டார். இவருக்கு எதிர்ப்பு இருந்தாலும், தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், புடினே வெற்றி பெறுவார் என கூறுகின்றன.

Read 176 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…