Print this page

உலகம்

நெதர்லாந்து கடற்கரையில் 20,000 கடல் பறவைகள் சாவு

நெதர்லாந்து கடேலோரம் நெடுக சுமார் 20,000 வட துருவ கடற்பறவைகள் சமீப வாரங்களில் இறந்துள்ள மர்மம் தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் புயலில் சிக்கிய பனாமா நாட்டு கொடியோடு பயணித்த கப்பலில் இருந்து சுமார் 345 கொள்கலன்கள் கடலில் விழுந்ததால் இது நிகழ்ந்திருக்க கூடுமா என்று நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

வடக்கு ஹாலந்து கடலோரங்களில் இருந்து சமீப நாட்களில், இறந்த நிலையில் சுமார் 20,000 வட துருவ கடற்பறவைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்தில் இருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊகத்தின் அடிப்படையில் இறந்த கடற்பறவைகளின் எண்ணிக்கை சுமார் 20,000 என கணிக்கப்படுகிறது என்று கடற்பறவை நிபுணர் மர்டிக் லியோபோல்டு தெரிவித்தார்.

நெதர்லாந்தில் 300 கிலோமீட்டர் தொலைவுடைய கடற்கரையில் ஒரு நாளைக்கு ஒரு கிலோமீட்டரில் இருக்கும் பறவையின் விகிதத்தின் அடிப்படையில் இந்த இறந்த பறவைகளின் எண்ணிக்கை தெரிவிக்கப்படுகிறது.

"இங்கு 10,000 பறவைகள் உள்ளன. இதே போன்ற எண்ணிக்கையில் பறவைகள் கடலில் இருக்கலாம்," என்று அவர் தெரிவித்தார்.

கொள்கலன் கடலில் விழுந்த பின்னர், அதன் கழிவால் பறவைகள் இறந்திருக்கலாம். மோசமான வானிலையும் இந்த பறவைகளுக்கு உணவு கிடைப்பதை தடுத்திருக்கலாம்.

Read 145 times
Share this article

About author

Super User
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…