JoomlaLock.com All4Share.net

Background Video

உலகம்

ஆப்கன் - தலிபான் அமைதி பேச்சு துவங்கியது

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்தும் முயற்சியாக, அரசு மற்றும் தலிபான் பயங்கரவாதிகள் இடையே பேச்சு துவங்கி உள்ளது. சமரசம் ஏற்பட்டு, போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தெற்காசிய நாடான ஆப்கன், தலிபான் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. 2001ல், அமெரிக்காவில், அல் - குவைதா பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது.

அதைத் தொடர்ந்து, அல் குவைதாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டது.அதன்படி, அல் - குவைதா மற்றும் அதன் ஆதரவு அமைப்பான தலிபான் மீதான நடவடிக்கையில், அமெரிக்க படைகள் ஈடுபட்டன. இதற்கு, பல நாடுகளும் ஆதரவு அளித்தன. கடந்த, 18 ஆண்டுகளாக, தலிபான் மற்றும் அமெரிக்க படைகளுக்கு இடையே போர் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆப்கன், தனது படைகளை நிறுத்துவதால், அதிக செலவாவதால், வாபஸ் பெறும் முயற்சியில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் ஈடுபட்டுள்ளார். இதற்காக, தலிபானுடன் சமரசப் பேச்சு நடத்தப்படுகிறது.ஒரு காலத்தில் ஆப்கன் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால், அமெரிக்காவின் முயற்சியால் தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் பேசுவதற்கு, தலிபான் மறுத்து வந்தது. அரசின் பிரதிநிதியாக அல்லாமல், தனிப்பட்ட முறையில் வந்தால் பேசுவதற்கு தயார் என, தலிபான் கூறியது.

அதன்படி, ஆப்கனில் மிகவும் பிரபலமான, மத ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுடன், தலிபான் அமைப்பு பேச்சு நடத்த ஒப்புக் கொண்டது.இந்த இரண்டு நாள் கூட்டம், மத்திய கிழக்கு நாடான, கத்தாரின் தோஹா நகரில், நேற்று முன்தினம் துவங்கியது. இதற்கான ஏற்பாட்டை, கத்தாரும், ஐரோப்பிய நாடான, ஜெர்மனியும் செய்துள்ளன.விரைவில் தீர்வுவரும் செப்டம்பரில், ஆப்கன் அதிபர் தேர்தல் நடக்க உள்ளதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆப்கனில் இருந்து, அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுவது, ஆட்சி அமைப்பது, பெண்களுக்கான உரிமைகள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, இரு தரப்பும் பேசின.இந்த பேச்சுக்குப் பிறகு, தலிபான்களுடன், அமெரிக்கப் பிரதிநிதிகள் தனியாக பேச உள்ளனர். விரைவில், இந்தப் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Read 148 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…