JoomlaLock.com All4Share.net

Background Video

உலகம்

ஹாங்காங்கில் தொடர் போராட்டம்: விமான நிலையம் முற்றுகை

சீனா கொண்டு வந்துள்ள மசோதாவிற்கு எதிராக ஹாங்காங் ஆர்ப்பாட்டக்கார்கள் சர்வதேச விமான நிலையத்தினை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அண்டை நாடான, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள, தன்னாட்சி பிரதேசம் ஹாங்காங். இங்கு, கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவோரை, சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை நடத்தும் வகையிலான மசோதா, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங் மக்கள் தொடர் முழக்க போரட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று ஹாங்காங். சர்வதேச விமான நிலையத்தினை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்கார்கள் முற்றுகையிட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

இதையடுத்து விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் விமானப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு விமானங்கள் புறப்படுவதும் தரையிறங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளதால் ஹாங்காங்கிலிருந்து விமானப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் யாரும் விமான நிலையம் வர வேண்டாம்.இவ்வாறு விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

Read 144 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…