JoomlaLock.com All4Share.net

Background Video

உலகம்

ஜப்பானில் புயல்: 25 பேர் பலி

ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல், காரணமாக அங்கு கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. இதனால்,25 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜப்பானில் கிழக்கு கடற்கரையை ஹகிபிஸ் புயல், மணிக்கு 225 கி.மீ., வேகத்தில் தாக்கியது. கடலில் ராட்சத அலை எழும்பி மக்களை அச்சுறுத்தியது. கடந்த 60ஆண்டுகளில் இல்லாத வகையில் அங்கு கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. 50 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

ரயில் மற்றும் விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்துள்ளது. மீட்பு பணியில் ஈடுபட அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் இடையே, கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இன்னும் பலரை காணவில்லை. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

இதன் இடையே, மழை காரணமாக ஜப்பானில் உயிரிழந்தோருக்கு, நம் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ஜப்பானில் ஹக்பிஸ் புயல் காரணமாக உயிரிழந்தோருக்கு இந்திய மக்கள் சார்பாக இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். இந்த இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பேரழிவு மற்றும் சேதத்தில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும். புயல் பாதிப்பிற்கு பிறகு, , மீள, ஜப்பான் மக்கள் மற்றும் அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபே ஆகியோரால் முடியும் என பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த துயரமான நேரத்தில் ஜப்பான் மக்களுடன் இந்தியா துணை நிற்பதாகவும், ஜப்பானில் உள்ள இந்திய கடற்படை வீரர்கள் மீட்பு பணியில் உதவுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

Read 55 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…