JoomlaLock.com All4Share.net

Background Video

உலகம்

சுழலும் காலப் பாதையில் பிரமிடுகளும் அதன் மர்மங்களும்

பிரமிடுகள் என்றாலே மிகவும் மர்மமான, திகிலான மற்றும் சிக்கலான கட்டமைப்புகள் அல்லது எகிப்திய சாம்பிராஜ்யத்தின் சமாதிகள் என்ற எண்ணத்தை இந்தியர்களுக்கு மட்டுமில்லாமல், உலகம் முழுக்க உள்ளது.

பிரமிடுகள் பல நூற்றாண்டுகளாக நிபுணர்களையும், அறிவியல் - தொல்லியல் ஆய்வாளர்களும் குழப்பிக்கொண்டு தான் இருக்கிறது. ஒட்டுமொத்த எகிப்து பாலைவனத்திலும் ஒரே ஒரு பிரமிட் கட்டமைக்கப்பட்டிருந்தால் கூட - இதெப்படி சாத்தியம்.? இது யாரால் (எதனால்) கட்டமைக்கப்பட்டது.? போன்ற கேள்விகள் கிளம்பியிருக்கும். ஆனால் எகிப்து தேசமோ தன்னுள் எண்ணற்ற பண்டைய கலாச்சாரங்களின் பிரதிபலிப்பான பிரமிடுகளை கொண்டுள்ளது என்கிற போது கேள்விகளும் அதற்கான பதிலும், எண்ணற்றத்தன்மையை தானாகவே பெறுகின்றன. Related image

முதலில் பிரமிடுகள் என்றதுமே எகிப்து நாட்டை நினைத்துக்கொள்வதை நிறுத்துங்கள். ஏனெனில் பிரமிட்கள் எகிப்தில் மட்டுமல்ல மெக்ஸிகோவிலும் உள்ளன. ஆக இந்த பிரமிடு அமைப்புகள் இந்த இரண்டு நாடுகளுக்கும் மட்டுமே உள்ளன என்ற முடிவிற்கு வந்துவிட வேண்டாம். மத்திய அமெரிக்காவில் மட்டுமே 1000-க்கும் மேற்பட்ட பிரமிடுகள் உள்ளன.

இன்னும் சொல்லப்போனால் எகிப்தில் வெறும் 120 பிரமிடுகள் மட்டுமே உள்ளன. சீனாவில் மொத்தம் 300 பிரமிடுகளும் மற்றும் சூடானில் 200-க்கும் மேற்பட்ட பிரமிடுகளும் உள்ளன. ஆக, பூமியின் எந்தவொரு பகுதியிலும் பிரமிடு எனும் புதிரான கட்டமைப்பை, ஒரு கணிக்கமுடியாத கதைபின்னலுடன் பூர்வகாலப் பண்பாடுகள் நமக்கு விட்டுச்சென்றுள்ளதை கண்கூடாய் பார்க்க முடிகிறது.

பூமி முழுவதும் சிதறிக்கிடக்கும் ஆயிரக்கணக்கான பிரமிடுகள் நமக்கு கூறுவது என்ன.? குறிப்பாக ஏன் பெரும்பாலான பிரமிட்கள் வடிவமைப்பில் ஒற்றுப்போகின்றன.? உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான - கிரேட் கிஸா பிரமிட், ஒரு தொல்பொருள் மர்மம் மட்டுமின்றி ஒரு புவியியல் அதிசயமாகவும் இருப்பது எப்படி.? பண்டைய நாகரிகங்கள் இந்த பிரமிட்களை கட்டியெழுப்ப காரணம் தான் என்ன.?

பண்டைய எகிப்தியர்கள் பூமியின் அனைத்து நிலப்பகுதிகளுக்குமான சரியான மையத்தில் கிரேட் கிஸா பிரமிடை நிர்வகித்தது எப்படி போன்ற எண்ணற்ற கேள்விகள் பிரமிடுகள் மீது திணிக்கப்பட்டாலும், மிக முக்கியமான,மிகவும் சாமானியத்தனமான ஒரு கேள்வி என்னவென்றால் - ஏன் பிரமிடுகள் கட்டப்பட்டன.? என்பது தான்.

Image result for pyramids images photos

 

இவைகளெல்லாம் வெறும் கல்லறைகள் தான் என்றால், ஏன் பண்டைய கலாச்சாரங்கள் இந்த அற்புதமான நினைவுச்சின்னங்களை நிறுவுவதற்கு ஆகப்பெரிய செயல்முறைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.? ஆக, நிச்சயமாக அவர்கள் எதோவொரு மிக முக்கியமான காரணத்திற்காகவே பிரமிட்களை எழுப்பியிருக்க வேண்டும். 

உக்ரேனில் உள்ள இயற்பியல் நிறுவனத்தின் விஞ்ஞானியான டாக்டர் வோலோடிமிர் ரஸ்னோஹாலோவெட்ஸ் (Volodymyr Krasnoholovet), ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பிரமிடுகளுடன் செலவழித்து, அதன் பல உயரங்களுக்கு இடையிலேயான வேறுபாடு மற்றும் விகிதாச்சாரங்களை ஆய்வு செய்தப்பின்னர் - ஏன் பிரமிடுகள் கட்டப்பட்டன.? என்றவொரு தீர்க்கமான முடிவிற்கு வந்துள்ளார்.

பிரமிடு கட்டமைப்புகள் இதற்கெல்லாம் உதவியிருக்கலாம் என்ற தனது ஆய்வின் முடிவுகளை நம்முன் முன்வைக்கிறார். மகசூலில் 30 -100% அதிகரிப்பு, நோய் எதிர்ப்பு பிரமிடுகள் சார்ந்த ஆய்விற்காக மாஸ்கோவில் 144 அடி உயரமான பிரமிடு ஒன்று கட்டமைக்கப்பட்டது, அதை கட்டியெழுப்ப ரஷ்ய அரசாங்கத்திற்கு உதவியாக இருந்ததோடு, டாக்டர் வோலோடிமிர் ரஸ்னோஹாலோவெட்ஸ் அந்த கட்டமைப்பின்கீழ் நிகழ்த்திய ஆய்விலிருந்து - ஒரு நாள் முதல் ஐந்து நாட்களுக்கு பிரமிட்டில் சேமித்து வைக்கப்பட்ட விதைகள் மகசூலில் 30 -100% அதிகரிப்பை காட்டியுள்ளது என்பதை கண்டறிந்துள்ளார்.

மேலும் பிரமிடுகளின் கட்டமைப்பு, உயிரினங்களின் நோய் எதிர்ப்பு அமைப்பு (அதாவது வெள்ளை இரத்த அணுக்களையும்) மற்றும் நமது திசுக்களின் மீளுருவாக்கத்தினையும் (regeneration of tissue) மேம்படுத்துவதையும் கண்டறிந்துள்ளார்.. 

Related image

ஆய்வு நோக்கம் கொண்டு மாஸ்கோவில் கட்டமைக்கப்பட்ட பிரமிட் பகுதிக்கு மேலே ஓசோனில் குறிப்பிடப்பட்ட முன்னேற்றங்கள் தெரிவதையும் டாக்டர் டாக்டர் வோலோடிமிர் ரஸ்னோஹாலோவெட்ஸ் கண்டறிந்துள்ளார். நில அதிர்வு நடவடிக்கை, வானிலை, எண்ணெய் உற்பத்தி மேலும் தொடர்ச்சியான ஆய்விலிருந்து பிரமிடு கட்டமைக்கப்பட்ட அருகாமை பகுதிகளில், நில அதிர்வு நடவடிக்கைகளின் கடினத்தன்மையும், அளவும் குறைந்துள்ளன என்பதும், பிரமிடுகள் அருகே நிலவும் வானிலை அதன் வன்முறைதன்மையை குறைத்துக் கொண்டுள்ளது என்பதும் கண்டறியபட்டுள்ளது.

மறுபக்கம் தெற்கு ரஷ்யாவில் (பாஷ்கிரியாவில்) கட்டப்பட்டிருக்கும் பிரமிடுகள் எண்ணெய் உற்பத்தியில் சாதகமான விளைவைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது. அதாவது அப்பகுதியில் கிடைக்கும் எண்ணெய் 30 சதவிகிதம் குறைவான பிசுபிசுப்புத்தன்மை கொண்டுள்ளது மட்டுமின்றி அங்குள்ள எண்ணெய் கிணறுகள் அதிக மகசூலையும் வழங்குகிறது என்கிறது ஆய்வின் முடிவுகள். Image result for pyramids images photos

ஆய்வின் ஒரு பகுதியாக, பிரமிடு ஆற்றல் புலத்தின் (pyramid energy field) வெளிப்பாடின் கீழ் சுமார் 5000 கைதிகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆய்வின் முடிவில் கைதிகள் குறைந்த அளவிலான வன்முறை விகிதம் மற்றும் சிறப்பான ஒட்டுமொத்த நடத்தையை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிரமிடுகளுக்கு அடியில் நிகழ்த்தப்பட்ட தரநிலை திசு வளர்ப்பு (Standard tissue culture tests) சோதனைகளின்கீழ், வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களின் தொற்றுக்குப் பிறகு வெளிப்படும் செல்லுலார் திசுக்களின் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்பதும் ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் கதிரியக்க பொருட்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுவானது பிரமிடுக்குள் குறைவாக வெளிப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது மற்றும் சில தன்னிச்சையான கேப்பாசிட்டர் சார்ஜிங் நிகழ்வுகளையும் இந்த ஆய்வு சந்தித்துள்ளது. குறிப்பாக பிரமிடுகளுக்குள் தீவிரமான வெப்பநிலை வரம்புகளிலும், கார்பன் நானோ பொருட்களின் பண்புகளிலும் கணிசமான மாற்றங்களை இயற்பியல் வல்லுநர்கள் கண்டுள்ளனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பிரமிட்டின் உள்ளே சேமிக்கப்பட்ட நீர் ஆனது, மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வரை திரவமாக இருப்பதும், வெளிப்படும் பட்சத்தில் அது உடனடியாக உறைநிலைக்கு மாறுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

கண்டறிய முடியாத காரணம் மேற்கூறப்பட்டுள்ள இந்த 13 அடிப்படையான காரணங்களில் எது மிகவும் சாத்தியமானதாக இருந்திருக்கலாம் என்பதை முடிவு செய்யும் முன்பு, நம்மால் கண்டறிய முடியாத முற்றிலும் வேறொரு காரணத்திற்க்காக கூட இந்த பிரமிடு கட்டமைப்புகள் எழும்பியிருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.


Read 316 times Last modified on வெள்ளிக்கிழமை, 15 டிசம்பர் 2017 09:58
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…