மத்தியதரைக் கடலில் லிபியா கடற்பகுதியில் தஞ்சம் நாடி சென்றவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து நேரிட்டது. விபத்து சம்பவத்தில் 90 பேர் பலியாகினர் என அஞ்சப்படுகிறது என ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது.
லிபியா கடற்பகுதியில் இன்று காலை படகு கவிழ்ந்ததில் 90 பேர் தண்ணீரில் மூழ்கினர் என்று தகவல்கள் வந்து உள்ளது என ஐ.நா.சபை தெரிவித்து உள்ளது. இதுவரையில் லிபியா கடற்பகுதியில் 10 பேரது சடலம் கரை ஒதுங்கிஉள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் அசாதரமாண சூழ்நிலை நிலவும் நிலையில் மக்கள் அகதிகளாக மேற்கத்திய நாடுகளை நோக்கி செல்கின்றனர். அப்போது அதிகமான ஆட்களை ஏற்றிச் செல்லும் படகுகள் கவிழ்ந்து விபத்தில் சிக்குவது தொடர்ச்சியான சம்பவமாக இருந்து இருந்து வருகிறது.