JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தோனேஷியாவின் மத்தியில் உள்ள சுலவேசி பகுதியில் கடுமையான பூகம்பம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 7.7 ஆக பதிவானது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

கடற்கரையோரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இந்த பூகம்பத்தால் அதிக சேதம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ரிக்டரில் 7.5 என்ற அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் பல கட்டடங்கள் சேதமடைந்தன. ஒருவர் உயிரிந்தார். 10 பேர் காயமடைந்துள்ளனர்.

சுலாவசி பகுதியில் சுனாமி தாக்குதல்

பூகம்பம் ஏற்பட்டதை தொடர்ந்து சலவீசி தீவில் பளு பகுதியை சுனாமி தாக்கியது ஊருக்கு கடல் நீர் புகுந்தது. சுனாமி தாக்கிய காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Published in உலகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…