JoomlaLock.com All4Share.net

Background Video

எத்தியோப்பியாவில் சோமாலிய பழங்குடியினர் மற்றும் ஒரோமோ பழங்குடியினர் இடையே கடந்த செவ்வாய் கிழமையில் இருந்து வன்முறை மோதல் நீடித்து வருகிறது. அன்று ராணுவ வீரர்கள், கூடியிருந்த கூட்டத்தினை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.  இச்சம்பவத்தில் 16 ஒரோமோ பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த வியாழ கிழமை எத்தியோப்பியா நாட்டில் ஹவி கடினா மற்றும் டேரோ லெபு மாவட்டங்களில் சோமாலிய பழங்குடியினர் நடத்திய தாக்குதலில் ஒரோமோ பழங்குடியினத்தினை சேர்ந்த 29 பேர் பலியாகினர்.

இதற்கு பழி வாங்கும் வகையில், வன்முறை சம்பவத்தில் இருந்து தப்பி மற்றொரு மாவட்டத்தில் தஞ்சம் புகுந்திருந்த சோமாலிய பழங்குடியின மக்கள் 32 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதனால் எத்தியோப்பியாவில் வன்முறை சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 61 ஆகியுள்ளது.

Published in உலகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…