JoomlaLock.com All4Share.net

Background Video

ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியா ஏன் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கவில்லை? ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்காவின் அறிவிப்பிற்கு எதிராக ஐ.நா பொதுச்சபையில் இந்தியா வாக்களித்தது.

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அறிவிப்பிற்கு பரவலான எதிர்ப்புகள் எழுந்தன.

அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் வெற்றி பெற்றது. 128 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நிலையில் 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளன.

இந்த விஷயத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் மோதி தலைமையிலான அரசுக்கு அழைப்பு விடுத்தனர்.

ஐ.நா தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஸ்வப்ன தாஸ் குப்தா வெளியிட்டிருந்த டிவிட்டர் பதிவில், ''இஸ்ரேல் நமது நட்பு நாடு என்பதால் ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கக்கூடாது அல்லது எதிர்க்கவேண்டும்'' . என்று தெரிவித்தார்.

ஆனால், இந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தது. அதாவது, அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எதிராக இந்தியா வாக்களித்தது.

Published in உலகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…