JoomlaLock.com All4Share.net

Background Video

தனி தகவல் திருட்டு காரணமாக கூகுள் பிளஸ் சமூக வலைதளத்தை நிரந்தமாக மூடுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கூகுள் பிளஸ் சமூக வலைதளத்தில் தொழில்நுட்ப பிழை காரணமாக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களின் தகவல் திருடப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை ஒப்பு கொண்ட கூகுள் நிறுவனம் திருடப்பட்ட தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படவில்லை எனவும் கூறியிருந்தது. இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் கூகுள் பிளஸ் சமூக வலைதளத்தை நிரந்தரமாக மூட முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத கூகுள் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், கூகுள் பிளஸ் உருவாக்கம் மற்றும் பராமரிப்பில் குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளன. பயனாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினாலும், மிகக்குறைந்த பயன்பாடு உள்ளிட்ட காரணத்தினால், மூடுவது என்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

 

 

Published in உலகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…