JoomlaLock.com All4Share.net

Background Video

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
74 வயதாகும் முஷாரப் பாகிஸ்தானில்  1999-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டுவரை அதிபர் பதவி வகித்தார். அப்போது 2007-ம் ஆண்டில் அவர் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். இதனால் 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
 
இது தொடர்பாக அவர் மீது 2014-ம் ஆண்டு தேசதுரோக வழக்கு போடப்பட்டது. மேலும், அவர் மீது பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு தொடர்பாக வழக்கு ஒன்றும் உள்ளது. 
 
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பெஷாவர் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிடி தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வில் முஷாரப் மீதான தேசதுரோக வழக்கு விசாரணைக்கு வந்தது, அந்த விசாரணையில் அவரை கைது செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பத்தனர். மேலும், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டனர்.
Published in உலகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…