JoomlaLock.com All4Share.net

Background Video

செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2017 00:00

வெடித்துச் சிதறியது பாலித் தீவில் எரிமலை

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள, மவுன்ட் அகுங் எரிமலை, 54 ஆண்டுகளுக்கு பின், பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

ஆயிரக்கணக்கான எரிமலைகள் உள்ள இந்தோனேஷியாவில், 120 எரிமலைகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன. 
பாலி தீவில், அதிகளவில் சுற்றுலா பயணியர் வரக்கூடிய குடா பகுதி அருகே, மவுன்ட் அகுங் எரிமலை உள்ளது. 54 ஆண்டுகளுக்கு முன், இந்த எரிமலை வெடித்தபோது, 7.5 கி.மீ., தொலைவுக்கு நெருப்புக் குழம்புகள் பரவியது. அதில், 1,100 பேர் இறந்தனர். இந்நிலையில், சமீபகாலமாக, இந்த எரிமலை மீண்டும் சீறத் துவங்கிஉள்ளது.

கடும் சீற்றத்துடன், புகையுடன் கூடிய சாம்பல் வெளியேறியது. இதையடுத்து, எரிமலையின் சுற்றுப்பகுதியில் உள்ள, 22 கிராமங்களில் வசிக்கும், ஒரு லட்சம் பேர், உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.பாலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், 55 ஆயிரம் சுற்றுலா பயணியர் பாதிக்கப்பட்டனர். 

நேற்று, இந்த எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில், நெருப்புக் குழம்புகள் ஆறாக பெருக்கெடுத்து, கிராமப் பகுதிகளில் பாய்ந்தது.எரிமலை வெடித்த சத்தம், 12 கி.மீ., தொலைவுக்கு கேட்டது. இந்நிலையில், இந்தோனேஷியாவில் வசிக்கும் இந்தியர்கள் பத்திரமாக இருப்பதாகவும், அவர்களுக்காக உதவி மையம் துவங்கப்பட்டுள்ளதாகவும், வெளியுறவுத் துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

Published in உலகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…