JoomlaLock.com All4Share.net

Background Video

பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘டெம்பின்’ புயல் காரணமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இடைவிடாத மழையும் பெய்தது. மழையின் காரணமாக கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக தெற்கு பிலிப்பைன்சின் மின்டானவ் மாகாணத்தில் இந்தப் புயல் ருத்ர தாண்டவமாடி விட்டு கரையைக் கடந்துள்ளது.

டுபோத், பியாகபோ ஆகிய இருநகரங்களும் பெரும்பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இங்கு வீடுகள் பலவும் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டன.

புயல், மழை, நிலச்சரிவு தொடர்பான சம்பவங்களில் 182 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் காணாமல் போய் உள்ளதாகவும் அங்கிருந்து வரும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

டுபோத் நகரில் மட்டுமே 19 பேர் பலியாகி உள்ளதாக போலீஸ் அதிகாரி கெர்ரி பராமி கூறினார். அங்கு ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தன்னார்வ தொண்டர்கள் இடிபாடுகளைத் தோண்டி உடல்களை மீட்டதாக அவர் கூறினார்.

பியாகபோ நகரில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சரிபடா பகாசம் என்ற அதிகாரி தெரிவித்தார்.

பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைதொடர்பு சேவை முடங்கி விட்டது.

ஒரு வாரத்துக்கு முன்புதான் ‘கய்டாக்’ புயல் பெரும்சேதத்தை ஏற்படுத்தி, பலரை பலி கொண்டது. அந்த சுவடு மறைவதற்கு முன்பாக இப்போது ‘டெம்பின்’ புயல் பெரும் உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும் ஏற்படுத்தி இருப்பது பிலிப்பைன்ஸ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Published in உலகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…