JoomlaLock.com All4Share.net

Background Video

பிலிப்பைன்ஸ் தீவில் மேயோன் என்ற எரிமலை கடந்த சனிக்கிழமையில் இருந்து தொடர்ச்சியாக லாவாவை கக்கி வருகிறது.  அது இன்னும் சில தினங்களில் பெரிய அளவில் வெடித்து சிதற கூடும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எரிமலையின் உள்ளே கீழ்பரப்பில் திரவ வடிவிலான கற்கள் மக்மா என அழைக்கப்படுகிறது.  இது எரிமலையில் இருந்து வெடித்து சிதறி குழம்பு வடிவில் வெளியேறும்.  இதனை லாவா என அழைக்கின்றனர்.

இந்த நிலையில் பிலிப்பைன்சில் தொடர்ச்சியாக லாவா வெளியேறும் நிலையில் எரிமலையை சுற்றியுள்ள கேமலிக், கினோபடான் மற்றும் மலிலிப்போ ஆகிய நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அவர்களுக்கு போலீசார் மற்றும் ராணுவத்தினர் உதவி செய்து வருகின்றனர்.  கடந்த சனிக்கிழமையில் இருந்து எரிமலை அடுக்கில் இருந்து மக்மா அல்லது உருகிய வடிவிலான பெருங்கற்கள் வெளியேறி வருகின்றன.  இவற்றின் சிதறல்களில் சாம்பல் மற்றும் வாயுக்கள் உள்ளன.

  இந்த எரிமலையில் இருந்து தொடர்ந்து லாவா வெளியேறுவதும், அடுக்குகளில் பூமியதிர்ச்சி ஏற்படுவதும் பெரிய அளவில் வெடித்து சிதற கூடிய சாத்தியம் இருக்கிறது என்ற அடையாளத்தினை வெளிப்படுத்துகிறது என ஆய்வாளர் பால் ஆலனிஸ் கூறியுள்ளார்.

Published in உலகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…