JoomlaLock.com All4Share.net

Background Video

ஞாயிற்றுக்கிழமை, 11 பிப்ரவரி 2018 00:00

மாஸ்கோ விமான விபத்தில் 71 பேர் பலி

ரஷ்யா தலைநகர் மாஸ்கோ அருகே பயணிகள் விமானம் நொறுங்கியது. இதில் பயணித்த 71 பேரும் பலியானதாக அதிகராப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோ அருகே உள்ள டொமோடிடோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏ. என்-148 என்ற சாராடோவ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் 71 பேருடன் நடுவானில் நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் பலியானார்கள். விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விமானம் விழுந்த இடத்தில் விமான பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதில் பயணம் செய்த 65 பயணிகளும் மற்றும் 6 விமான ஊழியர்களும் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Published in உலகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…