JoomlaLock.com All4Share.net

Background Video

வுதி அரேபியா நாட்டில் புதித தலங்களான மதினா, காடிஃப் ஆகிய இரு நகரங்கள் அருகில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமியர்களின் திருநாளான ரம்ஜான் நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மதினா, காடிஃப் ஆகிய இஸ்லாமிய புனித நகர்களில் உலகெங்கில் இருந்தும் இஸ்லாமியர்கள் இந்நகர்களுக்கு வந்து வழிபாடு செய்வார்கள். அப்படி பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் தற்காலை படை தாக்குதல் நடந்துள்ளது. இதில் பலர் உயிர் இழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மெதினாவை குறிக்கும் வரைபடம்

காடிஃப் நகரில் சிறுபான்மையினராக ஷியா முஸ்லீம்கள் வாழ்கிறார்கள்.அவர்களது மசூதியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதேபோல், ஜெத்தா நகரில் உள்ள அமெரிக்க தூதரம் அருகே சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் வெடிகுண்டை வெடிக்க செய்து உயிரிழந்தார். இதில் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர்.

இஸ்லாமியர் ஈகை திருநாளான ரமலான் பண்டிகை கொண்டாட இருக்கும் நேரத்தில் இக் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published in உலகம்

ரஜினி படத்தை இயக்க பல மூத்த இயக்குநர்கள் காத்துக் கொண்டிருக்க, இரண்டே படங்கள் இயக்கிய பா.ரஞ்சித் படத்தில் நடிக்க ரஜினி எப்படி சம்மதித்தார் என்று பலரது மனதையும் அரித்துக் கொண்டிருந்த கேள்விக்கு ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா தற்போது பதில் அளித்துள்ளார்.

அட்டக்கத்தி, மெட்ராஸ் என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பா.ரஞ்சித். அவரே ஆச்சர்யப்பட்டுப் போகும் அளவில், அவரது மூன்றாவது படமான கபாலியில் ரஜினி நாயகன் ஆனார்.

மூத்த இயக்குநர்கள் பலர் எப்போது நமக்கு ரஜினி பட வாய்ப்பு கிடைக்கும் என ஏங்கிக் கொண்டிருக்கையில், ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கி முடித்து விட்டார் ரஞ்சித்.

அடுத்தமாதம் இப்படம் ரிலீசாக இருக்கிறது.

ஆடியோ, டீசர் என இதுவரை கபாலி தொடர்பாக வெளியானவை அனைத்தும் சாதனை புரிந்து வருகின்றன. இந்நிலையில், இளம் இயக்குநரின் படத்தில் ரஜினி எப்படி நடிக்க சம்மதித்தார் என்ற பலரின் ஆச்சர்யத்திற்கு, ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, 'நான் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக 'கோவா' படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ரஞ்சித்தின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய முதல் படமான 'அட்டக்கத்தி'யை நான் தயாரிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், ஒருசில காரணங்களால் அது முடியாமல் போனது.

அதன்பிறகு, 'மெட்ராஸ்' படம் வெளிவந்த பிறகு, அந்த படத்தை பார்த்துவிட்டு அப்பா ஒருநாள் என்னை அழைத்து 'மெட்ராஸ்' படம் மிகவும் நன்றாக உள்ளது என்று கூறினார். உடனே, எனது மனதுக்குள் ரஞ்சித்தும், அப்பாவும் சேர்ந்து பணியாற்றினால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ஓடியது.

பிறகு, ரஞ்சித்தை ஒருநாள் சந்தித்து அப்பாவுக்கு ஒரு கதை பண்ணுகிறீர்களா? என்று கேட்டதும், அவர் உறைந்தே போய்விட்டார். சில நாட்கள் கழித்து ரஞ்சித், என்னிடம் வந்து அப்பா நடிக்கும் படத்தில் அவர் 'மலேசியா டானா'க வருகிறார் என்று சொன்னதும், அதுவே போதுமானதாக இருந்தது.

கபாலி...

இதை அப்பாவிடம் போய் சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. அதுதான் இன்றைய கபாலி' எனத் தெரிவித்துள்ளார் சவுந்தர்யா.

மகிழ்ச்சி..!

Published in சினிமா

பிரிட்டனைச் சேர்ந்த "க்யூஎஸ்' என்ற தனியார் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆசிய கண்டத்தில் உள்ள சிறந்த 50 பல்கலைக்கழங்கங்களின் தரவரிசைப் பட்டியலில் 4 ஐஐடி.க்கள் உள்பட 5 இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.

பிரிட்டனில் உயர் கல்வி குறித்த ஆலோசனைகளை மாணவர்களுக்கு அளித்துவரும் "க்யூஎஸ்' என்ற நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழங்களை ஆண்டுதோறும் தரவரிசைப்படுத்தி வருகிறது.

அதன்படி, நிகழாண்டு தரவரிசைப்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டியலை "டாப்யுனிவர்சிடீஸ்.காம்' என்ற தனது இணையதளத்தில் "க்யூஎஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், ஆசிய கண்டத்தில் சிறந்த 50 பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்) 33ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இப்பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு 34ஆவது இடத்தில் இருந்தது.

மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) 35ஆவது இடத்தையும், தில்லி ஐஐடி 36ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

மெட்ராஸ் ஐஐடி 43 ஆவது இடத்திலும், கான்பூர் ஐஐடி 48ஆவது இடத்திலும் உள்ளன.

இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டை போல், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் முதலிடத்தையும், சீனாவின் ஹாங் காங் பல்கலைக்கழகம் 2-ஆவது இடைத்தையும் பிடித்துள்ளது.

வியாட்நாம் தூதரக அதிகாரி ஒருவர் விதிமுறைகளையும் மீறியும், அலட்சியமாகவும் காரை ஓட்டியதற்காக டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Published in இந்தியா

சிரியா அரசுடன் அதிகரித்து வரும் சர்வதேச சமூகத்தின் பொறுமையிழப்பின் அடையாளமாக, முற்றுகையிடப்பட்ட பகுதிகளில் வான் வழியாக மனிதாபிமான உதவிகளை வழங்கத் தொடங்கிட ஐக்கிய நாடுகள் சபையை அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன.

பரந்த மனிதாபிமான உதவிக்கான வழிவகைகளை ஆதரிக்க சிரியா அரசு தவறியது குறித்து பரிசீலனை செய்ய ஒரு அவசர பாதுகாப்பு குழு கூட்டத்தை இந்த நாடுகள் கோரியுள்ளன.

மிகவும் நம்பிக்கையூட்டும் விதமாக உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு, அது நெருங்கி வரும் வேளையில் அவற்றை திரும்ப அனுப்புவது ''சர்வதேச சமூகத்தின் முகத்தில் காரி உமிழ்வதாகும்'' என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் பேச்சாளரான ஜான் கிர்பி கூறினார்.

நான்கு வருடங்களாக சிரியா அரச படைகள் சூழ்ந்திருந்த தரயா நகரை, நேற்று (புதன்கிழமை) ஒரு தொடரணி சென்றடைந்தது. ஆனால், அது எந்த உணவையும் எடுத்துச் செல்லவில்லை.

Published in உலகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…