JoomlaLock.com All4Share.net

Background Video

வுதி அரேபியா நாட்டில் புதித தலங்களான மதினா, காடிஃப் ஆகிய இரு நகரங்கள் அருகில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமியர்களின் திருநாளான ரம்ஜான் நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மதினா, காடிஃப் ஆகிய இஸ்லாமிய புனித நகர்களில் உலகெங்கில் இருந்தும் இஸ்லாமியர்கள் இந்நகர்களுக்கு வந்து வழிபாடு செய்வார்கள். அப்படி பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் தற்காலை படை தாக்குதல் நடந்துள்ளது. இதில் பலர் உயிர் இழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மெதினாவை குறிக்கும் வரைபடம்

காடிஃப் நகரில் சிறுபான்மையினராக ஷியா முஸ்லீம்கள் வாழ்கிறார்கள்.அவர்களது மசூதியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதேபோல், ஜெத்தா நகரில் உள்ள அமெரிக்க தூதரம் அருகே சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் வெடிகுண்டை வெடிக்க செய்து உயிரிழந்தார். இதில் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர்.

இஸ்லாமியர் ஈகை திருநாளான ரமலான் பண்டிகை கொண்டாட இருக்கும் நேரத்தில் இக் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published in உலகம்

வங்கதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் மீது தாக்குதல் நடத்திய 6 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஹோட்டலில் பிணையக் கைதிகளாக இருந்த 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

டாக்காவில் வெளிநாட்டு தூதரகங்கள் அதிகம் உள்ள குல்ஷன் பகுதியில் ஹோலி ஆர்டிசன் பேக்கரி உணவகத்தில் நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். வெளிநாட்டினர் அதிகம் வந்துசெல்லும் இந்த விடுதிக்குள் 20-க்கும் மேற்பட்டோரை பிணையக்கைதிகளாக அவர்கள் பிடித்து வைத்திருந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து சம்பவ இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு அதிரடியாக நுழைந்த கமாண்டோ படையினர் உள்ளே இருந்த 6 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலின்போது உணவகத்தின் உள்ளே இருந்து ஒரு ஜப்பானியர் உள்பட இருவர் வெளியே தப்பி ஓடி வந்தனர்.

தீவிரவாதிரகள் பிடித்து வைத்திருந்த 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் இந்தியா, இலங்கை, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளதாகவும், அவர்களில் சிலர் காயம் அடைந்திருப்பதாகவும் டாக்காவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published in உலகம்

வங்கதேசத்தில் வெளிநாட்டினர் அதிகம் தங்கியிருந்த ஓட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி யத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பாதுகாப்பு படை வீரர்கள் ஓட்டல் உள்ளே புகுந்து நடத்திய அதிரடி தாக்குதலில் தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையின் மூலம் ஓட்டல் தாக்குதல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Published in உலகம்
வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00

வங்கதேசத்தில் கோயில் அர்ச்சகர் கொலை

வங்கதேசத்தின் ஜினைதா மாவட்டத்தில் உள்ள இந்துக் கோயில் ஒன்றில் அர்ச்சகராக இருப்பவர் ஷியாமானந்த தாஸ் (45). இவர்கள் இன்று காலை பூஜை செய்வதற்காக கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 இளைஞர்கள், ஷியாமனந்த தாசை அடித்து, கோயில் வாசலில் வைத்து கொலை செய்து விட்டு, தப்பிச் சென்றுள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Published in உலகம்
பக்கம் 1 / 6
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…