JoomlaLock.com All4Share.net

Background Video

வுதி அரேபியா நாட்டில் புதித தலங்களான மதினா, காடிஃப் ஆகிய இரு நகரங்கள் அருகில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமியர்களின் திருநாளான ரம்ஜான் நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மதினா, காடிஃப் ஆகிய இஸ்லாமிய புனித நகர்களில் உலகெங்கில் இருந்தும் இஸ்லாமியர்கள் இந்நகர்களுக்கு வந்து வழிபாடு செய்வார்கள். அப்படி பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் தற்காலை படை தாக்குதல் நடந்துள்ளது. இதில் பலர் உயிர் இழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மெதினாவை குறிக்கும் வரைபடம்

காடிஃப் நகரில் சிறுபான்மையினராக ஷியா முஸ்லீம்கள் வாழ்கிறார்கள்.அவர்களது மசூதியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதேபோல், ஜெத்தா நகரில் உள்ள அமெரிக்க தூதரம் அருகே சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் வெடிகுண்டை வெடிக்க செய்து உயிரிழந்தார். இதில் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர்.

இஸ்லாமியர் ஈகை திருநாளான ரமலான் பண்டிகை கொண்டாட இருக்கும் நேரத்தில் இக் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published in உலகம்

வங்கதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் மீது தாக்குதல் நடத்திய 6 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஹோட்டலில் பிணையக் கைதிகளாக இருந்த 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

டாக்காவில் வெளிநாட்டு தூதரகங்கள் அதிகம் உள்ள குல்ஷன் பகுதியில் ஹோலி ஆர்டிசன் பேக்கரி உணவகத்தில் நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். வெளிநாட்டினர் அதிகம் வந்துசெல்லும் இந்த விடுதிக்குள் 20-க்கும் மேற்பட்டோரை பிணையக்கைதிகளாக அவர்கள் பிடித்து வைத்திருந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து சம்பவ இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு அதிரடியாக நுழைந்த கமாண்டோ படையினர் உள்ளே இருந்த 6 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலின்போது உணவகத்தின் உள்ளே இருந்து ஒரு ஜப்பானியர் உள்பட இருவர் வெளியே தப்பி ஓடி வந்தனர்.

தீவிரவாதிரகள் பிடித்து வைத்திருந்த 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் இந்தியா, இலங்கை, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளதாகவும், அவர்களில் சிலர் காயம் அடைந்திருப்பதாகவும் டாக்காவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published in உலகம்

வங்கதேசத்தில் வெளிநாட்டினர் அதிகம் தங்கியிருந்த ஓட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி யத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பாதுகாப்பு படை வீரர்கள் ஓட்டல் உள்ளே புகுந்து நடத்திய அதிரடி தாக்குதலில் தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையின் மூலம் ஓட்டல் தாக்குதல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Published in உலகம்

பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ஒரு தமிழ்ப் படத்துக்காக உலகெங்கும் ஏற்பட்டுள்ள எதிர்ப்பார்ப்பு, மெகா நிறுவனங்கள் முன் வந்து செய்யும் விளம்பரங்களைப் பார்க்கும்போது, இது நிஜம்தானா என்று கிள்ளிப் பார்த்துக் கொள்ளத் தோன்றுகிறது.

ஆனால் நிஜம்.

ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது. இதுவரை தமிழ்ப் படங்கள் பற்றிக் கேள்விப்படாத நாடுகள் கூட கபாலியை வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகின்றன.

ஹாலிவுட் திரை வல்லுநர்கள் பலரும் கபாலி குறித்துப் பேசுவதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இப்போது அமெரிக்காவில் இருக்கும் ரஜினியைச் சந்திக்க முன்னணி திரைப்பட நிறுவனங்கள் இரண்டு முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் ஜாக்கி சானுடன் அவரை இணைத்து ஒரு படம் உருவாக்கும் முயற்சியும் நடக்கிறது.

இந்த நிலையில் பிரபல சர்வதேச விமான நிறுவனம் கபாலி படத்தின் புரமோஷனில் இதுவரை இல்லாத பிரமாண்டம் காட்ட ஆரம்பித்துள்ளது.

கபாலி படத்துக்காக ஏராளமான விமானப் பயணத் திட்டங்கள், பேக்கேஜ்களை அறிவித்துள்ள அந்த நிறுவனம், இப்போது கபாலி விமானங்களை இயக்கி வருகிறது.

விமானத்தின் வெளிப்பாகம் முழுக்க ரஜினியின் உருவத்தை பிரமாண்டமாக வரைந்து, 'சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி' என்ற விளம்பரத்துடன் சர்வதேச அளவில் விமானங்களை இயக்குகிறது. முகப்புப் பகுதியில் ரஜினி உச்சரிக்கும் 'மகிழ்ச்சி' என்ற வார்த்தை ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையிலிருந்து மலேசியா மற்றும் மலேசியாவிலிருந்து உலகின் முக்கியப் பகுதிகளுக்குச் செல்லும் தங்கள் விமானங்களின் வெளிப்புறத்தை கபாலி ஸ்பெஷலாக மாற்றியுள்ளது உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இதுவரை உலகில் எந்த ஒரு நடிகர் அல்லது படத்துக்காகவும் இப்படி விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்டதில்லை. அந்தப் பெருமை முதல் முறையாக ஒரு தமிழ் நடிகருக்கும் தமிழ்ப் படத்துக்கும் கிடைத்திருக்கிறது. ரஜினிகாந்த், கபாலி என்ற பெயருடன் உலகை வலம் வருகின்றன ஏர் ஏசியா விமானங்கள்.

'ரஜினிடா' 'கபாலிடா'... என நெஞ்சு நிமிர்த்துகிறார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள்!

Published in சினிமா
பக்கம் 1 / 3
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…