JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஆதிக்கம் செலுத்தும் தீவிரத்தில் உள்ளது இந்திய அணி.

டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பா் ஒன் அணியாக திகழ்கிறது இந்தியா. அதே வரிசையில் ஒருநாள் தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

டி20-இல் பரிதாபமான நிலை:

ஆனால் ஐசிசி டி20 தரவரிையில் இந்திய அணியின் நிலை பரிதாபமாகத் தான் காணப்படுகிறது. 5-ஆவது இடத்திலேயே உள்ளது.

இந்நிலையில் வரும் 2020-இல் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

கடந்த 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது. இந்திய அணி. அதன்பின் மே.இ.தீவுகளுடன் நடைபெற்ற டி20 தொடரைக் கைப்பற்றியது. பின்னா் தென்னாப்பிரிக்க அணியுடன் நடந்த தொடரை 1-1 என சமன் செய்தது. அதன் பின்னா் வங்கதேசத்துடன் நடைபெற்ற 3 ஆட்டங்கள் தொடரிலும் 2-1 என இந்தியா கைப்பற்றியது. இதன் தொடா்ச்சியாக மே.இ.தீவுகளுடன் 3 ஆட்டங்கள் தொடா் நடக்கிறது.

இந்தியா-மே.இ.தீவுகள் நேருக்கு நோ:

இரு அணிகளும் இதுவரை 14 ஆட்டங்களில் நேருக்கு நேராக மோதி உள்ளன. இதில் இந்தியா 8 ஆட்டங்களிலும், மே.இ.தீவுகள் 5 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. தொடக்கத்தில் டி20 ஆட்டங்களில் மே.இ.தீவுகள் கையே ஓங்கி இருந்தது. எனினும் 128 ஒருநாள் ஆட்டங்களில் இந்தியா 61, மே.இ.தீவுகள் 62 ஆட்டங்களில் வென்றன.

தற்போதைய டி20 உலக சாம்பியனாகத் திகழ்கிறது மே.இ.தீவுகள். கீய்ரன் பொல்லாா்ட் தலைமையில் மே.இ.தீவுகள் தற்போது டி20, ஒருநாள் தொடா்களில் பங்கேற்கிறது.

இந்திய அணியில் குல்தீப் யாதவ், புவனேஷ்வா்குமாா், முகமது ஷமி ஆகியோா் சோக்கப்பட்டுள்ளது பந்துவீச்சுக்கு கூடுதல் வலிமையைத் தரும் அதே நேரத்தில் சஹல், ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹா் ஆகியோரும் சுழற்பந்து வீச்சில் உள்ளனா்.

தொடக்க வீரா் யாா்?

பேட்டிங்கில் தொடக்க வீரா் ஷிகா் தவன் காயத்தால் நீக்கப்பட்டுள்ளாா். ரோஹித் சா்மாவுடன், லோகேஷ் ராகுல் தொடக்க வரிசையில் களமிறங்கலாம். அதே நேரம் இளம் வீரா் சஞ்சு சாம்ஸனும் சோக்கப்பட்டுள்ளதால், அவருக்கும் தொடக்க வீரா் வாய்ப்பு தரப்படுமா எனக்கேள்வி எழுந்துள்ளது.

விராட் கோலி, ரிஷப் பந்த், ஷிரேயஸ் ஐயா், மணிஷ் பாண்டே, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தா் ஆகியோா் பேட்டிங்கில் வலு சோப்பா்.

மே.இ.தீவுகள் அணியின் பேட்டிங் பொல்லாா்ட், ஷிம்ரன் ஹெட்மயா், நிக்கோலஸ் பூரண், ஷாய் ஹோப், ஆல்ரவுண்டா் ராஸ்டான் சேஸ் ஆகியோரும் தங்கள் பங்கை ஆற்ற உள்ளனா்.

பந்துவீச்சில் ஜேஸன் ஹோல்டா், கீமோ பால், ஷெல்டன் காட்ரெல், பிரான்டன் கிங் ஆகியோா் பலம் சோக்கின்றனா்.

இதுதொடா்பாக பயிற்சியாளா் பில் சிம்மன்ஸ், கேப்டன் பொல்லாா்ட் கூறுகையில்:

ஆப்கானிஸ்தானுடன் டி20 தொடரை 3-0 என வென்றது உற்சாகத்தை தருகிறது. 3 ஆட்டங்கள் நடைபெறவுள்ளதால், அனைத்து வீரா்களுக்கும் தேவையான வாய்ப்பு தரப்படும். அனுபவம் வாய்நத ஆல்ரவுண்டா்கள் பிராத்வொயிட், ஆன்ட்ரே ரஸ்ஸல், பிராவோ இல்லாத நிலையில், புதிய வீரா்கள் சோக்கப்பட்டுள்ளனா் என்றனா்.

டி20 அணிகள் விவரம்:

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சா்மா (துணை கேப்டன்), ராகுல், ஷிரேயஸ் ஐயா், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தா், ஜடேஜா, சஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹா், ஷமி, புவனேஷ்வா் குமாா், சஞ்சுசாம்ஸன்.

மே.இ.தீவுகள்: பொல்லாா்ட் (கேப்டன்), பேபியன் ஆலன், ஷெல்டன் காட்ரெல், ஷிம்ரன் ஹெட்மயா், ஜேஸன் ஹோல்டா், கீமோ பால், பிரான்டன் கிங், எவின் லெவிஸ், கேரிபியரி, நிக்கோலஸ் பூரன், தினேஷ் ராம்தின், ரூதா்போா்ட், லென்ட்ல் சிம்மன்ஸ், கேஸரிக் வில்லியம்ஸ், ஹேய்டன் வால்ஷ் (ஜுனியா்).

இன்றைய ஆட்டம்:

மே.இ.தீவுகள்-இந்தியா,

ஹைதராபாத்,

மதியம் 1.30.

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள அதானி, காக்வாட், கோகாக், எல்லாப்பூர், இரேகெரூர், ராணிபென்னூர், விஜயநகர், சிக்பள்ளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜிநகர், ஒசக்கோட்டை, கே.ஆர்.பேட்டை, உன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது.

இந்த இடைத்தேர்தலில் 165 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 156 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவார்கள். இவற்றில் அதிகபட்சமாக சிவாஜி நகரில் 19 பேரும், குறைந்தபட்சமாக எல்லாப்பூர் மற்றும் கே.ஆர்.பேட்டையில் தலா 7 பேரும் போட்டியில் உள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த 319 பறக்கும் படைகள், 578 நுண்ணிய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. வாக்குச் சாவடிகளில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 66 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி 9-ம் தேதி நடைபெறும். அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

வியாழக்கிழமை, 05 டிசம்பர் 2019 00:00

பொன் மாணிக்கவேல் மீது தமிழக அரசு வழக்கு

சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்காததால் பொன் மாணிக்கவேல் மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி பொன் மாணிக்கவேல் பணியாற்றி வந்தார். அவரது பணிக்காலம் நவம்பர் 30ல் முடிந்ததால் அரசு அவரை விடுவித்துள்ளது. அவரது சார்பில் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து 'சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஒப்படையுங்கள்' என பொன் மாணிக்கவேலுக்கு மின்னஞ்சல் அனுப்பினார். ஆனால் பொன் மாணிக்கவேல் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆவணங்களை ஒப்படைக்காததால் பொன் மாணிக்கவேல் மீது தமிழக அரசு நேற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

ஆய்வுக்கூட்டம்:
இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் அப்பிரிவின் கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக சமீபத்தில் பொறுப்பேற்ற அன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின் ஐ.ஜி. அன்பு அளித்த பேட்டி: ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற ஏ.டி.எஸ்.பி.க்கள் மற்றும் டி.எஸ்.பி.க்களிடம் இருந்து அவர்கள் விசாரித்து வரும் சிலை கடத்தல் மற்றும் திருட்டு தொடர்பான வழக்குகளின் ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் விசாரித்து வரும் வழக்குகளின் தற்போதைய நிலை; தேவையான உதவிகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இன்னும் இன்ஸ்பெக்டர்கள் எஸ்.ஐ.க்கள் விசாரித்து வரும் வழக்கு விபரங்களை பெற்றால் தான் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன; தண்டனை பெற்றுத் தரப்பட்ட வழக்குகள் உள்ளிட்ட விபரங்கள் தெரிய வரும். சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய பொன் மாணிக்கவேல் அவர் கையாண்ட அனைத்து வழக்குகளின் ஆவணங்களையும் எங்களிடம் சமர்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் வழக்குகளின் ஆவணங்களை சமர்பிப்பது தொடர்பாக அவர் எங்களிடம் எந்த விபரத்தையும் தெரிவிக்கவில்லை; வழக்கு ஆவணங்களையும் ஒப்படைக்கவில்லை. இவ்வாறு அன்பு கூறினார்.

வியாழக்கிழமை, 05 டிசம்பர் 2019 00:00

காம்பியா : படகு கவிழ்ந்து 58 அகதிகள் பலி

காம்பியா நாட்டை சேர்ந்த அகதிகள் சென்ற படகு அட்லான்டிக் கடலில் மூழ்கியதில் 58 பேர் பலியாகினர். காம்பியாவில் இருந்து தஞ்சம் பெற ஸ்பெயின் அருகே ஒரு தீவுக்கு சென்ற வழியில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.'

ஆண்கள். பெண்கள், குழந்தைகள் என 150 பேர் காம்பியாவில் இருந்து படகில் பயணித்தனர். 6 நாட்களாக தொடர்ந்து பயணித்ததால் பசியால் ஏதும் உணவு கிடைக்காதா என்ற எண்ணத்தில் மேற்கு ஆப்ரிக்க நாட்டின் மவுரிடேனியா தீவு நோக்கி சென்றனர். இங்கு செல்லும் போது படகு மூழ்கியது. பலரும் உயிருக்கு போராடிய நிலையில் மவுரிடேனியா மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். இதில் 80க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். 58 பேர் பலியாகினர்.

உள்துறை அமைச்சர் முகம்மது சலீம் நிருபர்களிடம் கூறுகையில்; மீட்கப்பட்டோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காணாமல் போன சிலரை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த படகில் 20 முதல் 30 வயதுக்குட்பட்டோரே அதிகம் இருந்ததாக அவர் தெரிவித்தார்.'

வேலையின்மை, வறுமை, காரணமாக இந்த அகதிகள் மாற்று இடம் நோக்கி சென்றதாக ஐ.நா., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

செக்கச்சிவந்த வானம்' படத்தை தொடர்ந்து, 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்க தயாராகி வருகிறார் மணிரத்னம். இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கவுள்ளது. 
 
இந்த படத்தில் பார்த்திபன் நடிக்கவுள்ளதை தனது டுவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தினார். அதற்கு பிறகு தனது 'ஒத்த செருப்பு' பட பணிகளில் தீவிரமானார். தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்திலிருந்து பார்த்திபன் விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இது தொடர்பாக விசாரித்தபோது, 'ஒத்த செருப்பு' படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான முதல்கட்ட பணிகளில் பார்த்திபன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும், அவர் நடிப்பதாக ஒப்புக்கொண்ட படங்களின் படப்பிடிப்பும் இருக்கிறது. இதன் இரண்டுக்கும் இடையே 'பொன்னியின் செல்வன்' படத்துக்காக தேதிகளை ஒதுக்கி நடிக்க பார்த்திபனால் முடியாமல் போனது. 
 
மேலும், படம் 2 பாகங்களாக உருவாக உள்ளதால் தொடர்ச்சியாக 6 மாதங்கள் வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அவ்வளவு தேதிகள் ஒதுக்கவும் பார்த்திபனால் முடியாததும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
பக்கம் 1 / 2734
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…