JoomlaLock.com All4Share.net

Background Video

'உலக பாராளுமன்றங்களின் தாய்' என்று இங்கிலாந்து பாராளுமன்றம் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. உலகின் புகழ் பெற்ற நகரங்களில் லண்டனுக்கு தனிச்சிறப்பு உண்டு. அருங்காட்சியகங்கள், நினைவாலயங்கள், பூங்காக்கள், கட்டிடங்கள் என சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும், அற்புதங்கள் நிறைந்த லண்டன் நகரத்தை பற்றி பார்ப்போம்..! பாரம்பரியமான…
மாசிடோனியாவுடனான தனது வடக்கு எல்லையில் அமைந்துள்ள தற்காலிக ஐடோமெனி முகாமில் தஞ்சம் அடைந்துள்ள ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கிரீஸ் துவங்கியுள்ளது. அதிகாலை பொழுதில் ஆரம்பித்த இந்த நடவடிக்கையைக் கண்ட சாட்சிகள், முகாமில் குடியமர்ந்தவர்களை வேறு சிறந்த வசதியிடங்களுக்கு மாற்றிட போலீஸ்…
அரசியல் நோக்கத்துக்காகவும் வெறுப்புணர்வு காரணமாகவும் செய்யப்படும் கொலைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருப்பதாக ஜெர்மன் அரசு தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு சுமார் 11 லட்சம் பேர் ஜெர்மனியில் தஞ்சம் அடைந்தனர். மற்ற ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் அதிகமானவர்கள் ஜெர்மனியில் தஞ்சமடைந்த…
துருக்கியின் அதிபராக இருக்கின்ற ரஜெப் தையிப் எர்துவானின் நெருங்கிய ஆதரவாளர் ஆளும் ஏ.கே கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பினாலி இல்டிரிம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அவர் பிரதமராக நியமிக்கப்படும் வாய்ப்பை வழங்கியுள்ளது. துருக்கியின் அரசியல் சாசனத்தை மாற்றி அதிபருக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதே…
கேப் கனவரல்:பூமி, செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்கள், வானில் ஒரே நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு, நாளை ஞாயிறு(22-05-16) காலையில் நிகழவுள்ளது.தற்போது பூமியில் இருந்து 4.8 கோடி மைல் தொலைவிலுள்ள செவ்வாய் கிரகம், இந்த நிகழ்வின்போது சுமார் 4.6 கோடி மைல்…
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை வெளியே துப்பாக்கி வைத்திருந்த நபரை ரகசிய போலீஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். வெள்ளை மாளிகை அருகே பாதுகாப்பு சோதனையின் போது, அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்து காட்டியதால், வயிற்றுப் பகுதியில் சுட்டதாக ஏ.பி.சி…
இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக, 130-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்று கூறப்படுகிறது. கடந்து சில நாட்களாக அடாது பெய்து வரும்…
ஒரு காலத்தில் உலக ஸ்மார்ட்போன் சந்தையில் தவிர்க்க முடியாத இடத்தில் இருந்த நோக்கியா நிறுவனம், மைக்ரோசாப்ட் வசம் கை மாறியதும் நோக்கியாவின் தாக்கம் குறைவாக இருந்தது. எனினும் நோக்கியா நலம் விரும்பிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக அந்நிறுவனம் மீண்டும் சந்தையில் வர இருக்கும்…
நடுவானில் காணாமல்போன ஈஜிப்ட்ஏர் எம்எஸ்804 விமானத்தின் சிதிலங்கள் கிரேக்கத் தீவான கர்பெதஸின் தென் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என எகிப்திய விமானத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். பாரிஸிலிருந்து 66 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் கெய்ரோவுக்கு சென்றுகொண்டிருந்த அந்த விமானம் புதன்கிழமை நள்ளிரவு காணாமல் சென்றது.…
ஒரு பில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய சொகுசு கப்பல் இங்கிலாந்தில் இருந்து தனது பயணத்தை தொடர இருக்கிறது.அமெரிக்க தொழிலதிபருக்கு சொந்தமான Harmony Of The Seas என்ற பெயரிடப்பட்ட இந்த கப்பல் தான் தற்போது உலகின் மிகப்பெரிய சொகுசு…
இலங்கையில் தொடரும் நிலச்சரிவுகளில், கேகாலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் நடைபெற்ற மற்றுமோர் சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 14 பேர் காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவத்தில் 16 பேர் காணாமல் போயுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இருவர்…
அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் மருத்துமனை மருத்துவர்கள், அமெரிக்காவின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். இது அறுவை சிகிச்சை வரலாற்றில் ஒரு மைல் கல் என்று அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர். ஆணுறுப்பு தொடர்பான புற்று நோயால் பாதிப்படைந்த 64…
இத்தாலியில் தம்பதிகள் மேலதிகக் குழந்தைகளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் புதிய திட்டம் ஒன்றை இத்தாலிய சுகாதார அமைச்சர் பீட்ரிஸ் லோரென்ஸின் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி தற்போது குழந்தைகளின் பராமரிப்புக்காக மாதந்தோறும் அரசாங்கம் கொடுக்கும் நிதியுதவியை இரட்டிப்பாக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் மகப்பேற்று விகிதம் தற்போதுள்ள…
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதி களுக்கு எதிரான போரில் ஈடுபட கூடுதல் படைகளை அமெரிக்கா அனுப்ப உள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று ஜெர்மனியின் ஹனோவர் நகரில் அந்த நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்துப் பேசினார். அங்கு அவர் நிருபர்களிடம்…
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் காரோர் லால் எசான் பகுதியைச் சேர்ந்த உமர் ஹயாத் என்பவரின் பேரன் பிறந்த நாள் விழா கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இதற்காக அங்குள்ள ஒரு பேக்கரியில் அவர் இனிப்புகளை வாங்கினார். அந்த இனிப்புகளை சாப்பிட்ட 25…
சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தென்சீனக் கடலில் ஜப்பானின் போர்க்கப்பல் நங்கூர மிட்டுள்ளது. தென்சீனக் கடல் பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தால் சீனாவுக்கும் ஜப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூணே, தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே மோதல்…
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…