JoomlaLock.com All4Share.net

Background Video

ஜெருசலேம் நகரத்தில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் புனித தலங்கள் உள்ளன. கிழக்கு ஜெருசலேம் நகரை தங்களது எதிர்கால தலைநகராக பாலஸ்தீனர்கள் உரிமை கோரி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அதிரடியாக ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக…
உலகம் முழுவதும் போலி மருந்துகள் விற்பனை அதிகரித்து இருப்பதாக சர்வதேச சுகாதார நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.அதாவது உலகில் விற்கப்படும் மருந்துகளில் 10 சதவீதம் போலியானது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி என்ற பெயரில் அதிக அளவில் போலி மருந்துகளை விற்பதாகவும், உலகில்…
இனி அரசு தொலைக்காட்சி வானொலி உள்ளிட்ட ஊடகங்களின் செய்திகள் தணிக்கை செய்யப்பட மாட்டாது என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசின் தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட அனைத்து ஊடகங்களில் தற்போது செய்திகள் தணிக்கைக்கு பிறகே ஒளிபரப்பபடுவது தெரிந்ததே. பாகிஸ்தானில் கடந்த 17…
வெள்ளத்தால் பாதிப்பு அடைந்துள்ள கேரள மக்களுக்கு சர்வதேச சமுதாயம் துணையாக நின்று தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ''கனமழை காரணமாக கேரளா மாநிலம் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. மழையில்…
ஐக்கிய நாடுள் சபையின் முன்னாள் பொது செயலர் கோபி அன்னன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.கானாவின் குமசி என்ற இடத்தில் 1938 ம் ஆண்டு பிறந்தவர் கோபி அன்னன். அவரது முழுப்பெயர் கோபி அட்டா அன்னன். 1996ல் ஐக்கிய நாடுகள்…
பாகிஸ்தானில் கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க போதுமான இடங்களை அந்தக் கட்சியால் பெற முடியவில்லை. இந்த…
இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவில் 10ஏ தேசிய நெடுஞ்சாலையில் மொராண்டி என்னும் 200 மீட்டர் நீள பாலம் உள்ளது. இதன் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து, 100 அடி கீழே இருந்த புறநகர் ரெயில் பாதை மீது விழுந்தது. இந்த…
இந்தோனேஷியாவின் லோம்போக் மற்றும் பாலி தீவுகளில் நேற்று இரவு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகி உள்ளது.இந்த நிலநடுக்கத்தில் சிக்கி நேற்று 80 பேர் பலியாகி நிலையில், இன்று மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.…
வெனிசுலா நாடு அதிக எண்ணெய் வளம் நிறைந்தது. இங்கு எண்ணெய் உற்பத்தியால் அதன் பொருளாதாரம் உயர்ந்து இருந்தது. அதிபர் பதவியில் இருந்த ஹியுகோ சாவேஸ் கடந்த 2013ம் ஆண்டு மறைந்த பின்னர் அவரது அரசியல் வாரிசான நிகோலஸ் மெஜுரோ (வயது 55)…
வியட்நாமில் கட்டப்பட்டு இருக்கும் ''காவ் வாங்க் கோல்டன்'' பாலம் தற்போது உலகம் முழுக்க வைரலாகி இருக்கிறது. இந்த பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகி இருந்தாலும் தற்போது இந்த பாலம் வைரலாக முக்கிய காரணம் இருக்கிறது. இந்த பாலத்தை தாங்கி பிடிப்பது…
இந்தோனேஷியாவின் லோம்பாக் தீவுப்பகுதியில், பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியிருந்தது. முக்கிய சுற்றுலாத்தலமான லோம்பாக் தீவுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்பு இருக்கும் என்று…
கடுமையான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், உறுப்பு நாடுகள் தாங்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை உடனே அனுப்பி வைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தலைவர், அன்டோனியோ குட்டெரஸ் கடிதம் எழுதி உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. உறுப்பு…
 நடந்து முடிந்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலில், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி(பிடிஐ) அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சி தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி…
பாகிஸ்தானில் இன்று(25-07-2018) பொதுத் தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணி முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். தேர்தல் களத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் -ன் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர்…
சிரியாவில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலைப்படை தாக்குதலில் 220க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சிரியாவின் ஸ்விடா மாகாணத்தின் தெற்கு பகுதியில், நேற்று 3 பயங்கரவாதிகள் தொடர் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர். இதில் 38 பேர் பலியாகினர். இந்நிலையில், ஸ்விடாவின் வடக்கு மற்றும்…
கிரீஸ் நாட்டில் எற்பட்ட பயங்கர காட்டுத் தீ விபத்தில் 24 பேர் மரணம் அடைந்துள்ளனர். கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்சில் இரு இடங்களில் நேற்று கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அது மேலும் பரவி வருகிறது. இன்று அதிகாலை வரை அந்தத்…
பக்கம் 6 / 82
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…