JoomlaLock.com All4Share.net

Background Video

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2018 00:00

கள்ளழகர் இன்று மாலை புறப்பாடு Featured

Written by 
Rate this item
(0 votes)

மதுரை வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்துசுந்தரராஜப் பெருமாள், இன்று மாலை, 4:45 மணிக்கு புறப்படுகிறார். நாளை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடக்கிறது.

மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கவும், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஏற்றுக் கொள்ளவும் சித்ரா பவுர்ணமியன்று மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவார்.நாளை எதிர்சேவை : இதற்காக, அழகர்கோவில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து, இன்று மாலை, 4:45 மணிக்கு மேல், மாலை, 5:15 மணிக்குள் சுந்தரராஜப் பெருமாள், மதுரைக்கு தங்கப்பல்லக்கில் புறப்படுகிறார்.

பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி பகுதிகளில் உள்ள திருக்கண்களில் காட்சி தருவார். மூன்று மாவடியில் நாளை காலை, 6:00 மணிக்கு எதிர்சேவை நடக்கிறது.

மதுரை அவுட்போஸ்ட் அம்பலகாரர் மண்டபத்திற்கு மாலை, 5:20 மணிக்கு வருகிறார். மாநகராட்சி அலுவலகத்தில் வாண வேடிக்கை நடக்கிறது.வைகையில் கள்ளழகர் : தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் நாளை இரவு, 9:30 மணிக்கு எழுந்தருளும் கள்ளழகர், இரவு, 12:00 மணிக்கு வைகை நோக்கி புறப்படுகிறார்.

தல்லாகுளம் கருப்பணசுவாமி கோவிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருள்கிறார்.பின், தங்கக்குதிரை வாகனத்தில், நாளை மறுநாள் காலை, 5:45 - 6:15 மணிக்குள் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.

Read 134 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…